Aran Sei

‘டாக்டர் அம்பேத்கரின் மதமாற்றம் உலக மக்களின் சிந்தனையை தூண்டும்’ – அறிஞர் அண்ணா

ந்து மதத்தைவிட்டு உளம் வெந்து கூட்டம் கூட்டமாக வெளியேறுகிற மக்களை, தனது அரவணைப்புக் குள் அன்புடன் தழுவிக் கொள்ளும் பணியினை, இப்போது புத்தநெறி ஆற்றி இருக்கிறது.

ஒரே இடத்தில், ஒரே நாளில், ஆடவரும் பெண்டிரும் சிறார்களுமாகச் சேர்ந்து மூன்று இலட்சம் மக்கள், ஒரு மதத்தைவிட்டு வேறொரு மதம் புகுந்த சம்பவம், அதிலும் இந்துமதத்தைவிட்டுப் புத்தமதம் தழுவிய செய்தி, இதுவரை வரலாற்றில் இடம்பெற்றிருக்கவில்லை. இம்மத மாற்றச் செய்தியைச் சித்தரித்துள்ள ஒரு நிருபர், “உலகில் வேறு எங்கும் நடைபெறாத இந்தச் சம்பவம் நடைபெற்றது”. எனக் குறிப்பிட்டுள்ளார்

மூன்று லட்சம் மக்கள் கூடியிருந்த காட்சியையும், அந்த இடத்தின் பரப்பையும், அதே நிருபர், “நகருக்கு வெளியே 10 இலட்சம் சதுர அடி விஸ்தீரணமுள்ள மைதானம்” என்றும், “மைதானம் முழுதும் ஒரே ஜனசமுத்திர மாகக் காணப்பட்டது” என்றும் வரைந்துள்ளார்.

நல்ல இஸ்லாமியர், கெட்ட இஸ்லாமியர் – அக்பரை முன்வைத்து வலதுசாரிகள் கட்டமைக்கும் கருத்தியல்

இந்துமதத்தைவிட்டு வெளியேறும் திருப்பணி இன்று நேற்று ஏற்பட்டதன்று. இவ்வெளியேற்றம் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.

இருந்தாலும், மூன்று இலட்சம் மக்கள் ஒரே நாளில் ஒரே இடத்தில் கூடி, இந்துமதத்திலிருந்து நீங்கிப் புத்தமதம் புகுந்திருப்பது, இந்துமதப் பாதுகாப்பாளர்களுக்கு பேரதிர்ச்சி தரும் சம்பவமாகும்.

இதற்குமுன் மதம்மாறி இருப்பவர்கள், பொன்னாசைக்கும் பொருளாசைக்கும் பலியாகியும்; அந்தஸ்துக்கும் அதிகாரத்திற்கும் அடிமையாகியும், மதம் மாறி இருப்பவர்களாகும் எனக்கூறுவது மிகைபடக் கூறியதாகாது.

ஆனால்,மூன்று இலட்சம் மக்களுடன் இன்று புத்த நெறியில் புகுந்துள்ள டாக்டர் அம்பேத்காரின் மதம் மாற்றச் செய்தி, அப்பட்டியலில் சேர்த்து எண்ணத்தக்கதன்று.

‘சுற்றுச்சூழல் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய மாசுக் கட்டுப்பாடு வாரிய உத்தரவு’ – பூவுலகின் நண்பர்கள்

டாக்டர் அம்பேத்கார் இந்துமதத்தின் உள்ளடக்கத்தை நன்கு சுற்றிருப்பவர்: அவர் கற்காத இந்துமதத் தொடர் புடைய வடமொழி வேதாகம நூற்கள் இல்லை என்றே சொல்லலாம்.

இந்திய அரசியல் சட்டங்களை உருவாக்கக்கூடிய அளவிற்குச் சட்டநூல் பயிற்சி பெற்றிருப்பவர்.

அத்தகைய ஒரு பேராசிரியர் இந்து மதத்தை உதறித் தள்ளிவிட்டு, மூன்று இலட்சம் மக்களுடன் புத்தநெறியை மேற் கொண்டார் என்பது சாதாரணமானவர்கள் இந்து மதத்தை வெறுத்து ஒதுக்கிவிட்ட சம்பவம்போல் கருதக் கூடியது அல்ல.

புத்தநெறி தழுவிய டாக்டர் அம்பேத்கார்.

“பிரம்மா, விஷ்ணு, மகேஷ், கபாலி, கணபதி மற்றும் இந்துமத தெய்வங்களைக் கடவுள்களாகக் கருதமாட்டேன். கடவுள் அவதாரத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. எந்தவிதச் சடங்கிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. புத்தனை விஷ்ணு அவதாரமாக நம்பவில்லை. சடங்குகள் செய்விக்கப் பார்ப்பனர்களை அழைக்கமாட்டேன். தீண்டாமையை அனுஷ்டிக்கமாட்டேன். எல்லா மனிதர்களையும் சமமாகக் கருதுவேன். பஞ்சசீலக் கொள்கையை அனுஷ்டிப்பேன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டு இருக்கிறார்.

அந்த உறுதிமொழியே இந்து மதத்தின் உட்பொருளை யும், புத்தநெறியின் கோட்பாடுகளையும் தெளிவுபடுத்து வதாக அமைந்திருக்கிறது.

அமித்ஷா கூறும் நாட்டுப்பற்றும் முன்னேற்றமும் – ஹிட்லரை நினைவு படுத்துகிறதா?

இம்மதமாற்றச் சேதி, இந்துமதக் காப்பாளர்களிடம் என்றும்போல் சிந்தனையைத் தூண்டத் தவறிவிட்டது. வழக்கமாக அவர்களுக்கு ஏற்படுகிற எரிச்சல், இச்சேதி கேட்டு ஏற்பட்டு இருக்கிறது.

காங்கிரஸ் ஆளவந்தார்களும், இம்மதமாற்றத்தை வழக்கம்போல் நையாண்டி செய்வதிலும், இம்மதமாற்றத்தின் நடுநாயகமாக இருக்கும் டாக்டரைத் தூற்றுவதிலும் மனச்சாந்தி தேடிக்கொள்ள முன்வந்திருக்கின்றனர்.

இப்பெரும் வரலாற்றுச் சம்பவத்தை, மிகமிகச் சாதாரண சம்பவம்போல் நாட்டு மக்களுக்கு அறிவிக்கும் பாணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஏர் இந்தியா – வரலாறும் செயல்பாடுகளும்

இதனை, சிறிய சம்பவமெனக் காட்ட அவர்கள் எவ்வளவுதான் முயன்றபோதிலும், அவர்களுக்கு ஏமாற்றமே கிடைக்கும்.

அவர்கள் இயல்பு அது; அதை மாற்ற எவரால் முடியும்? சிறுத்தைத் தன் புள்ளிகளை மாற்றிக் கொள்ள ஒப்புமா?

இவர்கள் வாயுரையைக் கேட்டா உலக மக்கள், இம்மத மாற்றத்திற்குத் தரப்படவேண்டிய மதிப்பின் அளவைத் தீர்மானித்துக் கொள்ளப் போகிறார்கள்? ஒருக்காலுமில்லை.

டாக்டர் அம்பேத்காரின் மதமாற்றச் சம்பவம், உலக மக்களின் சிந்தனையைத் தூண்டத் தவறி விடாது.

மூன்று இலட்சம் மக்களை உடனழைத்துக் கொண்டு டாக்டர் அம்பேத்கார் ஏன் இந்துமத்தை விட்டு வெளியேறத் துணிந்தார் என்ற கேள்வியை, பல்வேறு நாடுகளிலுமுள்ள அறிஞர் பெருமக்கள் தங்களுக்குத் தாங்களே கேட்டுக் கொள்ளத்தான் போகின்றனர்.

ஆட்கொல்லி புலியும் அரசு செய்ய வேண்டியவையும் – சந்துரு மாயவன்

சட்டப்படி தீண்டாமை இந்தியத் கண்டத்தில் ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற விதியைக் கொண்டுள்ள இந்திய அரசியல் சட்டம் அதற்குரிய விடையைத் தராது.

இந்தியத்துணைக் கண்டத்தில் மதமாற்றத்திற்காக வெளிநாட்டினர் ஒன்பது கோடி ரூபாயைச் செலவிடுகின்றனர் என நியோகியின் நியாயத்தை எடுத்துக் காட்டி துணைக் காஞ்சி காமகோடி பீடத்தார் இந்துமதத்தை அழிக்க அந்நிய நாட்டினர் இவ்வளவு பெருந்தொகையைச் விட்டுள்ளனரே! எனப் பேசும் பேச்சு, மேற்குறிப்பிட்ட வினாவிற்குத் தக்கவிடையாக அமைய முடியாது.

உலக அமைதிக்குப் பாடுபடுவதாகக் கூறிவரும் நேருவின் நாட்டில், ஒரே நாளில் மூன்று இலட்சம் பேர் இந்து மதத்தைத் துறக்கும் அளவிற்கு, இன்னமும் தீண்டாமையின் கொடுமை இருந்து வருகிறது என்றுதான், உலக மக்கள் முடிவு சுட்டுவர். அந்தக் கருத்தை மாற்ற நேருவின் பஞ்சசீலப் பேச்சும், இந்திய அரசியல் சட்ட சமரசப் பூச்சும், தேசீய ஏடுகளின் தூற்றல் கணைகளும், பயனற்றவைகளாகும்.

கிறித்துவ வன்னியர்களின் உரிமைக்கு எதிரான படமா ருத்ர தாண்டவம்? – சந்துரு மாயவன்

இந்துமதத்தை விட்டு மக்கள் ஏன் கூட்டம் கூட்டமாக இப்பொழுதும் வெளியேறி வருகிறார்கள் என்பதற்கான மூலகாரணத்தைத் தேடிக் கண்டறிந்து, அதைக் களைந்தெறிய வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் ஆளவந்தார்களுக்குக் குறைவாக இருக்கலாம்; அப்பணி தங்கள் பொறுப்பு அல்ல என்றுகூட அவர்கள் கருதலாம்.

Photo credit: chindhanai

ஆனால், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியாரின் நிலை அதுவாக இருக்க முடியாது.

தனது மதிப்புக்கும், வருவாய்க்கும் இந்துமத்தை மட்டுமே நம்பி உயிர்வாழ்ந்து உயர்நிலையில் வீற்றிருப்பவராவர், சங்கராச்சாரியார்.

எப்பொழுதும்போல், சரிந்துவரும் தனது மதிப்பையும். குறைந்துவரும் தனது வருவாயையும், இருக்கும் நிலை யளவாவது பாதுகாத்துக் கொள்ளும் போக்குடையதாகத் தான், சங்கராச்சாரியாரின் இப்பொழுதைய செய்தியும் அமைந்திருக்கின்றதேயல்லாது, இந்துமதத்தை மற்றவர்கள் விரும்பி ஏற்கும் வகையில் இல்லையானாலும், இருக்கிறவர் களாவது தாங்கள் இறக்கும்வரை அதிலேயே ஒட்டிக் கொண்டு இருக்கும் வகையில், அதைப் புனிதமுடைய தாக ஆக்கும் விருப்புக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

9 கோடி ரூபாய், வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப் பட்டு இந்து மதத்திலிருப்போரைத் தங்கள் மதத்துக்கு மாற்றுவதற்குப் பயன்படுத்துகிறார்கள் என்று ஓலமிடும் சங்கராச்சாரியார், இதுவரை தாழ்த்தப்பட்ட மக்களை முன்னுக்குக் கொண்டுவர, கோடிக் கணக்கு இருக்கட்டும் – எத்தனை இலட்சம் எத்தனை ஆயிரம் செலவிட்டி ருக்கிறார்? புள்ளி விவரம் காட்ட முடியுமா? என்று கேட்கிறோம்.

அரேபியாவிலிருந்து இஸ்லாம் மார்க்கம்தான் இறக்குமதியாயிற்று, தவிர, இன்றுள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் அங்கிருந்து இங்கு வந்து குடியேறினவர்களன்று. என்றோ ஒரு நாள் இந்து மதத்திலிருந்தவர்கள் தான் இன்று அனைவரும். முஸ்லீம்களாக இருக்கிறவர்கள்.

அனல் மின் நிலையங்களால் ஏற்படும் பேரிழப்பு – C40 நகரங்கள் அமைப்பின் அறிக்கை

அன்றொரு காலத்தில் நூற்றுக்கணக்கில் இருந்து வந்த முஸ்லிம்கள், இன்று ஒன்பது கோடி என்ற கணக்கில் பெருகிவிட்டனர் என்பதற்குரிய நியாயமான காரணத்தை இந்துமதத்தில்தான் கண்டுபிடித்தாக வேண்டும்.

இதுபோலவே கிறிஸ்துவ மதம் இங்கு ஏன் – எப்படிப் பரவ முடிந்தது என்பதனை அம்பேத்காரின் மதமாற்றத்தை நையாண்டி செய்யும் போக்கினர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மூன்று இலட்சம் மக்களில் டாக்டர் அம்பேத்கார் மட்டும் அல்ல வேறு பல இலட்சக்கணக்கானவர்களும் வெளியேறிச் செல்லும் நிலை இருக்கத்தான் செய்கிறது.

வெறுப்புப் பிரச்சாரமும் இனப்படுகொலையும் – இனப்படுகொலை செய்தவர்களைக் காப்பாற்றுகிறதா ஃபேஸ்புக்?

தீண்டாமை, பாராமை, நெருங்காமை, பிறப்பினால் உயர்வு தாழ்வு போன்ற மிகமிகக் கொடிய தொத்துநோய்க் கிருமிகள் குடியேறியுள்ள மாளிகை, தங்கத்தால் ஆக்கப் பட்ட அரண்மனையாக இருந்தாலும், அங்கு டாக்டர் அம்பேத்கார் போன்றவர்கள் நீண்ட நாள் வாழ ஒப்ப ட்டார்கள்; வெளியேறித்தான் தீருவர்.

டாக்டர் அம்பேத்காரின் இந்த மதமாற்றம் நல்லறிவாளர்கள் உரியதாகும். அனைவருடைய பாராட்டுதலுக்கும்

சி.என்.அண்ணாதுரை, முன்னாள் முதலமைச்சர், தமிழ்நாடு. (செய்தி – 21-10-56 – திராவிட நாடு)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்