Aran Sei

கொரோனா காலத்தில் பெண்களுக்கு உயரும் மனஅழுத்தம் – பெண்கள் குழுவின் ஆய்வில் தகவல்

ந்தியாவில் உள்ள 7 மாநிலங்களைச் சேர்ந்த இளம்பெண்களிடம் கொரோனா காலத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பாலின பாகுபாடு, அதிகப்படியான வீட்டு வேலை, படிப்பைத் தொடர்வதற்கு இணைய வகுப்பிற்கான வசதிகள் பற்றாக்குறை, திருமணத்திற்கான அழுத்தம், பெண்களுக்கு எதிரான வன்முறை ஆகியவற்றின் காரணமாகப் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகரித்திருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

‘கொரோனா காலத்தில் ‘பெண்கள் தலைமையில் பெண்களுக்காக நடத்தப்பட்ட ஆய்வு’ என்ற தலைப்பில் 13 முதல் 24 வயது வரை உள்ள பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

60% பாடங்கள் பார்வை திறனற்றவர்களால் படிக்க இயலவில்லை – என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தை ஆய்வு செய்த விதி அமைப்பு தகவல்

அகமதாபாத், ஆல்வார், பரேலி, டெல்லி, லக்னோ, மும்பை மற்றும் புனே ஆகிய இடங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, 25 பெண்களுக்கு ஆய்வுகுறித்த பயிற்சி அளித்து அதன் மூலமாகத் தங்கள் சமூகத்தைச் சார்ந்த பெண்களிடம் உரையாடல் வழியாக 153 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்விற்கு பிரிட்டன் அரசும், எம்பவர் அமைப்பும் ஆதரவளித்துள்ளன.

இந்த ஆய்வின் முடிவில், 80 விழுக்காடு  பெண்கள் வீட்டுவேலைகளில் அதிக நேரம் செலவிட்டு வருவதாகவும், இதன் காரணமாக 64 விழுக்காடு பெண்கள் இணைய வகுப்பில் பங்கேற்க நேரமில்லை என்றும் கூறியுள்ளது தெரிய வந்துள்ளது.

ஒவ்வொரு நாளும் பாலியல் வன்கொடுமைக்குள்ளான 4 குழந்தைகளுக்கு நீதி மறுக்கப்படுகிறது – ஆய்வு

விளிம்பு நிலை சமூக மக்களுக்கு கொரோனா தொற்றுக் காலத்தில் அதிகப்படியான பொருளாதார சுமையின் காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

மேலும், 42விழுக்காடு பெண்களுக்குக் கொரோனா காலத்தில் விரைவாகத் திருமணம் செய்யச் சொல்லி அழுத்தம் தரப்படுவதாகவும், இணைய வசதி இல்லாததாலும், தொலைபேசி இல்லாததாலும் 28விழுக்காடு பெண்களால் இணைய வகுப்பில் பங்கேற்க முடியவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

பதஞ்சலி நிறுவனமே தயாரித்த கொரோனில் ஆய்வுக் கட்டுரை – அறிவியல் நம்பகத்தன்மை அற்றது

ஏறக்குறைய 90விழுக்காடு பெண்களுக்கு இணைய வகுப்பில் தரப்பட்ட பாடங்களை நகலெடுப்பது போன்ற நுட்பங்கள் தெரியாததால் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

மேலும், 26விழுக்காடு பெண்கள் பாலின பாகுபாட்டின் காரணமாக அவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

இந்தியாவின் “பெருந்தொற்று” தலைமுறை – 37.5 கோடி குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் : ஆய்வு

இந்த ஆய்வின் முடிவில் அந்த 7 மாநில பெண்களின் தேவையானதென்று சில பரிந்துரைகளைப் பிரதிநிதிகள் அளித்துள்ளனர். அவை பெண்கள் இலகுவாக அணுகும் வகையில் திறன் மேம்பட்டுப் பயிற்சிகள் மற்றும் வன்முறையற்ற வெளிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். வீடுகளுக்கு அருகிலேயே முறையான பாதுகாப்பான மருத்துவ வசதிகள், சிறிய நகரங்களில் கூட கிடைக்கும் வகையில் இணையம் மற்றும் மின்னணு வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்தித்தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

source; COVID In Her Voice: A Girl-led and Centred Participatory Research Study, report 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்