Aran Sei

இன ஒடுக்குமுறை கணக்கெடுப்பு : 3 வருடங்களாக ரகசியம் காக்கும் அமெரிக்க பாதுகாப்புத் துறை

மெரிக்க ராணுவத்தின சார்ஜெண்ட் மேஜர் தஸ்’சரா சேம்ப், இன ஒடுக்குமுறை கணக்கெடுப்பு தரவு குறித்துக் கேட்ட கேள்விக்கான பதில், அமெரிக்க பாதுகாப்பு துறையின் ஏதோவொரு அலுவலகத்தில் கிடக்கிறது என்பது அவருக்கு தெரியவில்லை. உண்மையில்,அவர் உட்பட, நிறைய பேருக்கு அது தெரியாது.

“இராணுவத்தில் இருக்கும் இன ஒடுக்குமுறை குறித்து எதாவது கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதா?” என ஆஃப்ரிக்க அமெரிக்கரான சேம்ப், செப்டம்பர் 24 அன்று பெண்டகன் ( அமெரிக்க பாதுகாப்பு துறை தலைமையகம்) டவுன் ஹால் கூட்டத்தில் ஓடிய ஒரு வீடியோவில் கேட்டார். 

மனித உரிமையா? மோடியா? என்றால், இரண்டாவதே அமெரிக்காவின் விருப்பம் – ஷாகிர் மிர்

கேள்வியின் மறுமுனையில் அமெரிக்க இராணுவத்தின் மூத்த தலைவர்கள் இருந்தனர் : அப்போதைய பாதுகாப்புச் செயலாளரான மார்க் எஸ்பெர், ராணுவ ஜெனரல் மார்க் மில்லி, மில்லியின் மூத்த ஆலோசகரும், ஊழியர்களின் தலைவருமான ரமோன் காலன் – லோபெஸ் ஆகியோரும் இருந்தனர். 

அமெரிக்காவின் மிகப் பெரிய நிறுவனமான இராணுவத்தில் இருக்கும் இன ஒடுக்குமுறை பிரச்சினைகளை தீர்க்க, 2020ல் ,இது போன்ற இணையவழி கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அமெரிக்க இராணுவத்தில் கீழ் நிலைகளில் வேறுபட்ட இனத்தினர் இருந்தாலுமே, மேல் நிலை அதிகாரிகள் பெரும்பாலும் வெள்ளையர்களாகவும் ஆண்களாகவும் இருக்கின்றனர். 

மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்காவிடம் உலக நாடுகள் சராமாரி கேள்வி

பாதுகாப்புத் துறை ஒடுக்குமுறை குறித்து விரிவான கணக்கெடுப்புகள் நடத்துகின்றன என்பது மட்டுமல்ல அப்படி கணக்கெடுப்புகள் நடத்தப்பட வேண்டியது 1990களில் கட்டாயப்படுத்தப்பட்டது என்பது (சேம்பிற்கு மறைமுகமாக பதிலளித்த) காலன்- லொபெஸுக்கு தெரியவில்லை. இதைப் போன்ற கணக்கெடுப்புகள் கடைசியாக 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. 

2017 கணக்கெடுப்பின் விவரங்களை வெளியிட வேண்டும் என ராய்டர்ஸ் செய்தி அமைப்பு கேட்டுக் கொண்ட போது, பாதுகாப்புத்துறை மறுத்துக் கொண்டே இருந்தது. தகவலறியும் சுதந்திர சட்டம் ஒன்றின் கீழ் கோரிக்கை வைக்கப்பட்ட பிறகும் கூட கணக்கெடுப்பின் கண்டுபிடிப்புகள் வெளியிடப்படவில்லை. 

‘இனி அமெரிக்காவைச் சார்ந்துதான் இந்திய ராணுவம்’ – இடதுசாரிகள் எச்சரிக்கை

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியும், அமெரிக்க பாதுகாப்பு துறையில் இருக்கும் ஆஃப்ரிக்க-அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினருமான, மேரிலேண்ட் பிரதிநிதி ஆந்தோனி ப்ரவுன், இந்த கணக்கெடுப்புகள் வெளியிடப்படாதது ஏதோ சிக்கல் இருப்பதை குறிக்கிறது என்றார். 

 “இது மிகவும் வேதனையளிப்பதாக இருக்கிறது” என்ற ப்ரவுன், இன ஒடுக்குமுறை கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை நாடாளுமன்றம் தெளிவாக விவரித்துள்ளதாகவும், இது குறித்து தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை இருக்கிறது என்றும் கூறினார். 

இந்த கட்டுரைக்காக பேட்டி கேட்ட போது, சேம்ப் பேட்டி அளிக்க மறுத்தார். காலன் – லொபெஸிடம் பேட்டி கேட்டதற்கு, அவர் பதிலளிக்கவில்லை. தகவல் சுதந்திர சட்டத்தின் கீழ் ராய்டர்ஸ் வைத்த கோரிக்கையை நிராகரித்த அமெரிக்க பாதுகாப்பு துறை, கணக்கெடுப்பில் “ கண்டுபிடிக்கப்பட்ட தகவல், ஆட்கள் திட்டமிட்டு பேசி தெரிவித்ததாக உள்ளது” என்றது. 

அமெரிக்காவில் கருப்பினத்தவர் சுட்டுக்கொலை – பற்றி எரியும் ஃபிலடெல்ஃபியா

இந்த கணக்கெடுப்பு வெளியிடப்பட்டால், அது அரசின் செயல்பாட்டில், திட்டமிடலில் இடையூறாக இருக்கும் என அமெரிக்க பாதுகாப்பு துறையின் தலைமையகமான பெண்டகான் தெரிவித்தது. 

ஆனால், இந்த கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல் மூன்றாண்டுகள் பழையது என்பதால், அமெரிக்க நிதியாண்டு 2020-2021, செப்டம்பர் 2021-ல் முடிவதற்கு முன் புதிதாக ஒரு கணக்கெடுப்பை நடத்த வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்க பாதுகாப்பு துறை உள்ளது. 

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் செய்தி தொடர்பாளர்,  2017 ஆம் ஆண்டின் இன ஒடுக்குமுறை கணக்கெடுப்புக் குறித்த அறிக்கை ஏறத்தாழ முடிவிற்கு வந்துவிட்டது, வருகின்ற வாரங்களில் நாடாளுமன்றத்தில் அது சமர்ப்பிக்கப்படும் என்றார். ஆனால், கணக்கெடுப்பு சமர்பிக்கப்பட ஏன் இத்தனை ஆண்டு கால தாமதம் ஆனது என்று அவர் விளக்கவில்லை. 

ப்ரொடெக்ட் அவர் டிஃபெண்டர்ஸ் ( Protect Our Defenders)  எனும் உரிமைக்குழுவை நடத்தும் ஓய்வு பெற்ற விமானப்படை முதன்மை வழக்கறிஞர் டான் க்ரிஸ்டென்சென், பெண்டகன், குறிப்பிட்ட கணக்கெடுப்பின் விவரங்களை மாதக்கணக்காக வெளியிடாததது சந்தேகத்திற்குரியது என்றார். 

அமெரிக்காவிலிருந்து இந்தியா வரை – மக்களாட்சிக்கு வாசிக்கப்படும் மரண சாசனம்.

 “ நாம் கேட்கும் தகவலை வெளியிட்டால் அவர்கள் மோசமானவர்களாக தெரிவார்கள் என்பது தான் இதற்கு அர்த்தம். ஒரு வேளை அவர்கள் நல்லவர்களாக தெரிவார்கள் என்றால் அந்தத் தகவலை வெளியிட தயங்க மாட்டார்கள்” என டான் க்ரிஸ்டென்ஸென் தெரிவித்தார். இவருடைய ஆய்வுப்பணி, ராணுவத்தில் உள்ள இனப்பாகுபாட்டை அம்பலப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

குடிமக்கள் பாதுகாப்புத்துறை ஊழியர்களைவிட, இராணுவத்தில் வேலை செய்பவர்கள் குறைந்த அளவில் தான் இன ஒடுக்குமுறை நடவடிக்கைகள் குறித்து புகார்கள் அளிக்கிறார்கள் என ஒரு ராய்டர்ஸ் நிறுவனத்தின் புலனாய்வு தெரிவித்துள்ளது. ஒடுக்குமுறை குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பெரும்பாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை எனவும், சில சமயங்களில் புகார் அளித்திருப்பவரே பாதிக்கப்படும் சூழலும் உருவாகும் என்று அமெரிக்க இராணுவத்தில் வேலை செய்தவர்கள், செய்பவர்கள் தெரிவிக்கின்றனர். 

கார்ப்பரேட் கையில் சந்தை – காலனியச் சூழலை உருவாக்கும்

பெண்டகனில்,  ‘பணியில் இருக்கும் ஊழியர்களுக்கான சம வாய்ப்பு கணக்கெடுப்பு’ இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடத்தப்படுகிறது. 2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், 16% இராணுவப்படை உறுப்பினர்கள் தங்கள் இனம் மற்றும் பாரம்பரியம் காரணமாக துன்புறுத்தலுக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளானது தெரிய வந்துள்ளது. 

அமெரிக்க அதிபராகத் தேர்வாகியிருக்கும் ஜோ பைடன் பெண்டகனில் பல்வேறுஇன/ கலாச்சார பின்புலங்களை சேர்ந்தவர்கள் இருக்கவேண்டியதன் அவசியத்தை குறித்து பேசி, பாதுகாப்பு துறைக்கு தலைவராக ஓய்வு பெற்ற இராணுவ ஜெனரல் லாய்டு ஆஸ்டினை நியமிக்கவிருப்பதாகக் கூறினார். நாடாளுமன்றம் அனுமதித்து, ஆஸ்டின் பாதுகாப்புத் துறைக்கு தலைவராக்கப்பட்டால், அவர்தான் அமெரிக்க பாதுகாப்பு துறைக்கு தலைவராகவும் முதல் ஆஃப்ரிக்க-அமெரிக்கர் ஆவார். 

“நம்முடைய படைகளில் 40% மேல் வெள்ளையர்-அல்லாதவர் தான் இருக்கின்றனர். அது போல தலைமையிடங்களிலும் வெள்ளையர்கள்-அல்லாதவர்கள் இருக்க வேண்டும், இது பல வருடங்களுக்கு முன்னரே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்” என்றார். 

கம்யூனிஸ்ட்களுக்கு தடை – ‘அமெரிக்கா இதைச் செய்யாமல் இருந்தால் தான் ஆச்சர்யம்’

மேரிலேண்ட் பிரதிநிதி ப்ரவுன், பைடனின் தேர்வுக்கு முற்றிலுமாக ஆதரவளிக்கிறார். பெண்டகானில் வேறுபட்ட கலாச்சார பின்புலங்களை கொண்ட மக்கள் இருக்க வேண்டும் என்பதற்கு லாய்டு முக்கியத்துவம் கொடுப்பார் என நாடாளுமன்றத்திலும், பொதுமக்களிடமும் கூறியுள்ளார்.

 “கடந்த காலத்தில் எப்போதும் இருந்ததை விட அதிகளவு வெளிப்படைத்தன்மை இனி இருக்கும்” என ப்ரவுன் கூறினார். 

( தி வயர் தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்) 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்