Aran Sei

“எந்த நாட்டிலும் எந்த சட்டமும் முழுவதும் ரத்து செய்யப்பட்டதில்லை” – விவசாயிகள் போராட்டம் குறித்து ஆர்எஸ்எஸ் கருத்து

டந்த நவம்பர் மாதம் தொடங்கி, டெல்லியில் இப்போதுவரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது விவசாய மசோதாவுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம். பல முறை விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதும், எதுவும் சுமூகமான தீர்வை தரவில்லை.

தங்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத வரை, போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்பதில் விவசாயிகள் தெளிவாக இருந்துவருகின்றனர். அப்படியான சூழலில், மத்திய அரசு அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராகி விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இப்படியான சூழலில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இரண்டாம் கட்ட தலைவரும், அந்த அமைப்பின் பொதுச் செயலாளருமான சுரேஷ் ஜோஷி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

விவசாய மசோதாவுக்கு எதிரான விவசாயிகள் போராட்டதை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?

ஜனநாயக நாட்டில், ஒவ்வொரு விஷயத்திலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருப்பது இயல்புதான். ஆகவே எல்லோரையும் திருப்திப்படுத்துவது சாத்தியமில்லை. எதிர்ப்பார்ப்புகளை யார் வேண்டுமானாலும் முன்வைக்கலாம். அந்த எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றுவதில், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சில வரைமுறைகள் இருக்கும். அப்படித்தான் இந்த போராட்டக்காரர்களின் எதிர்ப்பையும் – அதை நிறைவேற்றுவதில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் நான் பார்க்கிறேன்.

டிராக்டர் பேரணி: மாற்றுப் பாதையை நிராகரித்த விவசாயிகள் – திட்டமிட்ட இடத்தில் பேரணி நடைபெறும் என்று உறுதி

இது தவிர, போராட்டாக்காரர்கள் வைக்கும் கோரிக்கைகள் சரியா தவறா என்பது பற்றி, நான் கருத்து கூற விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரை,  இரு பக்கங்களிலும், அவரவருக்கென சில நியாயங்கள் இருக்கும். பேச்சுவார்த்தையின் முடிவில், என்ன கிடைக்கப்பெறுகிறதோ, அதை போராட்டாக்காரர்கள் கருத்தில் கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதேபோல அரசும், தன்னால் கூடுதலாக என்ன தர முடியும், செய்ய முடியும் என்பதை யோசிக்க வேண்டும். எப்போது இருவருமே இந்த நிலைப்பாட்டுக்கு வருகின்றனரோ, அப்போதுதான், போராட்டத்துக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும்.

‘உச்ச நீதிமன்ற குழுவில் மோடி ஆதரவாளர்கள்; எவ்வாறு விவசாயிகளுக்கு நீதி கிடைக்கும்?’ – காங்கிரஸ் கேள்வி

போராட்டம் நீடித்துக்கொண்டே போவதென்பது, சம்பந்தப்பட்டவர்களை மட்டும் பாதிக்காது. அவர்களை சார்ந்தவர்களையும், அவர்கள் வாழும் சமுதாயத்தில் வாழ்பவர்களையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ மொத்தமாக பாதிக்கும். ஆகவே இரு பக்கம் இருப்பவர்களும் இணைந்து, விரைவில் நல்ல முடிவை கண்டறிய வேண்டும்.

சம்பந்தப்பட்ட இந்த போராட்டத்தில், போராட்டாக்காரர்கள் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அவர்கள் உடன்படாமல் இருப்பதாக தெரிகிறது. `எங்களின் கோரிக்கை, சமரச பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல’ என்கிறார்கள் அவர்கள். ஆனால் பேச்சுவார்த்தையே இல்லாமல், பிரச்னை எப்படி முடிவுக்கு வரும்?

‘உச்சநீதிமன்றம் ஏமாற்றி விட்டது’ – போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவிப்பு

என்னைக்கேட்டால் போராட்டாக்காரர்கள் அரசு தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். வேளாண் மசோதாவில் தங்களுக்கு இருக்கும் பிரச்னைகளைக் கூறி அங்கு அவர்கள் பேச வேண்டும். அரசு தரப்பில், குறைகளை எப்படி சீரமைப்பது என்பதை விவாதித்து, அவர்களொரு முடிவுக்கு வர வேண்டும். இப்படி இரு தரப்பினருமே இணங்கி வந்தால்தான் முடிவு கிடைக்கும்

ஆனால், அரசுடன் தொடர்புகொண்டவர்கள் போராட்டாக்காரர்களை மாவோயிஸ்டுகள் – காலிஸ்தானியர்கள் என்றெல்லாம் சொல்கின்றார்களே? அப்படியிருக்கும்போது நேர்மறையான அணுகுமுறை எப்படி இருக்கும்?

அரசு அப்படி சொல்லவில்லை என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம். எனக்கு தெரிந்தவரை, சில வீண் பிடிவாதங்கள்தான் பிரச்னையை இவ்வளவு நாட்கள் நீடிக்க காரணமென நான் நினைக்கிறேன். பிரச்னை முடிவுக்கு வரக்கூடாது என நினைப்பவர்களே இப்படி செய்வார்கள். அப்படியான எண்ணம் கொண்டவர்கள் அனைவருமே விசாரிக்கப்பட வேண்டியவர்கள்

விவசாயிகள் போராட்டத்தில் ‘தீவிரவாதிகள்’ என மத்திய அரசு குற்றச்சாட்டு – பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தலைமை நீதிபதி உத்தரவு

நீங்கள் ஒருவேளை விவசாயிகள் சொல்லும் பிரச்னைகளை புரிந்துகொள்ளவில்லையோ என தோன்றுகிறது… அப்படியா?

அதை அறிந்துக்கொள்ள வேண்டியது அரசின் கடமைதானே தவிர, எங்களின் கடமையல்ல. அதேநேரம் இந்தப் போராட்டத்துக்கு நாட்டின் பிற பகுதிகளில் ஆதரவு இருப்பது போல எங்களுக்கு தெரியவில்லை.

மத்திய பிரதேசம், குஜராத் போன்ற இடங்களிலெல்லாம் உள்ள விவசாயிகள், இந்தப் போராட்டத்துக்கு எதிராக இருப்பதையெல்லாம் பார்க்க முடிகிறது. அவ்வளவு ஏன்…. போராட்டாக்காரர்களுக்கு மத்தியிலிருக்கும் விவசாயிகளிலேயே சிலர் இம்மசோதாவுக்கு வரவேற்பு தெரிவிப்பது போன்றெல்லாம் தெரிகிறது. ஆக, போராட்டாக்காரர்களிடமே இருவேறு நிலைபாடு கொண்டவர்கள் இருக்கின்றனர்.

இப்போராட்டத்தை சுமூகமாக முடிக்க, அரசு மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமென நீங்கள் நினைக்கின்றீர்கள்?

எனக்கு தெரியவில்லை. இருப்பினும், போராட்டாக்காரர்கள் சொல்வது போல மசோதாவில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அதை அரசு சரி செய்ய வேண்டும். எனக்கு தெரிந்து இதுவரை எந்த நாட்டிலும் எந்த மசோதாவும் மொத்தமாக ரத்து செய்யப்பட்டதில்லை.

ஒருவேளை அதற்கு சட்டரீதியாக வாய்ப்பிருந்தால், அரசு அதையும் கவனத்தில் கொள்ளலாம். எப்படியாகினும், விரைவில் போராட்டம் முடிவுக்கு வரவேண்டும்

கடந்த வருடம், குடியுரிமை திருத்தச் சட்டம் இயற்றப்பட்டு, அதற்கு எதிர்ப்பு வந்த போது, போராட்டக்காரர்களுக்கு அரசு செவிசாய்க்காதது ஏன் என்று நினைக்கின்றீர்கள்?

உள்துறை அமைச்சர், பாதுகாப்பு குறித்து வாக்குறுதிகளை அப்போதே அளித்திருந்தார். குறிப்பாக சிஏஏ சிறுபான்மை சமூகத்தினரை பாதிக்காது என்றும், அவர்களில் ஒருவர் கூட நாட்டைவிட்டு வெளியேற்றப்பட மாட்டர்கள் என்றும் அவரே வாக்கு தந்தார். நாட்டின் அமைச்சரின் வார்த்தையை கூட நீங்கள் நம்பாமல் இருந்தால் எப்படி?

குடியுரிமை திருத்தச் சட்டம் : விரைவில் விதிமுறைகள் – உள்துறை அமைச்சகம்

நீங்களே சொல்லுங்கள்… உங்களுடைய சொந்த தகவல்கள் கூட உங்கள் கைகளில் இல்லையென்றால், என்ன அடிப்படையில் உங்களை இந்த நாட்டிற்குள் இருக்க அனுமதிக்க இயலும்.

அமெரிக்காவில், விசா முடிந்த மறுநாளே குறிப்பிட்ட நபர் அங்கிருந்து துரத்தப்படுவார். ஆக இந்த நடைமுறை அனைத்து இடத்திலும் உள்ளது. ஏதோவொரு வெளிநாட்டவரை, எந்தவொரு அடையாளமும் இல்லாமல், நாம் எப்படி இங்கே இருக்க வைக்க முடியும்? இதைத்தான் அரசு கேட்டது. சட்டமாகவும் சொன்னது

கடவுளின் பெயரால் நடைபெறும் ஆட்சிக்கு தயாராகிறதா இந்தியா? – ராஜ்ஸ்ரீ சந்திரா

சிறுபான்மை சமூகத்தினரை, இரண்டாம் கட்ட குடிமகன்களாக அடையாளப்படுத்தும் படி, ஆர்.எஸ்.எஸ். அறிவுறுத்தியதே…

ஆனால் அதில் எங்காவது `முஸ்லீம்கள் இப்படித்தான் நடத்தப்பட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்ததா? இந்தியாவை தவிர இந்துக்கள் செல்வதற்கு வேறெந்த நாடும் இல்லை என்பது எங்கள் நிலைப்பாடு.

அதன் அடிப்படையில் வெளிநாட்டிலிருந்து இங்கு வரும் இந்துக்களுக்கு, குடிமகன் என்ற அடையாளத்தை தர வேண்டுமென நாங்கள் நிலைபாடு கொண்டோம். பாகிஸ்தானிலிருந்து, அங்கிருப்பவர்களின் அட்டூழியம் தாங்காமல் இங்கு வரும் முஸ்லீம்களுக்குகூட இங்கு குடியுரிமை வழங்கப்பட்டுதான் வருகிறது.

ஒருவேளை இந்த அரசு சிறுபான்மையினருக்கு எதிரானது என்றால், அவர்களுக்கு குடிமகனாகும் உரிமை மறுக்கப்பட்டிருக்குமே…. எனில் அரசு அப்படியில்லையென்றுதானே பொருள்!

இந்தியாவிற்குள் சீனாவின் புதிய கிராமம் – ’மோடிஜி, எங்கே உங்கள் 56 இன்ச் மார்பு?’ – காங்கிரஸ் கேள்வி

இந்தியா – சீனாவுக்கு இடையே இப்போது இருந்துவரும் மோதல்களை பார்க்கும்போது, இரு நாட்டுக்கும் இடையேயான வருங்கால உறவு எப்படியிருக்குமேன நீங்கள் நினைக்கிறீர்கள்?

இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். சூழல் சரியாக வேண்டுமென்றால், அதற்கு இரு நாட்டு தலைவர்களும் சுமூகமாக செயல்பட வேண்டும்; எனக்கு தெரிந்து, இந்தியா சீனா மீதோ – பாகிஸ்தான் மீதோ எந்த ஆக்கிரமிப்பு அதிகாரத்தை காட்டவில்லை. மாறாக அவர்கள் நம் மீது காட்டிய ஆக்கிரமிப்புக்கு பதில் மட்டுமே நாம் கொடுத்திருக்கிறோம்.

ஆகவே நம் மீது எந்த தவறும் இல்லை. ஆக நம் மீது வீரோத எண்ணம் கொண்ட அவர்கள்தான், இனி வரும் நாட்களில் நம்முடன் என்ன மாதிரியான உறவு வேண்டுமென முடிவு செய்ய வேண்டும். எச்சூழலிலும் நாம் நம் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க மாட்டோம். இறையாண்மையை இழக்க மாட்டோம்.

அடல் ஜி (வாஜ்பாய்) சொல்வது போல, `நம் எதிரிகளையும் – நண்பர்களையும்  நாம்தான் தேர்வு செய்ய வேண்டும். நம் பக்கத்து வீட்டுக்காரர்களை நாம் தேர்வு செய்ய முடியாது!’ அவ்வளவுதான்.

(நன்றி : தி இந்தியன் எக்ஸ்பிரஸ்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்