Aran Sei

ஆளும் மாநிலங்களில் தேயும் பாஜக; தேர்தல்கள் சொல்லும் உண்மை – சரத் பிரதான்

மேற்கு வங்காளத்திலிருந்து பெற்ற அதிர்ச்சியை சமாளிப்பதற்கு முன்பே, அண்மையில் முடிவடைந்த உத்திரப் பிரதேச பஞ்சாயத்துத் தேர்தல்களில் பாஜகவின் மோசமான செயல்பாடு எதிர்பாராத பேரிடியாய் இறங்கி உள்ளதாகத் தெரிகிறது. பாஜக முகாம் அமைதியாக இருப்பதிலிருந்து அது இதற்குத் தயாராக இல்லாதததாகவேத் தோன்றும் நிலையில், அதன் சில தலைவர்கள் அறிதுயிலுக்குச் சென்றுவிட்டனர். கட்சியை இரண்டாம் இடத்திற்குத் தள்ளிவிட்ட இந்தத் தேர்தல் முடிவுகள் பற்றி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கூட எதுவும் கூறவில்லை.

இதற்கு நேர்மாறாக கட்சியின் விளம்பர இயந்திரங்கள் இந்த அடிமட்டத் தேர்தல்களில் “சிறப்பாகவே”  செய்திருப்பதாகக் கூறி அனைவரையும் ஏமாற்றுகின்றன. பாஜகவின் செயல் திட்டங்களில் பொய்மையே எல்லாவற்றிற்கும் மேலானது. மாநில தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக முடிவுகளை அறிவிக்கும் முன்பே, ஒரு சுவரொட்டியில் “பாஜக 918 இடங்களை வென்று முதலிடத்தில் இருப்பதாக” கூறுமளவு சென்றார்கள்.

மோடி அவர்களே! பிரதமராக இருக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டீர்கள் – அருந்ததி ராய்

தேர்தல் ஆணையம் கடைசியாக கொடுத்த எண்ணிக்கை விவரங்கள் முற்றிலும் மாறுபட்ட முடிவுகளைத் தெரிவிக்கின்றன. அது சமாஜ்வாடி கட்சி 747 இடங்களிலும், பாஜக 666 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 322 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 76 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 70 இடங்களிலும், மிகவும் எதிராபாராத நிலையில் சுயேட்சைகள் மற்ற எல்லோரையும் விட மிக அதிகமாக 1,154 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர்.

யோகி ஆதிதாயநாத், இந்தத் தேர்தலில் முழுமையான வெற்றி பெற்று விடலாம் என்றும், அதன்மூலம் விண்ணுக்கும் மண்ணுக்கும் தாவி தனது வழியில் எந்தவிதத் தடையும் ஏற்படாத வகையில் கட்சிக்குள்  தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளலாம் என்றும் நினைத்ததை இங்குச் சுட்டிக் காட்ட வேண்டும். கடந்த மாதம் அலகாபாத் உயர்நீதிமன்றம்  ஊரடங்கிற்கு உத்தரவிட்டபோது, அது பஞ்சாயத்துத் தேர்தலை நிறுத்தி விடும் என்பதால், உ.பி. அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்றம் அதற்கு முறையாக செவிசாய்த்து   உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதித்தது‌. மிகவும் ஆர்வமூட்டும் வகையில், மாநில அரசு ஊரடங்கு ஏழை மக்களின் “வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும்” மோசமாக பாதிக்கும் என்ற நிலைப்பாட்டை அப்போது எடுத்தது.

எங்களை ஏன் ஏமாற்றுகிறீர்கள் மோடி? – எழுத்தாளர் க.பொன்ராஜ்

இருந்தாலும், பஞ்சாயத்துத் தேர்தல்களைத் தனது வழியில் நடத்தி முடித்த பிறகு, இப்போது முதலமைச்சர் மாநிலம் தழுவிய அளவில் மேலும் அதிக நிச்சயமற்றத் தன்மையுடன், மும்மரமாக ஊரடங்கை  விரிவாக்குவதில் இறங்கி இருக்கிறார். வார இறுதிநாள் மட்டும் ஊரடங்கு எனத் தொடங்கி, தற்போது ஏற்கனவே 10 நாட்கள் முழு ஊரடங்காக மாறிவிட்டது. ஆனால் இன்னும் ஏழைகளின் வாழ்வாதாரம் பற்றிய பேச்சையே காணமுடியவில்லை. உண்மையில் மாநில அரசின் மாநிலம் தழுவிய ஊரடங்கிற்கு எதிராக  உயர்நீதிமன்றம் கோவிட் தொற்றால் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களில் மட்டுமே ஊரடங்கிற்கு உத்தரவிட்டது.

மேலும் மோசமான விடயம் என்னவென்றால்,  மனசாட்சியேயின்றி மாநில அரசு இரட்டை நிலைப்பாட்டை எடுப்பதுதான். ஊரடங்கை முழுமையாக அறிவித்த உடன், அனைத்தும் மூடப்பட்டவுடன், ஆதித்யநாத் சமாஜ்வாடி ஆட்சியின்போது உருவாக்கப்பட்ட  கோவிட்19 க்கான 100 படுக்கைகளைக் கொண்ட  புற்று நோய் மருத்துவமனைக்கு  எந்தவித மன உறுத்தலுமின்றி துவக்கவிழா நடத்தினார். கோவிட் 19 க்கான ஒரு முழுமையான சிறந்த வசதிகளுடன் கூடிய  500 படுக்கைகளை  மிகக்குறுகிய சாதனை நேரத்தில் இந்திய இராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு(DRDO) பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பொது மக்களுக்காக இதே சமயத்தில் திறக்கப்பட்டது.

மோடியின் தவறுகள் – கட்டுப்பாடு இல்லாத ஒரு பெருந்தொற்று : தி கார்டியன் தலையங்கம்

இந்த கோவிட் 19 இறப்பு எண்ணிக்கை மட்டுமே உயர்ந்து வரும் வேளையில், அனைவரின் முகத்திலும்  ஏதும் செய்ய இயலாத நிலை பரவி இருக்கும் நிலையில்,  விழா மேடை பல வண்ண பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு மட்டுமல்ல, அந்த நிகழ்வில் வழக்கமான ரிப்பன் வெட்டுதல் போன்றவை தேவையா என பலரையும் கட்டாயமாக கேட்க வைத்தது.

 

www.thewire.in இணைய தளத்தில் சரத் பிரதான் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்