Aran Sei

அசாம்: இஸ்லாமியர்கள் தாமாகவே முன்வந்து மதரசாக்களை இடிப்பது ஏன்?

ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் தலைமையில் அசாமில் இஸ்லாமியர்கள் மீதான துன்புறுத்தல் சாத்தியமான அனைத்து நிலைகளையும் தாண்டியுள்ளது. கோல்பராவில் உள்ள ஒரு மதரசாவை இஸ்லாமியர்களே இடித்த செய்தி அதன் அண்மைகால எடுத்துக்காட்டு.

இம்முறை காவல்துறையோ அல்லது உள்ளூர் நிர்வாகமோ இடிப்பை நியாயப்படுத்த,  கட்டிடம் இடியும் நிலையில் உள்ளது மற்றும் பாதுகாப்பற்றது போன்ற ஒரு “பகுத்தறிவு” காரணத்தை தேட வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு முந்தைய மூன்று நிகழ்வுகளிலும் செய்ய வேண்டியிருந்தது. “ஜிஹாதி’ நடவடிக்கைகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில், உள்ளூர்வாசிகள் தாமாக முன்வந்து மதரசாவையும் அதை ஒட்டியிருந்த குடியிருப்பையும் இடித்துத் தள்ளினார்கள்” என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை: பொதுப்பாதையில் பிணத்தைத் தூக்கிச் செல்ல போராடிய தலித் மக்கள்

அசாமின் பிற பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்களும், ​​அவர்களை தூண்டிவிடும் போது தாங்கள் ‘ஜிஹாதிகள்’ இல்லை அல்லது ‘ஜிஹாத்’ ஆதரவாளர்களும் இல்லை என்பதை நிரூபிக்க இதுபோன்ற செயல்களைச் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்புடனும்,  இது அத்தகைய செயல்களுக்கு ஒரு தொடக்கமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடனும்,  மதரசாவை முதன்முதலில் தானாக முன்வந்து இடிப்பதாக ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக இதனை வெளியிட்டன.  மேலும் இது போன்ற இடிப்புகள் அரசு செலவையும், வேலையையும் மிச்சப்படுத்தும். இதற்குப் பிறகு, சமூகத்தில் மறைந்திருக்கும் ‘ஜிஹாதி’களை ‘ஸ்லீப்பர் செல்கள்’ என்று அடையாளம் கண்டு காவல்துறையிடம் ஒப்படைக்கும் அளவுக்கு இஸ்லாமியர்கள் நல்லவர்களாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.

உண்மையில், இவ்வாறு ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது. வெளியூர் இமாம் யாராவது தங்கள் பகுதிக்கு வந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும், “வெளியிலிருந்து” வரும் அனைத்து இஸ்லாமியர்களும் இவ்வாறு சந்தேகத்திற்குரியவர்கள்.  எனவே அவர்களிடமிருந்து தங்களை விடுவித்துக் கொள்வது இஸ்லாமியர் சமூகத்தின் கடமையாகும் என்றும்  மாநில இஸ்லாமியர்களை சர்மா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கு முன், ஒரு மாத கால இடைவெளியில், அசாம் நிர்வாகத்தால், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில், மூன்று மதரசாக்கள் இடிக்கப்பட்டன. அசாமின் போங்கைகான் மாவட்டத்தில் உள்ள மார்கசூல் மா-ஆரிஃப் குவாரியானா மதரஸா இடிக்கப்பட்டதற்குக் பேரழிவைத் தாங்காது என்றும்,  அஸ்ஸாமில் உள்ள இஸ்லாமியர்களின் பாதுகாப்பு குறித்து அரசு நிர்வாகம் நிச்சயம் கவலைப்படுகிறது! என்றும் காரணம் கூறப்பட்டது.

ஆனால் இவை நீதிமன்றங்களை ஏமாற்றுவதற்கான தெளிவான சாக்குகளாக இருந்தன. இதுபோன்ற நிறுவனங்களை “தேச விரோத” நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் வரை இதுபோன்ற இடிப்புகள் தொடரும் என்று  ​​அசாம் முதல்வர் அதை வெளிப்படையாகக் கூறினார். “எங்கள் ஒரே நோக்கம் அவை ‘ஜிஹாதி’ கூறுகளால் பயன்படுத்தப்படாமல் பார்த்துக் கொள்வதுதான். ஒரு மதரசாவை ‘ஜிஹாதி’ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தாவிட்டால், அவற்றை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லை,” என்றும் அவர் கூறினார்,

கோயில் வழிப்பாடுகளில் சாதி, நிற அடிப்படையில் பாகுபாடு கூடாது – உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜிஹாதியின் செயல்பாடுகளை சட்டப்பூர்வமாக வரையறுப்பது கடினம், ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் அங்கத்தினர்களின் மனதில் இந்த வார்த்தை பெரும் ஆதாயத்தைக் கொண்டுள்ளது. அசாமில் உள்ள இஸ்லாமியர்களை இழிவுபடுத்த அரசு நிர்வாகம் பயன்படுத்தும்  சொல்லாட்சி வழக்குகளில் ‘ஜிஹாதி’யும்  ஒன்றாகும்.  இது போன்று பல உள்ளன.  அவற்றில் மூன்றைப் பற்றி சிந்திக்கலாம்.

அவர்கள் முதலில் பயங்கரவாதிகளாகக் கட்டமைக்கப்படுகிறார்கள் – அதிலும் குறிப்பாக ‘ஜிஹாதி’  வேறு எந்த வகையான பயங்கரவாதிகளையும் விட மோசமான பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள்.  இரண்டாவதாக, அவர்கள் சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களாகவும்,  குடியேறுபவர்களாகவும்  காட்டப்படுகிறார்கள்.  அவர்கள் அசாமின் நிலங்களை ஆக்கிரமித்து, “பூர்வீக” அசாமிகளை நிலமற்ற விவசாயிகளாக மாற்றுபவர்களாகக் காட்டப்படுகிறார்கள். கடைசியாக ஆனால் குறைந்தது அல்ல, அவர்கள் மேலே உள்ள இரண்டு கட்டங்களுக்குள் அடங்காவிட்டாலும், அவர்களை  நம்பிக்கை   அற்றவர்களாகவும், அசாமிய கலாச்சாரத்திற்கு ஆபத்தானவர்களாகவும் காட்டப்படுகிறார்கள்.  அங்கு அசாமிய சமூகத்தின் மீதான அவர்களின்  நம்பிக்கை அடிக்கடி கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

‘ஜிஹாதி’யின் உருவம், ஒரு இஸ்லாமியர் அமைப்பு எவ்வாறு கருதப்படுகிறது என்ற மக்களின் உணர்வை ஈர்க்கிறது.  இதனை தற்போதைய மாநில அரசு அசாமில் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை ஆயுதமாக்குவதற்கு மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறது. மிக நீண்ட காலத்திற்கு முன்பு அல்ல, அண்மையில்தான், 2020 ல் அசாம் ரத்துச் சட்டத்துடன், மதரசா கல்விக்கான அரசு நிதியுதவி நிறுத்தப்பட்டது. இந்த சட்டம் இந்தியாவில் சிறுபான்மையினருக்காக வடிவமைக்கப்பட்ட பல அரசியலமைப்பு பாதுகாப்புகளை (26 வது பிரிவு 29வது பிரிவு, 30வது பிரிவு, 330A வது பிரிவு 330Bவது பிரிவுஆகியவற்றை)  மீறுகிறது. இந்தச் சட்டம் அசாமில் மதரசாக்கள் நிறுவன ரீதியாக இடிக்கப்படுவதற்கான சான்றாகும். குறிப்பாக மாநிலத்தில் சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூட துடைத்தெறிவதில் இந்த அரசாங்கம் பின்வாங்குவதில்லை என்பதில் ஆச்சரியமில்லை.

2021ம் ஆண்டு  அசாம் பசு பாதுகாப்புச் சட்டம், மாநிலத்தில் கால்நடைகளை கொலை செய்தல், உண்ணுதல் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றை ஒழுங்குபடுத்துகிறது. இந்தச் சட்டத்தை ஆதரித்த அசாம் முதல்வர், மத நல்லிணக்கத்தைப் பேண வேண்டிய பொறுப்பு இஸ்லாமியர்கள் மீதும் உள்ளது என்றும், இந்தச் சட்டம் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார். இப்போது, ​​ இந்த சட்டம் ஒரு கோவில், சத்திரம் மற்றும் அதிகாரிகள் பரிந்துரைக்கும் வேறு எந்த ஒரு நிறுவனத்திற்கும் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் கால்நடைகள் கொலை செய்யப்படுவதைத் தடைசெய்கிறது.

கூறியது ஒன்று செய்தது வேறு – உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என். வி. ரமணாவின் செயல்பாடுகள்

இந்தச் சட்டம் எந்தப் பகுதியிலும், பசுவதை மற்றும் இறைச்சி உண்பதில் இருந்து இஸ்லாமியர்களை விலக்கி வைக்க அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. ஆனால் இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகள் உட்பட நீங்கள் எங்கு வேண்டுமானாலும் கோவில் கட்டலாம் என்பது நமக்குத் தெரியும். ஒரு சமூகத்தின் உணவுப் பழக்கத்தை மாற்றும்போது நீங்கள் பெறும் இன்பம் வேறு வகைப்பட்டது. இதைத்தான் சர்மா தனது இந்துக்களுக்கு வழங்குகிறார்.காங்கிரஸ்  சட்டமன்ற உறுப்பினர் ஷெர்மன் அலி மியா சமூகத்தின் அருங்காட்சியகம் என்ற யோசனையை முன்வைத்தபோது, ​​சர்மா உட்பட பலரால் பகிரங்கமாக அச்சுறுத்தப்பட்டார். தேர்தல் முடிந்ததும் ஷெர்மன் அலி அகமது சிறைக்கு அனுப்பப்படுவார் என்றும், ஸ்ரீமந்த சங்கர்தேவ கலாக்ஷேத்திரத்தில் லுங்கிகளை வைக்க வேண்டும் என்று கூறியதற்காக அவர் சிறைக்கு அனுப்பப்படுவார்  என்றும் முதல்வர் கூறினார். அசாமில் உள்ள இஸ்லாமியர்கள் என்று வரும்போது அரசியல் உணர்ச்சிகளின் தன்மை இப்படித்தான் இருக்கிறது.

மேலும் வன்முறை நிறைந்த வெளியேற்ற நடவடிக்கைகள்

இஸ்லாமியர்கள் மீது அவர்களின் அனைத்து நடைமுறை  வாழ்க்கையின்  மீதும் ஒட்டுமொத்தமான தாக்குதல் நடக்கிறது என்பது தெளிவாகிறது. தொடர்ந்து அவர்கள் வாழ்நிலத்திலிருந்து அப்புறப்படுத்துவது   அவர்கள் பல வழிகளில் குறிவைக்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. இது போன்ற  ஒரு வழியில்தான் மொய்னுல் ஹக் கடந்த ஆண்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்து அசாமிய மொழி  பேசுபவர்கள் மீதான கற்பனையான அட்டூழியத்திற்கு “பழிவாங்கும் செயல்” என்று இதனை முதலமைச்சர் நியாயப்படுத்தினார்.இத்தகைய வல்லடியாக வாழ்நிலத்திலிருந்து அப்புறப்படுத்துவது   அதிக அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அவை இனி தலைப்புச் செய்திகளாக வராது. இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வகையில், அவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் சொத்துக்கள் இருப்பதாகவும்,  இல்லாவிட்டால் ஏன் அவர்கள் வெளியேற்றப்படுவதை அமைதியாக ஏற்றுக்கொள்கிறார்கள்? அவர்கள்  ஏன் வாழ்நிலத்திலிருந்து விலகிச் செல்கிறார்கள்?  எனவும் கேட்கிறார்கள். வெளியாட்களிடம் இருந்து விடுவிக்கப்பட்ட நிலத்தை மாநிலத்தின் வளர்ச்சிக்காக வழங்குவதாக மாநில அரசு அறிவிக்கிறது. இதன் பொருள் என்ன என்பதை மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.வெளியேற்றும் நிகழ்வு குறித்த முக்கிய விவாதங்களில், மாநிலத்தின் பல்வேறு வைணவ நிறுவனங்களுக்குச் சொந்தமான சத்திர நிலத்தின் ஆக்கிரமிப்பு பற்றிய விவாதமும் ஒன்று. வைணவ நிறுவனங்களும் அசாம் அரசாங்கமும் எப்போதும் வரலாற்று ரீதியாக நண்பர்களாக இருந்து வந்துள்ளனர் என்பதும்,  இந்த நட்புறவில் “வங்காளதேசம்”  ஒரு பொது எதிரி என்பதும் அனைவரும் அறிந்த உண்மை. கடந்த காலங்களில் இவர்களுக்கிடையே முக்கிய பரிசுகள் பரிமாற்றப்பட்டுள்ளன.  அவை இன்னும் வலுவான உறவுகளை உருவாக்கி   உள்ளன.  அவை மாநிலத்தில் உள்ள இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவதை நிறுத்தவில்லை.

கொரோனாவை கட்டுப்படுத்த ராணுவமயமான இலங்கை – மக்கள் கிளர்ந்தெழுந்தது எவ்வாறு?

மதரசாக்களை இடிப்பது இஸ்லாமியர்களைக் குறிவைப்பதற்கான அண்மைக்கால வழிமுறையாகும். மதரசாக்கள் ஏழை இஸ்லாமியர்களுக்கு கூரை மற்றும் உணவு வழங்குவதை நாம் அறிவோம். அவர்களைத் தாக்குவதன் மூலம், அசாம் முதல்வர் மற்ற இஸ்லாமியர்கள் அவர்களை நிராகரிக்க அழைக்கிறார். ஆனால் அவர்களின் இதயத்தில் எங்கோ  ஒரு மூலையில், இஸ்லாமியர் என்ற உருவத்தைத்தான் அவர் குறி வைக்கிறார் என்பது அவர்களுக்குத் தெரியும். எல்லா இஸ்லாமியர்களும்,  மதரீதியாகப் பார்த்தால் ‘ஜிஹாதிகள்தான்’இப்போது, ​​அவர்களின் தனிப்பட்ட உரிமைகள் கூட பெருகிய முறையில் மீறப்படுகின்றன. ஆனால் அவர்கள் அரசுக்கு நம்பிக்கையுடன்  இருப்பதையும், அவர்கள் அதற்கு உண்மையானவர்கள்   என்பதையும் நிரூபிக்க, அவர்கள் தங்களுக்குள்ளேயே வெளியாட்களை கண்டுபிடித்து அரசிடம் ஒப்படைக்க வேண்டும். பழங்குடி இஸ்லாமியர்கள் என்ற வகையை உருவாக்கி, சமூகத்தின் பொதுவான அடிப்படைகள், நெறிமுறைகள் மற்றும் கட்டமைப்பை அழிப்பதற்கு சர்மா வழி காட்டியுள்ளார்.

இத்தகைய வேறுபாடுகளை சட்டப்பூர்வமாக்குவது தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (NRC) செயல்முறையுடன் தொடங்கியது.  இது முக்கியமாக வெளியாட்களை அதிகாரப்பூர்வமாக உருவாக்கத் தொடங்கப்பட்டது. இப்போது அது இன்னும் புதுமையான முறையில் தொடர்கிறது: ‘குற்றவாளிகளை’ சுட்டுக் கொல்லலாம்.  ‘வெளியாட்கள்’ அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும், ‘ஜிஹாதிகள்’ செயலிழக்கச் செய்ய வேண்டும். இப்போது பொறுப்பு இஸ்லாமியர்கள் மீது உள்ளது. தங்களுடைய நலனுக்காக தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்துப் போராடினால், தங்கள் நலனுக்காக மேற்கூறியவற்றை  எல்லாம் செய்யும் அரசுக்கு நன்றி சொல்லாததற்காக அவர்கள்     நம்பிக்கையற்றவர்கள்,  நன்றி கெட்டவர்கள் என்று நிரூபிக்கப்படுகிறார்கள். அவர்கள் அடிமை  நிலையை ஏற்கும்படி கேட்கப்படுகிறார்கள். பெரும்பான்மை சமூகத்தினரிடமிருந்து கோபத்தின் எந்த அறிகுறியும் இல்லை.

www. the wire.in இணையதளத்தில் அபூர்வானந்த்  மற்றும் சூரஜ் கோகோய் எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்

Kallakurichi Sakthi School is behind Karthik Pillai – Balabharathi | Kallakurichi Case Latest Update

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்