Aran Sei

அனல் மின் நிலையங்களால் ஏற்படும் பேரிழப்பு – C40 நகரங்கள் அமைப்பின் அறிக்கை

னல்மின் நிலையங்களை மூடுவது உயிரிழப்புகளைத் தடுத்தல், செலவினங்களைக் குறைத்தல் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் எவ்வாறு பயனளிக்கும் என்பதை C40 நகரங்கள் அமைப்பின் புதிய ஆராய்ச்சி வெளிகொணர்ந்துள்ளது. அனல்மின் நிலையங்களால் ஏற்படும் காற்று மாசு சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களின் சுகாதாரத்தில் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கி வருவதாக C40 நகரங்கள் அமைப்பு வெளியிட்டுள்ள “Coal-free cities: the health and economic case for a clean energy revolution” அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு பாதுகாப்பு வழங்காத ஒன்றிய அரசு – உச்சநீதி மன்றத்தின் உத்தரவு என்ன ஆனது?

இந்தியாவில் அனல்மின் நிலைய உற்பத்தித் திறனை 64GW (ஜிகாவாட்டாக) விரிவாக்க இருக்கும் தற்போதைய திட்டங்களினால், சென்னையில் அனல்மின் நிலையங்கள் உண்டாக்கும் காற்றுமாசின் விளைவாக ஏற்படும் வருடாந்திர உயிர் இழப்புகள் தற்போதைய நிலையைவிட இருமடங்காக அதிகரிக்கும் என்றும், அடுத்த 10 ஆண்டுகளில், தங்கள் சாராசரி ஆயுட்காலத்திற்கு குறைவாக உயிரிழப்போர்களின் எண்ணிக்கை 6,510 ஆக இருக்கும் என C40 அறிக்கை கூறியுள்ளது.

பெரிய நகரங்கள் மற்றும் அரசுகள் அனல்மின் ஆற்றலுக்குப் பதிலாக புதுபிப்க்கத்தக்க ஆற்றலில் முதலீடு செய்வது வர்த்தக ரீதியிலும், தொழிலாளர் சுகாதாரத்திலும் நன்மை விளைவிக்கக்கூடியதாக இருக்கும். ஒருவேளை புதிய அனல்மின் திட்டங்களைச் செயல்படுதினால் உடல் நலக்குறைவால் எடுத்துக்கொள்ளப்படும் விடுப்பு நாட்கள் 2030-ஆம் ஆண்டில் சென்னையில் மட்டும் 22 லட்சம் நாட்களாக இருக்கும் என இந்த அறிக்கை எச்சரிக்கிறது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவது, சென்னையில் மலிவான விலையில் மின்சாரம் விநியோகம் செய்ய வழி வகுப்பதோடு மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் 2020-2030 ஆண்டு காலகட்டத்தில் 1,40,000 புதிய வேலைவாய்ப்புகளை மின்னுற்பத்தி, உபகரணங்களைப் பொருத்துதல் போன்ற துறைகளில் உருவாக்க முடியும்.

’வீட்டுக் காவலில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளேன்’ – ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

நிலக்கரியால் ஏற்படும் காற்று மாசுபாட்டின் காரணமாக பிற சிறு நகரங்களை விடவும் சென்னை நகர மக்களின் உடல்நலன் மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. இந்தியாவில் அனல் மின் நிலையத்தால் உற்பத்திச் செய்யப்படும் மின்உற்பத்தியில் 11% நகரங்களிருந்து 500 கிலோமீட்டர் சுற்றளவுக்குள்ளாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நிலக்கரியை எரித்து மின் உற்பத்தி செய்யப்படும் அனல்மின் நிலையத்திலிருந்து வெளியாகும் காற்று மாசுபாடு நீண்ட தொலைவுக்குப் பயணிக்கக் கூடியது என்பதாலும், அது ஏற்படுத்தும் தாக்கத்தின் காரணமாகவும் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. குறிப்பாக விளிம்புநிலையில் இருக்கும் குடிமக்களான இளைஞர்கள்,முதியவர்கள் மற்றும் கருவுற்ற பெண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

“சென்னையின் காற்று மாசுபாடு (pm 2.5யின் வருடாந்திர அளவு) உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலை விட நான்கு மடங்கும், தேசிய வழிகாட்டுதலைவிட சற்று அதிகமாகவும் உள்ளது. தேசிய அளவிலான தற்போதைய திட்டங்களின் படி 2020 – 2030 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டக் காலத்தில் அனல்மின் நிலையங்களை 20 விழுக்காடாக குறைக்காமல், இந்தியாவின் காலநிலை மற்றும் காற்றுத் தர இலக்குகளைப் புறந்தள்ளி 28% அதிகமாக விரிவாக்கம் செய்வது என்பது சென்னையில் நகர்ப்புற மக்களின் உடல்நலன் மற்றும் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தல் விளைவிக்கக்கூடியது. மேலும், தேசிய அளவிலான தற்போதைய திட்டங்களினால், சென்னை நகரத்தில் அனல்மின் நிலையத்தால் உண்டாகும் காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் வருடாந்திர அகால மரணங்களின் எண்ணிக்கையானது இரண்டு மடங்கிற்கும் அதிகமாகக்கூடும்” – முனைவர் ரேச்சல் ஹக்ஸ்லீ , சி 40 அமைப்பின் அறிவுசார் மற்றும் ஆய்வு பிரிவின் தலைவர் அனல்மின் நிலையங்களை அதன் காலக்கெடு முடிவதற்கு முன்பாகவே மூடுவதற்கும், அதன் பகுதியாக மாசுபாடற்ற ஆற்றல்களில் முதலீடு செய்வது குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் கருத்தில் கொள்ள வேண்டும்.

நீட்: தமிழ்நாடு குளவிக்கூட்டைக் கலைத்து விட்டதா? – உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மோகன் வி. கடார்கி

இதேவேளையில், புதிய அனல் மின்நிலையங்கள் கட்டப்படாமல் இருப்பதையும் காற்றின் தரம் மற்றும் காலநிலை கொள்கைளை உறுதிபடுத்தும் மைல்கல்லாக நிலை நாட்ட வேண்டும். இந்நிலையில், சி40 அமைப்பின் தற்போதைய ஆய்வு என்பது சென்னை சுற்றுவட்டாரப் பகுதியில் விரைவில் அனல்மின் நிலையத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திலிருந்து வெளியேற வேண்டியதன் அவசியத்தை தெள்ளத் தெளிவாக்கியுள்ளது:
காற்று மாசுபாட்டை குறைப்பதினால் மனித உயிரைக் காக்கலாம். சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூர் சுற்றி வரவுள்ள அனல்மின் நிலைய விரிவாக்கத்தின் காரணமாக அடுத்த பத்து ஆண்டுகளில் 52,700 பேர் சராசரி ஆயுட்காலத்தை விட முன்கூட்டியே இறக்க நேரிடும் என்றும் இதில் டெல்லி, மும்பை, பெங்களூரை காட்டிலும் சென்னையில் உயிர் இழப்புகள் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரிக்கும் எனவும். மேலும், 31,700 குறை பிரசவங்களும், பல்லாயிரம் பேருக்கு ஆஸ்துமாவினால் பாதிப்பு ஏற்பட்டு கூட்டம் கூட்டமாக மருத்துவமனைக்கு செல்வது போன்ற சம்பவங்கள் நிகழக்கூடும் என இந்த அறிக்கை எச்சரிக்கிறது. இது நோய்களின் விகிதத்தையும், கூடுதலாக 5700 குழந்தைகளுக்கு ஆஸ்துமாவையும் உண்டாக்கக்கூடும். அதுமட்டுமின்றி, அனல்மின் நிலைய விரிவாக்கத்தின் காரணமாக ஒட்டுமொத்தமாக 6820 பேர் ஆயுட்காலம் முழுதும் உடல்நலக் குறைபாட்டுடன் வாழ நேரிடும்.

பொருளாதார அடிபடையிலான பலன்கள். காற்று மாசுபாட்டின் காரணமாக தொழிலாளர் உற்பத்தித்திறன் குறைவு மற்றும் தொழிலாளர் விடுப்பு அதிகரித்தலின் காரணமாக நகர்ப்புற பொருளாதாரத்திலும் தாக்கம் ஏற்படுகிறது. மேலும், காற்று மாசுபாடு பொருளாதார இழப்பிற்கும், மருத்துவ செலவு அதிகரிப்பிற்கும் வழிவகுக்கிறது. இந்தியாவில் அதிக காற்று மாசுபாடு ஏற்படும் நாட்களில் தொழிலாளர் உற்பத்தித்திறன் 8 முதல்10% வரை குறையக்கூடுமென தொழில்முனைவோர்கள் கணித்துள்ளனர். இதே வேளையில், சி40 ஆய்வின் படி தற்போது முன்மொழியப்பட்டுள்ள அனல் மின் விரிவாக்கம் தொடருமானால் சென்னையைச் சுற்றியுள்ள அனல்மின் நிலையங்களினால் ஏற்படும் காற்று மாசுபாட்டின் விளைவாக ஏறத்தாழ 22 லட்சம் நாட்கள் பிணியின் காரணமாக எடுக்கும் விடுப்பு நாட்கள் ஏற்படும். மேலும், சென்னையில் நிலக்கரியினால் ஏற்படும் மாசுபாட்டோடு தொடர்புடைய பொருளாதாரம் உடல்நலன் சார் செலவினங்கள் 2020-2030 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 5.9 பில்லியன் அமெரிக்கா டாலர்களாக இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

‘அமேசான் நிறுவனம் குறித்த ஆர்.எஸ்.எஸ்-ன் கருத்து அர்த்தமற்றது’ – காங்கிரஸ் கட்சி கண்டனம்

வேலைவாய்ப்பை உருவாக்குகிறது. வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் பழைய மற்றும் அதிகம் பயன்தராத அனல்மின் நிலையங்களை மூடி அதற்கு மாற்றாக சூரிய ஒளி மற்றும் காற்றாலை ஆற்றல்களில் முதலீடு செய்து சென்னைக்கு மின்சாரம் வழங்குவதின் வாயிலாக 140,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம்.

நகர்ப்புற பகுதியில் வாழும் மக்களுக்குக் குறைந்தவிலையில் மின்சாரம் வழங்கலாம். காற்று மாசுபாட்டைக் குறைப்பது மட்டுமில்லாமல் நகர்ப்புற பகுதியில் வாழ் மக்களுக்குக் குறைந்தவிலையில் மின்சாரம் வழங்கலாம். இந்தியாவில் புதிய மற்றும் தற்போது இயங்கி வரும் அனல்மின் நிலையங்களை இயக்குவதை விட சூரிய ஒளி ஆற்றல் மலிவானதாகும். புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் முதலீடு செய்வதை விடுத்து புதிய அனல் மின் நிலையங்களைத் திறப்பதினால் வீட்டு சேமிப்பு , தொழில்களுக்கான செலவு மற்றும் முக்கிய மின் பயன்பாட்டு நிறுவனங்களுக்கு மின்சாரம் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை உண்டாக்கும்.

காலநிலை மாற்றத்தைச் சமாளித்தல்: இந்தியாவின் மொத்த வருடாந்திர பசுமை இல்ல (274MT CO2 ன் உமிழ்வு பாதுகாப்பு) வாயுக்களின் உமிழ்வை ஆண்டுக்கு 11% மாக குறைக்கலாம். இது 60 மில்லியன் வாகனங்கள் ஒரு ஆண்டிற்கு சாலையில் பயணிப்பதனால் ஏற்படும் உமிழ்வுக்கு ஈடானதாகும்.
“காற்று மாசை குறைக்க, மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்த, பாரிஸ் ஒப்பந்த்ததின் இலக்கை அடைய புதுபிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவது தான் ஒரே வழி” ஸ்ருதி நாராயணன், மண்டல இயக்குனர், தெற்கு மற்றும் மேற்கு ஆசியா. C40 நகரங்கள், அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழகம் மற்றும் க்ரியாவுடன் சேர்ந்து ஒவ்வொறு அனல்மின் நிலையத்திற்கும் தனித்தனியாக அது தொடங்கப்பட்ட நாள், தொழில்நுட்பம், அதலிருந்து ஈட்டப்படும் வருமானம், செயல்படும் மணி நேரம், மற்றும் நீரிலும் காற்றிலும் அனல்மின் நிலையங்கள் ஏற்படுத்தும் தாக்கம் முதலிய காரணிகளை வைத்து மாதிரியை உருவாக்கியுள்ளது. இம்மாதிரிகளின்படி 2021ஆம் ஆண்டில் நிலக்கரியின் பயன்பாடு இந்தியாவில் உச்சத்தை தொடும் மற்றும் 2021 முதல் 2030 ஆண்டின் இடைப்பட்ட காலத்தில், நிலைக்கரியின் பயன்பாடு 20% குறையும், 2045ஆம் ஆண்டில் அனைத்து அனல்மின் நிலையங்களின் காலக்கெடு முடிகிறது. சென்னையை சுற்றி இருக்கும் 33 பழைய மற்றும் அதிக அளவு மாசை விளைவிக்கும் அனல்மின் நிலையங்களின் (3. 8 GW), காலக்கெடு இன்னும் இரண்டு ஆண்டுகளில் முடிகிறது. அதனைத் தொடர்ந்து 40 (5.4 GW) அனல்மின் நிலையங்கள் காலக்கெடு 2030-லும், 2045-இல் மீதமுள்ள அனைத்தின் காலக்கெடுகளும் முடிகிறது.

வெறுப்புப் பிரச்சாரமும் இனப்படுகொலையும் – இனப்படுகொலை செய்தவர்களைக் காப்பாற்றுகிறதா ஃபேஸ்புக்?

“இந்தியாவில் அனல்மின் விரிவாக்கத் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். பழைய அனல்மின் நிலையங்களை மூடுவதற்கான இலக்குகளை தீர்மானித்துக் கொண்டிருக்கையில், மாநில மற்றும் தேசிய நிர்வாகிகள் புதிய அனல்மின் திட்டத்திற்கு நிதிகளை ஒதுக்கக்கூடாது” என்கிறார் C40 நகரங்களின் மூத்த ஆராய்ச்சி மேலாளர் மார்க்ஸ் பேரன்சன்.

இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் “ காற்று மாசுப்பாடும் காலநிலை மாற்றமும் ஒன்றுக்கொன்று பெரிதும் தொடர்புடைய, ஒன்றாக அணுகப்பட வேண்டிய பிரச்சனைகள் ஆகும். குறிப்பாக அதிக அளவிலான கார்பன் உமிழ்வுகள் வெளியேற முக்கிய காரணமாய் இருப்பது நிலக்கரி சார்ந்த துறைகளே ஆகும். தற்போது நாம் சந்தித்து வரும் 1°C உலக வெப்ப உயர்வில் நிலக்கரி 0.3°C அளவிற்கு பங்களித்துள்ளது. ஆனால், அரசு கொள்கைகளை வகுக்கும்பொழுது காலநிலை மாற்றமும் காற்று மாசுபாடும் தனித்தனியே கையாளப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும். காற்று மாசையும் காலநிலை மாற்றத்தையும் ஒரு சேர கட்டுப்படுத்த அனல் மின் நிலையங்களைப் படிப்படியாக மூடுவது என்ற கொள்கை நிலைப்பாட்டை அரசுகள் எடுக்க வேண்டும்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்