Aran Sei

பாலஸ்தீன, இஸ்ரேல் யுத்தமும் அதன் பின்னணியும் – சூர்யா சேவியர்

ரேபிய நிலப்பரப்பில் அமெரிக்காவின் ஏவுகணை தளங்களை அமைத்துக்கொள்ள செயற்கையாக உருவாக்கப்பட்ட நாடே இஸ்ரேல். அமெரிக்காவிலிருந்து குண்டு போட்டால் அவ்வளவு தூரம் வந்து சேராதல்லவா?

வெறும் 80 லட்சம் மக்கள் தொகையை கொண்ட இஸ்ரேலில், ஹீப்ருவும் அரபியும் மொழிகள். தற்போதைய நிலவரப்படி யூதர்கள் 77%,முஸ்லிம்கள் 16%. மேற்கு ஆசியாவின் மத்தியதரைக்கடலின் கிழக்கில் அமைந்துள்ளது.வடக்கில் லெபனான், வட கிழக்கில் சிரியா, கிழக்கில் ஜோர்டான், தென் மேற்கில் எகிப்து ஆகிய நாடுகளே இஸ்ரேலின் எல்லைகள்.

காசா பகுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – குழந்தைகள் உட்பட 21 பாலஸ்தீனியர்கள் பலி

இஸ்ரேல் என்று பெயரிடப்படாத இந்த நிலப்பகுதியை, கிபி 7 ம் நூற்றாண்டில் பைசாண் டைன் பேரரசன் ஹிராகிளியஸ் என்ற மன்ன ஆண்டான். அதன் பிறகு கி.பி 636 ல் முஸ்லிம்கள் வசம் இப்பகுதி வந்தது. அதன்பிறகு, ஆறு நூற்றாண்டுகள் முஸ்லிம்கள் அந்த நிலப்பரப்பை ஆண்டனர்.

கி.பி 1516 முதல் 20 ம் நூற்றாண்டு வரை, ஒட்டோமான் (இஸ்லாமிய) பேரரசுக்கு உட்பட்ட பகுதியாக தற்போதைய இஸ்ரேல் இருந்தது. இந்தக் காலங்களில் அங்கிருந்து வெளியேறிச் சென்ற யூதர்கள், 1881,1904,1919,1924,1930 ஆகிய ஆண்டுகளில் பாலஸ்தீனத்தில் குடியேறினர்.

யூதர்களை அங்கு குடியேற்றுவதில், இங்கிலாந்து முனைப்போடு இருந்தது.1922 ஆம் ஆண்டில், 11% ஆக இருந்த யூதர்களின் எண்ணிக்கை, 1945 ல் அதாவது இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு 33% ஆக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து, தங்கள் மண்ணில், யூதர்கள் குடியேறுவதை எதிர்த்து அரேபியர்கள், 1936 முதல் 1939 வரை பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் – குர்ஆன் வாசனத்தை மேற்கோள்காட்டிய யுவன்சங்கர் ராஜா

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை, பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரித்து 1947 டிசம்பர் 1 ல் தீர்மானம் நிறைவேற்றியது. ஜெருசலேம் நகரம், ஐக்கிய நாடுகள் சபையல் நிர்வகிக்கப்படும் சர்வதேச நகரமாகவும் அறிவிக்கப்பட்டது. இதை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கவில்லை. நேரு தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்தார். ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பு அப்போதோ இதை ஆதரித்தது.

1948 மே 14 அன்று, யூதர்கள் தங்கள் நாட்டிற்கு இஸ்ரேல் என்று பெயரை அறிவித்தனர். அதைத்தொடர்ந்து, அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் போர் மூண்டது. யூதர்களின் கொடூர தாக்குதலால், 80% பாலஸ்தீன மக்கள் அண்டை நாடுகளுக்கு  அகதிகளாக இடம் பெயர்ந்தனர்.

இந்நிலையில், உலகின் பல நாடுகளில் வாழ்ந்த யூதர்கள், இஸ்ரேலுக்கு செல்ல ஊக்குவிக்கப்பட்டதால் 1948 ஆம் ஆண்ட 8 லட்சமாக இருந்த யூதர்கள், 1958 ஆம் ஆண்டு 20 லட்சமாகப் பெருகினர். எகிப்தின் அப்போதைய அதிபர் நாசர் தலைமையிலான அரேபிய தேசியவாதிகள், இஸ்ரேல் நாட்டை அங்கீகரிக்க மறுத்து போரை அறிவித்தனர்.

பாலஸ்தீனத்தின் தெற்கு ஹெப்ரான் – இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் படைகளால் மீண்டும் மீண்டும் இடிக்கப்படும் வீடுகள்

1967 ஆம் ஆண்டு, ஆறு நாட்கள் நடந்த போரில் இஸ்ரேல் வென்று, பாலஸ்தீனப் பகுதிகளான கிழக்கு கடற்கரை (West bank), சினாய், கோலன், காஸா ஆகிய பகுதிகளைக் கைப்பற்றிக் கொணடது. போரின் தோல்விக்குப் பிறகு 1967 ல் பாலஸ்தீன விடுதலை இயக்கம் (பிஎல்ஓ) உருவானது. அந்த இயக்கம் ஆயுதம் ஏந்தி, பாலஸ்தீன தேசிய விடுதலைப் போரைத் தொடங்கியது.

1977 ல் லிகுட் என்ற கட்சியைச் சேர்ந்த, மெனகம் பிகின் இஸ்ரேல் பிரதமரானார். அதையொட்டி எகிப்து பிரதமர் அன்வர் சதாத், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பேசினார். ஒரு அரேபிய நாடு இஸ்ரேலை அங்கீகரித்த முதல் நிகழ்வு அதுதான்.

1987 முதல் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் எழுச்சி தொடர்ந்து நடைபெற்றது. 1993 ல் ஷிமன் பெரேசும் (இஸ்ரேல்) முகமது அப்பாஸ் (பிஎல்ஓ) ஆஸ்லோ உடன்படிக்கையில் கையொப்பம் இட்டனர். அதன்படி வெஸ்ட் பேங்க், காஸா பகுதிகளின் ஆளும் உரிமை பாலஸ்தீன தேசிய விடுதலை இயக்கத்திற்கு வழங்கப்பட்டது.

ஆனால் மறுபுறம், ஆஸ்லோ ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதைத் தொடர்ந்து தொடர்ந்து சண்டைகள் போர்கள் நடைபெற்று வந்ததன. அதன் தொடர்ச்சியாக, இன்றளவும் பதட்டம் நீடித்துக் கொண்டே இருக்கிறது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அராபத்தின் மறைவுக்குப் பிறகு, ஹமாஸ் என்ற இயக்கம் ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினாலும், தற்போது வரை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிந்தது. தற்போது அதை மீறி இஸ்ரேல் படையினர் பாலஸ்தீன பகுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றன.

தனது சொந்த நலனுக்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் செயற்கையாக உருவாக்கப்பட்டு, லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்களை கொன்று அழித்த இஸ்ரேலுக்கு,  இந்திய விடுதலைக்குப் பிறகு 70 ஆண்டுகளில் எந்தப் பிரதமரும் சென்றதில்லை.
ஆனால் பிரதமர் மோடி 2017 ஆம் ஆண்டு அங்கு சென்றார்.

பாலஸ்தீனர்களை அச்சுறுத்தும் யூத பயங்கரவாதிகள் – கிராமங்களை விட்டு வெளியேற்றும் கொடுமை

இது அமெரிக்காவின் ஆதரவு ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாக்களில் ஒன்றே.
உலகத்திற்கே முன்னுதாரணமாக, அணிசேரா கொள்கையை உயர்த்திப் பிடித்த இந்தியா, ஏகாதிபத்திய வெறியாட்டத்திற்கு வெண் சாமரம் வீசுகிறது என்று பிரதமரின் இஸ்ரேல் பயணம் விமர்சிக்கப்பட்டது.

இஸ்ரேல் என்ற நாடு இரண்டாம் உலக யுத்தத்திற்குப்பிறகு
மேற்குஆசியாவின் எண்ணெய் வள நாடுகளை அடக்கி ஆள முனைந்த ஏகாதிபத்திய நாடுகளின் படைப்பே. பாலஸ்தீனம் அரேபியர்களுக்கு சொந்தமான நாடு.16ம் நூற்றாண்டில் லட்சம் அரேபியர்களும்,5000 யூதர்களும் அங்கு வாழ்ந்ததாக அமெரிக்க தகவல் களஞ்சியம் (Encyclopedia) கூறுகிறது.

பழங்கால வரலாறு ஒன்றைக்காட்டி ஒருநாட்டை ஆக்கிரமிக்கலாம் என்றால், செவ்விந்தியர்கள் கையில் அமெரிக்காவை ஒப்படைத்துவிட்டு, ஐரோப்பிய வெள்ளையர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டும்.

இஸ்ரேலுக்கு எதிரான உலக நாடுகள் கண்டனம் முழக்கம் எழுப்ப வேண்டும். அந்த முழக்கத்தின் எளிய பங்களிப்பே இந்தப்பதிவு.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்