Aran Sei

’ஒரு மரம் தன் பணியை நிறைவு செய்திருக்கிறது’ – நடிகர் விவேக்

நகைச்சுவை நடிகர் விவேக் தன்னுடைய நடிப்புக்காக எந்த அளவு நினைவுகூறப்படுகிறாரோ அது போலவே அவரது சூழலியல் ஆர்வமும் முக்கியத்துவம் வாய்ந்தது.

மரம் நடுதலை தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டவர்.அதுமட்டுமல்லாது அவரது நண்பரும் முன்னாள் குடியரசுத் தலைவருமான ஏ.பி.ஜே அப்துல் கலாமிற்கு புகழ் சேர்க்கும் வகையில் புவி வெப்பமயமாதலுக்கு எதிராகப் மரம் நடுதலை பிரச்சாரமாக  மேற்கொண்டார்.

ரெம்தேசிவிர் மருந்துகளை அவசரமாகக் கோரிய மகாராஷ்டிரா அரசு – அலட்சியமாகப் பதிலளித்த பிரதமர் அலுவலகம்

கடந்த 2011 ஆம் ஆண்டு பசுமை கலாம் என்ற திட்டத்தைச் செயல்படுத்தி 32.33 லட்சம் மரக்கன்றுகளை நட்டார். மேலும், தன் மகனின் பெயரிலான ஸ்ரீ பிரசன்னா அறக்கட்டளை வழியாக 1 கோடி கன்றுகளை நடவும் திட்டமிட்டுருந்தார். சூழலியல் பாதுகாப்பு,புவி வெப்பமயமாதல் ஆகியவற்றை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட தமிழகம் முழுதும் பயணித்தும் இருக்கிறார்.

அப்துல் கலாமின் தீவிர பற்றாளராக இருந்த நடிகர் விவேக் பிற அமைப்புகளின் மூலமாகவும் மரக்கன்று நடும் பணிகளிலிலும் ஈடுபட்டு வருந்தார். கடந்த டிசம்பர் மாதம் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் மரம் நடும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்.

மறைந்த நடிகர் விவேக் குறித்து பல்நோக்கு மருத்துவமனையின் முதன்மை அதிகாரி வி.ஆனந்தகுமார் நினைவு கூறுகையில், “கடந்த செப்டம்பர் மாதம் ஒரு மாலை பொழுதில் என்னை அழைத்து எனது கொரானா தடுப்பு பணிகள் குறித்து பாராட்டினார். தொடர்ந்து தொடர்பிலும் இருந்தார். ஓமந்தூரார் வளாகத்தில் ’மியவாகி வனம்’ அமைக்க மரம் நட அழைத்தபோது உடனடியாக ஏற்றுக்கொண்டார். மரம் நடுதலின் மீது மிகுந்த ஆர்வம் உடையவர், அதற்காக மக்களோடு மக்களாக நின்றவர்” என்றும் கூறியுள்ளார்.

‘கும்பமேளா சென்றவர்கள் கொரோனாவை பிரசாதமாக மக்களுக்கு வழங்கக்கூடாது’ – மும்பை மேயர் எச்சரிக்கை

மேலும்,அவரது சமூக செயல்பாடு மரம் நடுதலோடு நின்றுவிடவுமில்லை, சுகாதார விழிப்புணர்வு பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர், குறிப்பாக தன் மகன் டெங்குவில் இறந்ததற்கு பின் டெங்கு விழிப்புணர்வு பணிகளிலும் ஈடுபட்டார்.

விவேகானந்தரின் கனவான ‘ ஒரு யோசனையை உங்கள் வாழ்க்கைக்காக உருவாக்கிக் கொள்ளுங்கள் : அதைக் குறித்தே சிந்தியுங்கள், கனவு காணுங்கள், அந்த எண்ணத்திலேயே வாழுங்கள்” என்ற கருத்துக்குப் பொருத்தமாக வாழ்ந்தவர் நடிகர் விவேக் என்று அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

‘கிரிஜா வைத்தியநாதனை வட அல்லது மேற்கு மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் நியமிக்க வேண்டும்’ – எம்.எச்.ஜவாஹிருல்லா

மரம் நடுதல் வெப்பமயமாதலை மட்டுமல்லாது மக்களுக்கு உயிர் காற்றையும் வழங்குகிறது என்று எண்ணி வாழ்ந்த நடிகர் விவேக்கின் உயிர் காற்று இன்று நம் வளிமண்டலம்  முழுதும்  நிறைந்துள்ளது. ஒரு மரம் தன் பணியை நிறைவு செய்திருக்கிறது..!

source; the hindu

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்