Aran Sei

அழுகுரலின் நெடுங்கதை – கொரோனா காலமும் பாதிக்கப்பட்ட தனியார் கல்லூரி பேராசிரியர்களும்

கொரோனா நெருக்கடி இந்தியாவிலும் அதே போல் உலக முழுவதிலும் அனைத்து பிரிவினரையும் பாதித்துள்ளது. ஒப்பீட்டளவில்  கல்விப் பிரிவு தனது வருவாயை அதே அளவில் பராமரித்து வருகிறது. பெரும்பாலான கல்லூரிகளும், பள்ளிகளும் தங்கள் மாணவர்களுக்குக் கல்விப்பணியைத் தொடர நிகழ்நிலை கல்வி முறைக்கு மாறி உள்ளன. நிகழ்நிலை கல்வி வழங்குவது என்ற பெயரில் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் முழு கல்விக் கட்டணத்தையும் வசூலித்துள்ளன.

கணக்கெடுப்பும் முடிவுகளும்

தனியார் கல்வி நிறுவனங்களின் வருவாய் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்றாலும் அதனையே அரசு உதவி பெறாத தனியார் கல்லூரி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்திற்கும் பொருத்த முடியாது. கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக வேலையிழப்பு மற்றும் ஊதிய வெட்டால் பாதிக்கப்பட்ட இத்தகைய ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற கிடைக்கும் வேலையைச் செய்யும் நிலைக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஊதிய வெட்டால் பாதிக்கப்பட்ட துணைப் பேராசிரியர் ஒருவர் வாழ்விற்காக பனைமரம் ஏறி இலைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டார். மரம் ஏறும்போது தவறி விழுந்து உயிரிழந்து விட்டார். இந்த நிகழ்வு அரசு உதவி பெறாத தனியார் கல்லூரி ஆசிரியர்கள் நிலை குறித்த கணக்கெடுப்பை நடத்தவும், தொற்று நோய் நெருக்கடியில் அவர்களின் வேலை மற்றும்  வாழ்க்கை நிலைமைகளைப் புரிந்துக் கொள்ளவும் தூண்டியது. நாங்கள் சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள அரசு நிதி உதவி பெறாத தனியார் கல்லூரிகளில் பணியாற்றி வந்த 194 ஆசிரியர்களை ஆய்வுக்கு உட்படுத்தினோம். இந்த ஆய்வு 2021, ஜூன் 13 லிருந்து 26ம் தேதிவரை நடை பெற்றது.

பொய்கள் நிறைந்த பிரதமர் மோடியின் உரை – உண்மை சரிபார்ப்பில் அம்பலம்

எங்களது ஆய்வு முடிவுகள், நோய் தொற்றுக்கு முன்பே கூட இந்த ஆசிரியர்கள் உரிய ஊதியத்தை விட மிகக் குறைவான ஊதியத்தையே பெற்று வந்ததும், எவ்வித சமூக பாதுகாப்பு நலன்களும் பெறாமலே இருந்திருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்தது.  பதிலளித்த 194 பேரில் 137 பேர் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிபந்தனைகளின் படி (முனைவர் பட்டம் பெற்றிருத்தல் அல்லது தேசிய தகுதித் தேர்வு அல்லது மாநில தகுதித் தேர்வில் தேர்ச்சி) உதவிப் பேராசிரியருக்கான தகுதியைப் பெற்றுள்ளனர். இந்தத் தகுதி பெற்ற ஆசிரியர்களில்  72 விழுக்காட்டினர் மாதம் ரூ 25,000 திற்கும் குறைவான ஊதியத்தையே பெற்று வந்துள்ளனர்

மேலும் 5.1% பேர் பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவான ஊதியம் பெற்று வந்துள்ளனர். ஏழாவது நிதிக்குழுவின் பரிந்துரையின் படி தகுதியான உதவிப் பேராசிரியர் துவக்க நிலையிலேயே 76,809 ரூபாய் ஊதியம் பெற வேண்டும்.

வேளாண் சட்டங்களுக்கெதிராக போராடிய விவசாயிகள் உயிரிழந்ததை விசாரிக்க வேண்டும் – எதிர்க் கட்சியினர் மக்களவை சபாநாயகருக்கு கடிதம்

எங்கள் ஆய்வில், 38% பேர் மட்டுமே ஊழியர்  அரசு காப்பீடு பெற்றுள்ளனர் என்பதையும், 42% பேர் மட்டுமே ஊதியத்துடன் கூடிய விடுமுறை வசதியைப் பெற்றிருக்கிறார்கள் என்பதையும் கண்டறிந்தோம். அரசு உதவி பெறாத தனியார் கல்லூரி ஆசிரியர்களின் இந்த மோசமான நிலைக்கு, ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கான பணி நிலைமைகள் குறித்து, உயர்கல்வி நிறுவனங்களின் மீது அரசின் ஒழுங்குமுறை விதிகள் எதுவும் இல்லை என்பதே காரணம். நவீன தாராளவாதக் கொள்கையைக் கடைபிடித்து வரும் இந்திய அரசு உயர்கல்வி அளிப்பதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு விட்டது. இது ஏராளமான தனியார் கல்லூரிகள் முளைக்க வித்திட்டது. 2020, உயர்கல்வி குறித்த அனைத்திந்திய ஆய்வு அறிக்கையின் படி, இந்திய அளவில், மொத்தக் கல்லூரிகளில் 65% கல்லுாரிகள் அரசு உதவி பெறாத தனியார் கல்லூரிகளே. 1980களின் துவக்கத்தில் உயர்கல்வியை தனியார் மயமாக்கிய சில மாநிலங்களில் ஒன்றாகிய தமிழ்நாட்டில் 77% தனியார் கல்லூரிகள் உள்ளன. இது அதிக பட்ச லாபம் தரும் அரசு உதவி பெறாத தனியார் கல்லூரிகளின் ஆதிக்கத்தையே காட்டுகிறது.

‘நீதிபதி லோயாவின் மரணத்திற்கு மாரடைப்பு காரணமில்லை’ – தடயவியல் துறையின் முன்னாள் தலைவர் தகவல்

சுமையாக இருக்கும் நிகழ்நிலை கல்வி

இந்தப் பின்னணியில்தான் அரசு உதவி பெறாத தனியார் கல்லூரி ஆசிரியர்களின் வாழ்க்கையில் கோவிட் தொற்று ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை நாம் புரிந்துக் வேண்டும். இவர்கள் நிகழ்நிலையில் கல்வியை பயிற்றுவிக்க தங்களாலான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றனர். எங்கள் ஆய்வில் பதிலளித்த 88% ஆசிரியர்கள் நிகழ்நிலை கல்வி பயிற்றுவிப்பதில், இணைய வசதியின்மை, தனி அறை/ இடவசதி இல்லாதது, தரமான கருவிகள் இல்லாதது போன்ற பல பிரச்சனைகளில் ஏதாவது ஒன்றிரண்டு பிரச்சனைகளையாவது  எதிர்கொண்டுள்ளதாகக் கூறி உள்ளனர். அத்துடன் பதிலளித்த ஒவ்வொருவரும் இணைய வசதிக்காக கூடுதல் பணம் செலவிட வேண்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஆய்வு மேற்கொண்ட 194, பேரில் 137 பேர் கீழ்கண்ட ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கருவிகளை வாங்க கூடுதல் செலவை எதிர்கொள்வதாகக் கூறுகின்றனர். ஒரு கைப்பேசி, கணினி, தலையணி கேட்பொறி (head phone). 107 பேர் இந்தக் காலத்தில் நிகழ்நிலை கல்வி பயிற்றுவிப்பது தொடர்பாக உயர்ந்த உணர்வு பாதிப்பிற்கு ஆளாவதாகக் கூறி உள்ளனர். இவையாவும் இந்த ஆசிரியர்கள் இந்தத் தொற்று நோய் காலத்தில் உடல் ரீதியாக, மன ரீதியாக, உணர்வு ரீதியாக தங்களை பெரிதும் வருத்திக் கொள்வதைக் காட்டுகிறது. தங்களுடைய மதிப்பிட முடியாத முயற்சிகளுக்குப் பின்னும் அவர்களுடைய நிர்வாகம் அவர்களுக்குரிய ஊதியத்தைக் கொடுக்கவில்லை. அதற்கு நேர்மாறாக உண்மையில் இந்தத் தொற்று நெருக்கடியில் அவர்களுடைய  ஊதியத்தை கடுமையாக குறைத்து விட்டது.

டெல்லியில் தகர்க்கப்பட்ட கிறிஸ்தவ ஆலயமும் இந்தியக் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களும் – அ.மார்க்ஸ்

ஆய்வுகளின் தரவுகள் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான ஆசிரியர்களே அவர்களுக்கு தரப்பட வேண்டிய ஊதியத்தை முழுமையாகப் பெற்றுள்ளனர். எங்களுக்கு பதிலளித்தவர்களில் 10 விழுக்காட்டினர் 2020ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை ஊதியமே பெறவில்லை என்பது வருத்தத்திற்குரியது. கற்பித்தல் நிகழ்நிலைக்கு மாறி விட்டதால் இந்தக் கல்லூரிகளின் செயல்பாட்டுச் செலவுகள் மிகவும் குறைந்திருக்கும் என வாதிடலாம். மேலும் தனியார் கல்லூரிகள்  மாணவர்களிடமிருந்து முழு கல்விக் கட்டணத்தையும் வசூலித்து விட்டன என்பது ஊரறிந்த உண்மை. எனவே தொற்றுக் காலத்தில் ஊதியத்தை குறைப்பதை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இந்தக் கொரோனா காலத்திலும் கூடுதல் பணம் செலவு, அதிக அழுத்தம் ஆகியவற்றிற்கிடையிலும் கடினமாக உழைக்கும் ஆசிரியர்களிடம், தொற்றைக் காரணம் காட்டி கல்லூரி நிர்வாகங்கள் கொள்ளை அடித்துள்ளன.

‘இது நம்ம காலம்’ – ‘சார்பட்டா பரம்பரை’ பேசும் அரசியல் என்ன?

வருவாயை சரிகட்ட

இந்த தன்னிச்சையான ஊதிய வெட்டின் காரணமாக நமக்கு பதிலளித்த பல ஆசிரியர்களும் கட்டாயமாக ஏதாவது ஒரு  கூடுதல் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை உருவாகியதுடன் வாழ்க்கைக்காக முறைசாரா நிறுவனங்களிடம் கடன் பெற வேண்டிய நிலைக்கும் ஆளாகி உள்ளனர். இந்த வேலைகள் பெரும்பாலும் முறைசாரா உடலுழைப்பைக் கொண்ட கட்டிட வேலை, விவசாயக் கூலி வேலை, இயந்திரங்கள் பழுதுபார்க்கும் இடங்களில் வேலை, உணவு விநியோகிக்கும் வேலை இன்னும் இது போன்ற வேலைகள் ஆகும். இந்த ஆசிரியர்களின் வாழ்க்கை நிலையைத் தொற்று நோய் பரவல் மிக மோசமாக்கி விட்டது என்றாலும் அவர்கள் பணி நிலை குறித்த அரசின் ஒழுங்கு முறை நெறிகாட்டுதல்கள் முற்றிலும் இல்லாத நிலையில் சாதாரண சமயங்களில் கூட அவர்களுடைய பணி நிலைமை புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே  உள்ளது. தமாழ்நாடு அரசு இது குறித்து சில உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவற்றுள் சில: நிர்வாகத்தால் குறைக்கப்பட்ட ஊதியம் முழுவதையும் தர வேண்டும். வேலையிழப்பு ஆசிரியர்களை எந்தவித பாதிப்புமின்றி மீண்டும் பணியமர்த்த வேண்டும். தொற்று நோய் காலத்தில் நிகழ்நிலை வகுப்புகள் நடத்துவதில் ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட கூடுதல் செலவுகளை உடனே கொடுக்க வேண்டும்.

கொரானாவை கையாளாததால் விசாரணைக்கு உள்ளாகும் பிரேசில் அதிபர் – எப்போது மோடி?

2018 ல் கேரள அரசு, அரசு உதவி பெறும் கல்லுாரிகளில்  யுஜிசி தகுதியுடைய ஆசிரியர்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 1,750 வீதம் மாதம் ஒன்றுக்கு 43,750 ரூபாயும், யுஜிசி தகுதியில்லாத ஆசிரியர்களுக்கு நாளொன்றுக்கு ₹1600 வீதம் மாதத்திற்கு ₹40,000மும் தர வேண்டும் என உத்தரவிட்டது. இதே வழியைப் பின்பற்றி தமிழ்நாடு அரசும் ஏதாவது பரிந்துரை செய்யலாம்‌. மேலும் தமிழ்நாடு அரசு 1976ம் ஆண்டின்  தனியார் கல்லூரிகள்(ஒழுங்குப் படுத்தும்) சட்டத்தை மீள்பார்வை செய்து, கல்லுாரிகள் கல்வி இயக்ககம் மற்றும் வட்டார கல்லூரி கல்வி துணை இயக்குநரகம் ஆகியவை கண்காணிப்பு முகமைகளாக செயல்படச் செய்து இந்த அரசு உதவி பெறாத தனியார் கல்லூரி ஆசிரியர்களின் நலனை பாதுகாக்க வேண்டும்.

 

தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

எழுதியவர்கள்: அருண்குமார் மற்றும் கிஷோர் குமார் சூர்யபிரகாஷ்

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்