Aran Sei

பொதுமக்களை குற்றவாளியாக்கும் குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா – மக்களவையில் மஹுவா மொய்த்ரா ஆவேசம்

குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா தனிமனித உரிமைக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா தெரிவித்து தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இது குறித்து மக்களவையில் நடைபெற்ற மசோதா மீதான விவாதத்தில் பேசிய   அவர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பாக குற்றவியல் நடைமுறை அடையாள மசோதாவை (Criminal procedure Identification bill (2022)) எதிர்க்கிறேன்.

இந்த மசாதோவை எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. மிகவும் அரிதான நிகழ்வாக இந்த மசோதா அறிமுகப்படுத்தியபோதே எதிர்கட்சிகள் வாக்கெடுப்பை கோரின.

இலங்கையைப் போன்றே இந்தியாவும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் – சஞ்சய் ராவத் எச்சரிக்கை

1920 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலனியவாதிகளால் இயற்றப்பட்ட சட்டம் தண்டனைக் கைதிகள் மற்றும் சில வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் புகைப்படம், கால் தடம், கைரேகை ஆகியவற்றை எடுத்து பாதுகாக்க வழிவகை செய்கிறது.

இது, தேசியவாதிகளை ஒடுக்குவதற்கும் அவர்களை கண்காணிப்பதற்கும் பிரிட்டிஷ் அரசால் உருவாக்கப்பட்ட சட்டம்.

தற்போது, ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பிறரை விட மிகப்பெரிய தேசியவாதிகளாக தங்களை கூறிக்கொள்ளும் இந்த அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்டம் (பிரிட்டிஷ் இயற்றிய சட்டத்தை விட) தனி நபர் சுதந்திரத்தில் தலையிடும் வகையில்  அமைந்துள்ளது.

மசூதி ஒலிப்பெருக்கி விவகாரம்: மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் யாரும் பேசக் கூடாது – மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் தகவல்

வளர்ந்துள்ள புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப கைதிகளின் விவரங்களை சேகரிப்பது மற்றும் அடையாளப்படுத்துவதே இந்த சட்டம் கொண்டு வரப்படுவதற்கான நோக்கமாக கூறப்பட்டுள்ளது.

காவல்துறை மற்றும் சிறை காவவலர்கள் மாஜிஸ்ட்ரேட்டால் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்ட எந்த ஒரு நபரின் விவரங்களையும் சேகரிக்கலாம்.

இங்கு கவனிக்க வேண்டிய ஒரு வார்த்தை “எந்த ஒரு நபரையும்” விவரங்களை சேகரிப்பது என்பது, கண்விழி பதிவு, விரல் ரேகை, கைரேகை, கால்தட ரேகை, உயிரி மாதிரி மற்றும் குணாம்சம்சங்களையும் காவல்துறை பதிவு செய்யலாம் என்று இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முந்தை சட்டம் வெறுமனே விரல் ரேகை, கை ரேகை, கால்தட ரேகை மற்றும் புகைப்படத்திற்கு மட்டுமே அனுமதியளிக்கிறது. இந்த புதிய சட்டம் இதன் வரம்பை அதிகரித்துள்ளது.

மருத்துவ படிப்பிற்கான உறுதிமொழியை மாற்றிய தேசிய மருத்துவ ஆணையம் – தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கம் கண்டனம்

இதில் என்ன அபாயம் உள்ளது என்பதை சதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் நான் விளக்க முயல்கிறேன்.

இதற்கு முன்னர் UAPA (திருத்தச்) சட்டத்திற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தபோது, நீங்க என்ன தீவிரவாதியா, எதற்கு பயப்படுகிறீர்கள் என்று சபாநாயகர் என்னிடம் கேட்டார்.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் இங்கிருக்கும் அனைவருமே தீவிரவாதிகள் என்று மாற்றப்படலாம் என அப்போது நான் பதிலளித்தது எனக்கு நினைவிருக்கிறது.

நான் கூறியதுபோலவே, UAPA தவறாக பயன்படுத்தப்பட்டது. அதேபோல், இந்த சட்டமும் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. அதற்காகத்தான் இதை எதிர்க்கிறோம்.

கடந்த பல ஆண்டுகளில் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது ஆகவே பழைய சட்டத்தை மாற்ற வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். இதற்கு மற்றொரு பக்கமும் உள்ளது. வளர்ந்துள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரசு மக்களை இன்னும் அதிகமாக கண்காணிக்க முடியும்.

கர்நாடகா: பாங் ஒலிக்கு எதிராக பரப்புரை செய்யும் இந்துத்துவாவினர் – மசூதிக்கு வெளியே உள்ள ஒலிப்பெருக்கிகளை அகற்ற வலியுறுத்தல்

ஆகவே, அரசு, மக்களை கண்காணிக்க வகை செய்யும் எந்த ஒரு சட்டத்தையும் அனுமதிப்பதற்கு முன்னர், அது வரையரைக்குட்பட்டு மற்றும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். ஆனால், இந்த மசோதாவில் அப்படி எதுவும் இல்லை.

இந்த சட்டத்தில் அரசியல் சாசனத்திற்கு எதிரான அம்சங்கள் உள்ளன. அத்துடன், ஏற்கனவே உள்ள சட்டத்தில்  (1922) விசாரணைக் கைதி, தடுத்து வைக்கப்பட்ட நபர், குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் தண்டனை பெற்றவர்களை பிரித்து பார்ப்பதற்கான அம்சம் உள்ளது. ஆனால், இந்த மசோதாவில் அது நீக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு குற்றச் செயலில் ஈபட்ட நபர்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும் என்று பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, தடுப்புகாவலில் வைக்கப்படும் நபர்களுக்கும் இந்த சட்டம பொருந்தும். அந்தவகையில் எந்த தவறும் செய்யாத நபர்களின் தனி உரிமையும் இந்த சட்டத்தின் மூலம் பறிக்கப்படும்.

இதற்கு முந்தைய சட்டம் 1 ஆண்டுக்கு அதிகமாக தண்டனை பெறும் வகையிலான குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களிடம் அவர்களின் தனிநபர் விவரங்களை பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த மசோதா 1 ஆண்டு முதல் 7 ஆண்டுவரை தண்டனைக்குரிய குற்றச்சாட்டிற்கு உள்ளான, எந்த ஒரு சட்டத்திலும் தண்டிக்கப்பட்ட அல்லது குற்றச்செயலலில் ஈடுபடலாம் என்று கருதி தடுத்து வைக்கப்பட்டவர்களையும் இணைத்துள்ளது.

தண்டனை காலத்தை உயர்த்தியுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், அதை முடிவு செய்யும் அதிகாரம் மாஜிஸ்ட்ரேட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த மசோதா, இதற்கு முந்தைய சட்டதை விட மிகவும் கடுமையானது.

பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் ஹிஜாப் அணியக் கூடாது – கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ்

அடுத்து, இந்த மசோதாவில் உள்ள மற்றொரு ஆபத்தான விஷயம் என்னவென்றால், இந்தியர்களின் சராசரி ஆயுற்காலமே 69.6 ஆண்டுகள். ஆனால், பெறப்படும் விவரங்கள் 75 ஆண்டுகள் வரை பாதுகாக்கப்படும் என்று இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு சேரிக்கப்படும் தகவல்களை, தேசிய குற்ற ஆவண காப்பகம், எந்த ஒரு சட்டத்தை அமல்படுத்தும், அமைப்புகளுக்கும் பகிரலாம் என்று இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இது அடிப்படை உரிமையை பாதிக்கும் செயலாகும்.

சட்டப்பூர்வமாக ஒரு தனிநபரிடமிருந்து பெறப்படும் விவரங்கள், அந்த குறிப்பிட்ட காரணத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர மற்றொன்றின்றிற்கு பயன்படுத்தக் கூடாது.

நாடு முழுவதும் சட்டத்தை அமல்படுத்தும் மற்றும் விசாரணை அமைப்புகள் பல உள்ளன. அவை அனைத்தும் இந்த தகவல்களை பயன்படுத்தலாம்.

குறிப்பிட்ட சில குற்றச் செயலை செய்தவர்களின் தனிநபர் தகவல்களை பெறலாம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அப்படிப்பட்ட குற்றங்களும் பிற குற்றங்களும் வேறுபடுத்தப்படவில்லை. இது மிகவும் ஆபத்தானது.

இந்த மசோதா, காவல்துறையினருக்கு தனிநபர் விவரங்களை சேகரிக்கும் அதிகாரத்தை அளிக்கிறது. இதற்கு முந்தைய சட்டம், துணை ஆய்வாளர் அந்தஸ்தில் உள்ளவர்கள் மட்டுமே தனிநபர் விவரங்களை சேரிக்க அதிகாரம் அளிக்கிறது. ஆனால், இந்த மசோதாவில் தலைமை காவலரே இந்த விவரங்களை சேரிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ஒருவர் தன்னுடைய விவரங்களை தரமறுத்தாலும் அவரிடமிருந்து தகவல்களை பெறுவதற்கு காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கிறது. இதுமிகவும் கவலைக்குரியது. மாஜிஸ்ட்ரேட், ஒருவரிடமிருந்து விவரங்களை பெறலாம் என்று கூறினால் அதை எதிர்த்து முறையிடவும் அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்த மசேதாவில் உள்ள மிகவும் ஆபத்தான மற்றொரு அம்சம், இந்திய குடிமக்களாகிய எதிர்கட்சியை சேர்ந்த நாங்கள், எந்த குற்றமும் செய்யாமல், காவல்துறையால் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்படலாம். அப்படி கைது செய்யப்படும் நாங்களும் இந்த மசோதாவின் படி, குற்றம் செய்த பிற நபர்களைப் போலவே கருதப்படுவோம்.

தீவிரமாகும் வெப்பமயமாதல் – உலகைக் காக்க வழி கூறும் ஐ.பி.சி.சி

இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால், மிகக் கொடூரமாக எதிர்கட்சிகளின் குரல்வளை நசுக்கப்படும். எங்களை நம்புங்கள் என்று உள்துறை அமைச்சர் சொல்கிறார். நாங்கள் உங்களை நம்புவதற்கே விரும்புகிறோம். ஆனால், UAPA எவ்வாறு தவறுதலாக பயன்படுத்தப்படுகிறது என்று பாருங்கள்.

2016 முதல் 2019 வரை 5,000 UAPA வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன அதில் 7000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 2.2% வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் சிறப்பு அதிகாரச் சட்டம் (370) திரும்பப் பெறப்பட்ட பிறகு, 177 அரசியல் தலைவர்கள் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டனர்.

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் 1,100 பேர் கைது செய்யப்பட்டனர் 5,500 பேர் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டனர்.

2014 முதல் 2020 வரை, தேசதுரோக சட்டத்தில் பதிவு செய்யப்படும் வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் 28 சதவீதம் உயர்ந்து வந்துள்ளது.

Free speech collective என்ற அமைப்பின் அறிக்கையின் படி, கடந்த 10 ஆண்டுகளில் 154 பத்திரிகையாளர்கள் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 2020ஆம் ஆண்டில் மட்டும் 67 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேதங்களின் நாடா இந்தியா? வரலாற்றைத் திரிக்கும் இந்துத்துவாவினர் – சூர்யா சேவியர்

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நபர், அவர் எந்த குற்றத்திற்காக சிறைப்பட்டிருந்தாலும் அவருக்கும் அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகள் பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஒருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதி என்றே நமது சட்டங்கள் கூறகின்றன.

இந்த மசோதா தனிநபர் உரிமையை அரசின் கருணைக்கு விடும் வகையில் உள்ளது. எந்த வித பாதுகாப்பு உத்தரவாதமும் இன்றி தனிநபர் விவரங்களை சேரிக்க அனுமதியளிக்கிறது.

ஆகவே, இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பும்படி இந்த அரசையும், உள்துறை அமைச்சரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி இச்சட்டம் நிறைவேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் அரசியல் சூழல் குறித்தும் பொருளாதார சூழல் குறித்தும் செயற்பாட்டாளர் அருண் சித்தார்த் அவர்களின் பேட்டி

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்