Aran Sei

காந்தியின் ஆலோசனையின்படி தான் சாவர்க்கர் கருணை மனு போட்டாரா? – உண்மை என்ன?

காத்மா காந்தியின் ஆலோசனையைப் பின்பற்றி இந்து மகா சபைத் தலைவர் விநாயக் தாமோதர் சாவர்க்கர். ஆங்கிலேய அரசுக்கு கருணை மனு தாக்கல் செய்தார் என்று கடந்த புதன்கிழமை (13/10/21) அன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். உதய் மஹூர்கர், சிராயு பண்டிட் ஆகியோரால் எழுதப்பட்ட ” Veer Savarkar: The Man Could Have Prevented Partition” என்ற நூல் வெளியீட்டு விழாவில் அவர் உரையாற்றினார்.

“சாவர்க்கரைப் பற்றி பொய்கள் பரப்பப்படுகின்றன,” என்று கூறிய சிங், “ஆங்கிலேய அரசிடம் அவர் கருணை மனு போட்டதாக அடிக்கடி கூறப்படுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால் அவர் தனது விடுதலைக்காக (சிறையிலிருந்து) கருணை மனு போடவில்லை. ஒரு சிறைவாசிக்கு கருணை மனு போட உரிமை உள்ளது. மகாத்மா காந்திதான் அவரிடம் கருணை மனு போடுமாறு கேட்டுக் கொண்டார். காந்தியின் ஆலோசனைக்குப் பிறகுதான் அவர் கருணை மனு போட்டார். மகாத்மா காந்தி அவரை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். நாம் அமைதியாக சுதந்திரத்திற்காகப்  போராடிக் கொண்டிருக்கும் போது, சாவர்க்கரும் அந்தப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்,” என்று காந்தி கூறியுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறியுள்ளார். சாவர்க்கர் கருணை மனு போட்டு, மன்னிப்பு வேண்டி கெஞ்சினார் என்பதெல்லாம் பொய்யானவை, அடிப்படை அற்றவை என்று அவர் கூறி அந்த உரையை முடித்தார்.

‘மக்கள் பட்டினியில் இருக்கும்போது 5 ட்ரில்லியன் டாலர் வருமானத்திற்கு கனவு காண்கிறார் மோடி’ – அகிலேஷ் யாதவ்

பாஜகவின் ஆதரவு இணையதளமான ‘சுவராஜ்யா’ சிங்கின் கூற்று உண்மைதான் எனக் கூறி ஒரு கட்டுரையை எழுதியுள்ளது. ” காங்கிரஸ் தலைவர்களும், மார்க்சிஸ்ட் வரலாற்றாளர்கள் உள்ளிட்ட இடதுசாரி செயற்பாட்டாளர்களும் பல பத்தாண்டுகளாக சாவர்க்கரின் பெருமையை கருணை மனு மூலம் மட்டுப்படுத்தும்,  சுதந்திரப் போராட்ட வீரர் என்ற நிலையை மறுத்து, அவருக்கு வரலாற்றில் உரிய இடத்தை அளிக்க மறுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதுடன், பாதுகாப்புத்துறை அமைச்சரின் கூற்றை பொய்யென கூறுகிறார்கள்,” என அந்த கட்டுரை கூறுகிறது.

சுவராஜ்யா, தனது கூற்றுக்கு ஆதரவாக விக்ரம் சம்பத்தின் புத்தகத்தை மேற்கோள் காட்டுகிறது. “… 1920 ல் காந்திஜி சாவர்க்கர் சகோதரர்கள் மனு போட வேண்டும் என்று கூறியதுடன், 1920 மே 26 ம் தேதி யங் இந்தியாவில் ஒரு கட்டுரை மூலம் அவர்கள் விடுதலைக்கான ஒரு வழக்கையும் செய்தார்,” என்கிறது சம்பத்தின் கீச்சகப்பதிவு. சம்பத்,  வி..டி. சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்.

1910, மார்ச்சு 13 ம்நாள் ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டு, 1911, ஜூலை 14 அன்று அந்தமானில் தனிமைப் சிறைக்கு அவர் கொண்டு வரப்பட்டார்.

அப்போதைய நாசிக் மாவட்ட நீதிபதி ஏ.எம்.டி. ஜாக்சனைக் கொலை செய்த குற்றத்திற்காக சாவர்க்கர் கைது செய்யப்பட்டார். இந்தப் படுகொலை நடக்கும் போது சாவர்க்கர் லண்டனில் இருந்தார். அங்கிருந்து குற்றவாளிக்கு துப்பாக்கியை வாங்கிக் கொடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. சாவர்க்கரும் அவரது சகோதரர் கணேஷ் தாமோதர் சாவர்க்கரும் சேர்ந்து ‘மித்ரா மேளா (தற்போது அது அபினவ் பாரத் என்றழைக்கப்படுகிறது) என்ற இரகசிய அமைப்பை நாசிக்கில் நிறுவினர். இந்த இரகசிய அமைப்பிற்கு அந்த படுகொலையில் தொடர்பு இருந்தது. கணேஷ் சாவர்க்கர் இதற்கு ஒரு ஆண்டிற்கு முன்பே வேறொரு ஆங்கில அதிகாரியை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருந்தார்‌.

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட முருகேசனின் தாயார் மீது தாக்குதல் – வழக்கு பதிந்தும் குற்றவாளிகளை கைது செய்யாத காவல்துறை

சாவர்க்கர் தனது முதல் கருணை மனுவை 1911 ல் பதிவு செய்தார்

தில்லி தர்பாரில் நல்லெண்ண நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அனைத்து அரசியல் கைதிகளும் தங்கள் விடுதலைக்காக மன்னிப்புக் கோரி அரசாங்கத்திற்கு கருணை மனுக்களை அளிக்கலாம் என அதிகாரபூர்வ நெறிமுறையின்படி ஆங்கிலேய அரசு கோரியது. இதனடிப்படையில், விநாயக்கும் தனது மனுவை சிறை அதிகாரிகளிடம் கொடுத்தார். அவரது மனு 1911, ஆகஸ்ட் 30 அன்று பெறப்பட்டது. அந்த மனுவின் நகல் எதுவும் இல்லை என்றாலும், அவரது ‘சிறைவாசக்கால  குறிப்புகளில்’ மேற்கோளாக இது காட்டப்பட்டுள்ளது.”

இது விக்ரம் சம்பத் எழுதிய “Echoes from a forgotten past,1883-1924” என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

இந்த மனுவை அளித்த போது மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்தார். இதற்கு மூன்றாண்டுகளுக்குப் பின்னர்தான் காந்தி இந்தியா வந்தார். சாவர்க்கர் தனது இரண்டாவது கருணை மனுவை 1913, நவம்பர் 14 ல் பதிவு செய்தார். இதுவும் காந்தி 1914 ல் இந்தியா திரும்புமுன் போடப்பட்டது.

காந்தி சாவர்க்கரின் இளைய சகோதரர் நாராயண் தாமோதர் சாவர்க்கரிடம் வி.டி. சாவர்க்கரின் குற்றம் முழுவதும் அரசியல் ரீதியிலானது என்று கூறி அதனால் மனு போடலாம் என 1920 வரை கூறவில்லை. அதுவும் கூட நாராயண் சாவர்க்கர் காந்தியிடம் உதவி கேட்டு கடிதம் எழுதிய பின்னர்தான் நடந்தது.

‘சுவராஜ்யா’  விக்ரமின் நூலை மேற்கோள் காட்டி, ராஜ்நாத் சிங் கூறியிருப்பது உண்மை என வாதிடுவது தவறானது. அது, “தனது மும்பை,கிர்காம் மருத்துவமனையிலிருந்து நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றைச் செய்ய நாராயண்ராவ் முடிவெடுத்தார். தனது பேனாவை எடுத்து தனது சகோதரனின் கருத்தியலுக்கு நேர்த்தியான கருத்தியல் கொண்ட ஒரு மனிதருக்கு கடிதம் ஒன்றை  எழுதினார். ஆனால் அவர் வேறு யாருமல்ல. நாட்டின் முக்கிய அரசியல் குரலாக வேகமாக உருவாகி வந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்திதான் அது. அவர் காந்திக்கு எழுதிய ஆறு கடிதங்களில் முதல் கடிதம்

1920, ஜனவரி 18 என தேதியிடப்பட்டிருந்தது. அந்தக் கடிதங்களில் நாராயண்ராவ் அப்போது வெளியிடப்பட்ட அரச பிரகடனத்தின் கீழ் தனது மூத்த சகோதரனை  விடுவிக்க உதவிடுமாறு காந்தியிடம் கோரியிருந்தார்.”

‘காட்டுயிர் பாதுகாப்பில் அலட்சியம் காட்டும் ஒன்றிய அரசு’ – சதீஷ் லெட்சுமணன்

1920 ம் ஆண்டு நாராயணன் சாவர்க்கர் காந்திக்கு எழுதிய கடிதத்தில்,” நேற்று( ஜனவரி17) அரசாங்கத்திடமிருந்து கிடைத்தல் தகவல் மூலம் விடுதலை செய்யப்பட்டவர்களில் எனது சகோதரர்கள் சேர்க்கப்படவில்லை என அறிந்தேன். … அவர்களை விடுதலை செய்யக்கூடாது என்பது அரசின் முடிவு என்பது இதன் மூலம் இப்போது தெளிவாகிறது. தயவு செய்து, இத்தகைய சூழ்நிலையில் நான் இப்படி இதனை முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து உங்களிடமிருந்து கேட்க விரும்புகிறேன்…” என்று எழுதி உள்ளார். இந்தக் கடிதம் குறித்து காந்தியைப் பற்றிய 15 வது தொகுப்பு நூலில் பக்கம் எண் 348 ல்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு 1920, ஜனவரி 25 ம் நாளன்று காந்தி எழுதியுள்ள பதில் கடிதத்தில்,” உண்மைகளை முன்வைத்து  உங்கள் சகோதரனின் குற்றம் முற்றிலும் அரசியல் ரீதியானது என்பது தெளிவாக வெளிப்படுத்தும் வகையில் ஒரு மனுவை தயார் செய்யுங்கள்”  என்று எழுதியுள்ள காந்தி, “நான் என் சொந்த வழியில் முயற்சிக்கிறேன்” என்றும் எழுதி உள்ளார். இந்தக் கடிதமும் மகாத்மா காந்தியைப் பற்றிய நூல்களின் 19 வது தொகுப்பில் காணக் கிடைக்கிறது.

இரண்டு மாதங்கள் கழித்து சாவர்க்கர் அரசுக்கு புதிய கருணை மனுவைப் போட்டார். அதில் அவர் நூற்றுக்கணக்கானவர்களை விடுதலை செய்ததற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், அரசு அதனை மேலும் நீட்டித்து, தன்னையும், தனது சகோதரன் உள்ளிட்ட மீதமுள்ள சிறைக் கைகதிகளையும் விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த மனு 1920, ஜனவரி 30 எனத் தேதியிடப்பட்டிருந்தது.

காந்தி தனது வார இதழான யங் இந்தியாவில் 1920, மே 26 ல், “[அதில் எழுதியுள்ளவாறு] எனவே, என் அரசப் பிரதிநிதியை எனது பெயரிலும், என் சார்பாகவும்,   அரசியல் குற்றவாளிகள் மீது  அதன் முழு அளவில், அவரது தீர்ப்பில் பொது மக்களின் பாதுகாப்புக்குப் பொருத்தமாக எனது அரசரின் கருணை முழுவதுமாக இருக்கும் வகையில் உத்தரவிடுகிறேன். இந்த நிபந்தனைகளின்படி அதனை அரசுக்கு எதிராகவோ அல்லது ஏதாவது சிறப்பு அல்லது அவசர சட்டங்களுக்கு எதிராகவோ குற்றமிழைத்து அதனால் சிறைவாசம் அல்லது அவர்களது சுதந்திரத்தின் மீதான தடையைப் பெற்றிருப்பவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும் என விரும்புகிறேன்.” என்று எழுதி உள்ளார்.

மேலும் அவர்,” [அதில் எழுதியுள்ளவாறு]  பலரும் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கும் வேளையில் அரசின் கருணையின் பலனை அவர்கள் அடைவதற்காக எடுத்துள்ள செயல்களுக்காக  இந்திய அரசிற்கும், மாகாண அரசாங்கங்களுக்கும் நன்றி. ஆனால் ஒருசில குறிப்பிடத்தக்க ‘அரசியல் குற்றம்’ செய்தவர்கள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை‌. அவர்களில் நான் சாவர்க்கர் சகோதரர்களையும் கணக்கில் கொள்கிறேன்… அந்த இரு சகோதரர்களும் தங்கள் அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அத்துடன் அவர்கள் இருவரும் தாங்கள் எந்தவித புரட்சிகரமான கருத்துக்களையும் ஆதரிப்பதில்லை என்றும் அவர்களை விடுதலை செய்தால் சீர்திருத்த சட்டத்தின்படி வேலை செய்வதாகவும் கூறியுள்ளார்கள். ஏனெனில் அவர்கள் சீர்திருத்தம் என்பது ஒருவர் அதன் கீழ் வேலை செய்து, இந்தியா அரசியல் பொறுப்புணர்வை அடைவதாக இருக்கும் என்பதை ஏற்கிறார்கள்,” என்றும் எழுதி உள்ளார்.

அவர்கள் இருவரும் ஆங்கிலேயரின் தொடர்பிலிருந்து விடுதலையை விரும்பவில்லை என்பதை  ஐயத்திற்கிடமின்றித் தெரிவித்திருக்கிறார்கள்‌. இதற்கு மாறாக, ஆங்கிலேயருடன் இணைந்து செல்வதன் மூலமே இந்தியாவின் தலைவிதியை  சிறப்பாக வடிவமைக்க முடியும் என உணர்ந்திருக்கிறார்கள்…

எனவே முழுமையான ஆதாரம் இல்லாத நிலையில், ஏற்கனவே போதுமான காலம் சிறைவாசம் அனுபவித்து விட்டிருப்பதுடன், தங்கள் அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கும் நிலையில், அவர்களின் உடல் எடை கணிசமான அளவு இழந்திருப்பது அரசுக்கு அபாயமாக இருக்கும் என நிரூபிக்கப்படலாம். எனவே அரசப் பிரதிநிதி அவர்களுக்கு விடுதலைத் தர வேண்டியது அவசியம் என நான் கருதுகிறேன்,” என்றும்  அவர் எழுதி உள்ளார்.

இவை மகாத்மா காந்தி பற்றிய நூலின் 20 வது தொகுதியில் இருக்கின்றன. (பக்கம் எண். 368)

சாவர்க்கர்  மே 1921 ல் அந்தமான் சிறையிலிருந்நு விடுவிக்கப்பட்டு ரத்னகியியில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். சாவர்க்கர் சகோதரர்கள் சிறையில் இருந்த போது அவர்களைப் பற்றி காந்தி உயர்ந்த எண்ணங்களைத் கொண்டிருந்தார். இது அவர்களது எழுத்துக்களில் தெளிவாக எதிரொளிக்கிறது.

நல்ல இஸ்லாமியர், கெட்ட இஸ்லாமியர் – அக்பரை முன்வைத்து வலதுசாரிகள் கட்டமைக்கும் கருத்தியல்

“சாவர்க்கர் சகோதரர்களின் திறமை பொது நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ளப்பட வேண்டும்,” என எழுதிய காந்தி தனது யங் இந்தியா இதழின் 1921,மே 18 ம் நாளைய பதிப்பில்,” இருக்கும் நிலையில், இந்தியா இப்போது விழித்தெழாவிட்டால், தனது இரண்டு உண்மையான மகன்களை இழக்கும் அபாயத்தில் இருக்கிறது. நான் நன்கு அறிந்த சகோதரர்களில் ஒருவர். நான் அவர்களை லண்டனில் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். அவர்  துணிச்சலானவர். அவர் அறிவாளி. அவர் ஒரு நாட்டுப்பற்றாளர். அவர் வெளிப்படையாக ஒரு புரட்சியாளர். தற்போதைய அரசின் அமைப்பின் கொடூர வடிவத்தை நான் பார்ப்பதற்கு முன்னதாகவே பார்த்தவர். அவர் இந்தியாவை மிக அதிகமாக நேசித்ததால் அந்தமான் சிறையில் இருக்கிறார்.” என்றும் எழுதினார்.

ஆனால் அவர் அவர்களுடைய வன்முறை நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. சாவர்க்கர் இந்துத்துவா கருதியலாளராக முக்கியத்துவம் பெற்ற உடனே, காந்தி தனது விமர்சனத்தில் தெளிவாக இருந்தார்.” ஒரு வாழும் உயிரினத்தை உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்பது அதன் உயிரையே எடுக்க வேண்டும் என கேட்பதுதான்,” என காந்தி 1942 ல் மும்பையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் கூறினார். “அது ஒரு போருக்கான அழைப்பு. இந்த சகோதர படுகொலையில்  காங்கிரஸ் ஒரு பகுதியாக இருக்காது. வாளின் கோட்பாட்டை நம்பும்  மருத்துவர் மூஞ்சே, சாவர்க்கர் போன்ற இந்துக்கள், முஸ்லீம்களை இந்துக்களின் ஆதிக்கத்தின் கீழ் வைத்துக் கொள்ள வேண்டும் என கேட்கலாம். நான் அந்தப் பிரிவினரை பிரதிநிதித்துவ படுத்துபவன் அல்லன். நான் காங்கிரசை பிரதிநிதித்துவப் படுத்துகிறேன்,” என அவர் உரையாற்றினார்.

‘ஆட்கொல்லி புலியை உயிரோடு பிடித்தவர்கள் என்கவுன்டர் என்ற பெயரில் மனிதர்களை சுட்டுக் கொல்கின்றனர்’ – காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம்

காந்தி, அவர்களுடைய சிந்தாந்தத்தை அங்கீகரிக்கவில்லை எனினும் அவர்களை விடுதலைச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். 1937 ல் தாத்யா சாகேப் கெல்கர் 1925 ல் பேசிய போது, சாவர்க்கரின் விடுதலைக்கான அறிக்கையில் காந்தி கையெழுத்திடவில்லை என்று வைத்த குற்றச்சாட்டுப் பற்றி சங்கர் ராவ் தியோ காந்தியிடம் கேட்டபோது, “புதிய சட்டம் அமுலுக்கு வந்த உடன் சாவர்க்கரை விடுதலை செய்ய வேண்டியது, யார் அமைச்சராக இருந்தாலும் கட்டாயம் என்பதால் அது முற்றிலும் தேவையற்றது. அதுதான் நடந்தது. குறைந்தது எங்களுக்குள் சில அடிப்படைகளில் கருத்து வேறுபாடு இருந்தாலும், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை சமநிலையாக என்னால் சிந்திக்க முடியாது என்பது சாவர்க்கர் சகோதரர்களுக்குத் தெரியும்,” என்று பதிலளித்தார்.

சாவர்க்கர் 1924 ம் ஆண்டு ரத்னகிரி சிறையிலிருந்து, “அவர் ரத்னகிரியிலேயே இருக்க வேண்டும்;அரசின் அனுமதியின்றி ரத்னகிரி மாவட்டத்தின் எல்லையைத் தாண்டிப் போகக் கூடாது; பொது வெளியிலோ தனிப்பட்ட ரீதியிலோ அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனைகளுடனும், இவை ஐந்தாண்டுகள் அமலில் இருக்கும் என்றும் தேவைப்பட்டால் அதற்குப் பின்னர் நீட்டிக்கப்படலாம் என்ற நிபந்தனைகளுடனும்  விடுவிக்கப்பட்டார்.”

அமித்ஷா கூறும் நாட்டுப்பற்றும் முன்னேற்றமும் – ஹிட்லரை நினைவு படுத்துகிறதா?

மகாத்மா காந்தியின் ஆலோசனையின் பேரில் தான் சாவர்க்கர் ஆங்கிலேய அரசிடம் கருணை மனுவை கொடுத்தார் என்பதற்கு பொது வெளியில் எந்த ஆதாரமும் இல்லை. முதலிரண்டு மனுக்கள் கொடுக்கப்பட்ட போது காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்தார். பின்னர் சாவர்க்கரின் இளைய சகோதரர் காந்தியிடம் உதவி கோரி கடிதம் எழுதியதால் அவருக்கு காந்தி ஆலோசனைக் கூறினார். எனவே பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின்  கூற்று பொய்யானது.

 

www.scroll.in இணைய தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

  Alt News ல் எழுதியவர்: பூஜா சவுதிரி

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்