Aran Sei

மாட்டிறைச்சி உண்ணாதவர்கள் வசிக்கும் பகுதியில் மாட்டிறைச்சிக்கு தடை – சட்டமியற்றும் அசாம் மாநில அரசு

சாம் மாநிலத்தில் நேற்று ஜூலை 12 அன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட கால்நடை பாதுகாப்பு மசோதாவின் முக்கிய நோக்கம் வங்காளதேசத்திற்கு பசுக்கள் கடத்தப்படுவதைத் தடுப்பது தான் என மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

நியமிக்கப்படாத பட்டியல், பழங்குடி ஆணையத்தின் பொறுப்புகள் – வன்கொடுமை வழக்குகளை நீர்த்துப் போக செய்கிறதா ஒன்றிய அரசு?

ஆனால், அந்த மசோதாவில் மாட்டிறைச்சி உண்ணாதவர்கள் வசிக்கும் பகுதியில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில் மற்றும் 15-16 வது நூற்றாண்டைச் சேர்ந்த துறவி ஸ்ரீமந்த சங்கரதேவாவால் கட்டப்பட்ட மடங்கள் உள்ள இடங்களைச் சுற்றி 5 கிலோமீட்டர் சுற்றளவு மாட்டிறைச்சி விற்கக் கூடாதென முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்தச் சட்டவிதிகளை மீறி பசு இறைச்சிக் கூடம், விற்பனை மற்றும் பசுவை மாநிலத்தை விட்டு உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லுதல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டால் மூன்றிலிருந்து எட்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 3-5 லட்சம்வரை அபராதமும் விதிக்கப்படும் என்றும் தி இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் சம்மதத்துடன் இஸ்லாமியரை மணக்க இருந்த இந்துப் பெண் – இந்துத்துவ அமைப்புகளின் எதிர்ப்பால் நிறுத்தப்பட்ட திருமணம்

மக்களின் உணவுப் பழக்கத்தில் அரசு தலையிடக் கூடாது என்று அனைத்து அசாம் சிறுபான்மை மாணவர் சங்கம் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.

மேலும், இதுகுறித்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மற்றும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, இந்தச் சட்டம் சமூகத்தில் அமைதியற்ற சூழலுக்கு வழிவகுக்கக்கூடும் மற்றும் சட்டப் பூர்வமாக மாட்டிறைச்சி விற்கக் கூடியவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளதாக தி இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்