Aran Sei

உபா சட்டத்தில் சிறுவன் கைது – தன் இயலாமையால் குழந்தைகளிடம் ’வீரத்தைக்’ காட்டுகிறதா அரசு?

னது மகனை மீட்டு வந்து விடலாம் என்ற கனவோடு பும்ஹாமா கிராமத்தைச் சேர்ந்த, 55 வயதான கைஃப்* கடந்த ஐந்து நாட்களாக நாள்தோறும் காலையில் ஐந்து கிமீ தூரத்தில் உள்ள குப்வாரா காவல் நிலையத்திற்கு நடையாய் நடக்கிறார். அவரது 15 வயதான இளைய மகன் ஜஹாப்பை* மே 29 ம் நாள் அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு மூவருடன் கைது செய்ததைத் தொடர்ந்து, காவல்துறையின் உத்தரவுப் படி, அவர்களுடைய கிராம பஞ்சாயத்துத் தலைவரின்   தலைமையில் கிராம மக்கள் அனைவரும் காவல் நிலையத்திற்கு முன் தாமாகவே அணி திரண்டனர்.

ஒரு இறுதிச் சடங்கின் போது தேசத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பியதாகக் கூறி, 1967 உபா சட்டத்தின் 13வது பிரிவின் கீழ் அந்த கிராமத்தைச் சேர்ந்த எட்டு இளைஞர்களைக் காவல்துறைக்  கைது செய்தது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவரான ஜஹாப்பின் கைது ஜம்மு காஷ்மீரில் இந்த கொடூர பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதற்கு எடுத்துக்காட்டு.

‘தள்ளுவண்டி உணவு கடைகளை பார்சல் முறையில் செயல்பட அனுமதித்திடுக’ – தமிழக அரசுக்கு சோசலிச தொழிலாளர் மையம் கோரிக்கை

முழக்கம் எழுப்பியதற்காக கைது

ஜம்மு காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரை இயற்கை அழகு மிக்க குப்வாரா மாவட்டத்துடன் இணைக்கும் முக்கிய சாலையில், பும்ஹாமா கிராமத்தினைச் சேர்ந்த 29 வயதான முஹம்மது அமீன் தர் என்பவரை மே 28 ம் நாள் காலை 9 மணியளவில் ஒரு கார் மோதி விட்டது. அவரை மருந்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்து விட்டார். அடுத்த நாள் நடந்த இறுதிச் சடங்கில் அவரது சொந்த கிராம மக்களுடன் அக்கம்பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.

இறுதிச் சடங்கு முறைப்படி ஓதப்படும் மத முழக்கங்ஙளுக்கிடையில் கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் சுதந்திரத்திற்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பினார். “ஹம் கியா சாஹ்தே(உங்களுக்கு என்ன வேண்டும்)” என்ற முழக்கத்திற்கு,  சிலர் “ஆசாதி(விடுதலை) என்று மறு முழுக்கம் செய்தனர். இந்தக் காணொளி மறுநாள் சமூக ஊடகங்களில் அதிவேகமாகப் பரவியது‌. ட்ரக்முல்லாவில் உள்ள காவல் முகாம் கிராம பஞ்சாயத்து தலைவரிடம் எட்டு பேருக்குத் தகவல் தெரிவித்து நேரில் கூட்டிவரக் கூறியது. “அந்த முழக்கங்களை எழுப்பியது யாரென்று எங்களுக்குப் புரியவில்லை,” எனக் கூறுகிறார் பஞ்சாயத்துத் தலைவர் நாசிர் அகமது தர். குற்றம்சாட்டப்பட்ட எட்டுப் பேரில் நான்கு பேரை சமாதானப்படுத்தி தன்னுடன் ட்ரக்முல்லாவில் உள்ள காவல் முகாமிற்கு அவர் அழைத்துச் சென்றார். அவர்களை காவலில் எடுத்து பின்னர் குப்வாரா காவல்நிலையத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்று விட்டனர். “அந்த நால்வரில் மூன்று பேர் இறுதிச் சடங்கில் பங்கேற்கவே இல்லை. நான்காவது நபர் ஒரு சிறுவன்.  எனினும் அவர் காணொளியில் இருக்கிறார்,” என்று கூறுகிறார் நாசிர்.

குடி உரிமை திருத்தச் சட்ட (CAA) அமலாக்கத்தை மீண்டும் தீவிரமாக்குகிறது மோடி அரசு – அ.மார்க்ஸ்

நாசிரும், கிராமத்தின் மூத்தவர்களும் காவல்துறையினரிடம் அந்த சிறுவனை விடுவித்து விடுமாறு எவ்வளவோ முயற்சித்தும் காவல்துறை மனம் மாறவில்லை. குப்வாரா காவல் நிலையத்தில்,” தனது மகன் அப்பாவி என்றும், சிறுவன் என்றும், ஜஹாப் ட்ரக்முல்லாவில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் என்றும் கைஃப் கூறினார். ” நான் அவனது பிறப்புச் சான்றிதழைக் கூடக் காட்டினேன். ஆனால் அவர்கள் எவ்வித கருணையும் காட்டவில்லை‌. அவனை ஸ்ரீ நகருக்கு அனுப்பி விட்டனர்,” என்று கூறுகிறார் அவர்.

ஐந்து பிள்ளைகளுக்குத் தந்தையான, தொழிலாளியான கைஃபிற்கு தனது மகன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டின் பொருள்கூட விளங்கவில்லை‌. “பிணை மனு விசாரணைக்குப் பின் தனது மகனை விடுவித்து விடுவார்கள்,” என அவர் நம்புகிறார். ” இந்த நடவடிக்கைகள் குறித்து எனக்கு எதுவும் விளங்கவில்லை. அவர்கள்(காவல் துறை) அடுத்த சில நாட்களில் அவனை விடுவிக்கப்படுவார் எனக் கூறுகிறார்கள். நான் படிப்பறிவில்லாதவன். அவனுடைய விடுதலைக்காக மூலைக்கு மூலை அலைந்து நான் உணர்விழந்து வருகிறேன்,” என்கிறார் கைஃப்.

ஈழத் தமிழர்களை என்னவாக சித்தரிக்கிறது TheFamilyMan2 ? – ர. முகமது இல்யாஸ்

பிற குடும்பங்கள்

கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவரான 28 வயதான அஜாஸ் அகமது ஷேக் இதய தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மீது இதுவரை எந்தவித குற்றவியல் வழக்கும் இல்லை. அஜாஸூக்கு இரண்டு சகோதரிகளும், ஒரு சகோதரனும், நோய்வாய்ப்பட்ட பெற்றோர்களும் உள்ளனர்.

“அஜாஸ் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவே இல்லை. அதிவிரைவாகப் பரவிய அந்தக் காணொளியில் அவருக்கு எதிரான எந்த ஆதாரமும் இல்லை,” என்கிறார்  அரசு ஊழியரும், அவரது மாமாவுமான ஃபரூக் அகமது கனி. அஜாசை கைது செய்ததிலிருந்தே அவரது குடும்பத்தினர் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். ” அவர் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் அதிர்ந்து போயிருக்கிறார்கள். நாள் முழுவதும் அழுதுக் கொண்டே இருக்கிறார்கள்,” என்று கூறும் ஃபரூக், அஜாஸ் ஒரு சிறிய தேநீர் கடையை நடத்தி சிறிய அளவில் வருமானம் ஈட்டி வருவதாகவும், “கைக்கும் வாய்க்கும் பற்றாத வாழ்க்கையை நடத்தி வருவதாகவும்” கூறுகிறார்.

அஜாஸை விடுவிக்கும் போராட்டத்தில் அவர்கள் வட காஷ்மீர் நாடாளுமன்ற மேலவை  உறுப்பினரான ஃபையாஸ் அகமது மிர் அவர்களையும் சந்தித்தனர். கைஃபை போலவே அஜாஸ் குடும்பத்தினருக்கும் உபா சட்டம் என்றால் என்னவென்றே தெரியாது. ” நாங்கள் உள்ளூர் வழக்கறிஞர் ஒருவரை அணுகி உள்ளோம். விரைவில் கிராமத்தினர் விடுவிக்கப்படுவார்கள் என நம்புவதாகக் கூறுகிறார் ஃபரூக்.

மோடியின் ஏழு(ஏழரை) ஆண்டுகள்: இந்தியா ஏன் ஒரு ஜோ பைடனைத் தேட வேண்டும்?

பாரமுல்லாவில் உள்ள உபா நீதிமன்றத்தில் அந்த நால்வரின் பிணை மனுவைத் தாக்கல் செய்திருப்பதாக வழக்கறிஞர் மிர் கயூம் தெரிவிக்கிறார். அரசு தரப்பு காவல்துறையிடம் அறிக்கையை கேட்டுள்ளது. அறிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன் வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்படும்,” என்று கூறும் வழக்கறிஞர் க்யூப் தனது தரப்பில் உறுதியாக உள்ளார். குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என அவர் நம்புகிறார். ” குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் சிறுவன்.  எனவே நாங்கள் பிணை விடுதலைக்காக சிறார் நீதிமன்றத்தை அணுகி உள்ளோம்,” என்று அவர் கூறுகிறார். சிறுவனின் குடும்பத்தினர் ஃபையாஸ் அகமது மிர்ரை அணுகியவுடன், அவர் மூத்த காவல் அதிகாரிகளைத் தொடர்புக் கொண்டு பேசினார். ஆனால் காவல்துறையினர் அதற்குள்ளாக வழக்கை பதிவு செய்து விட்டனர் என்கிறார் மிர். “இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போது நான் இது காஷ்மீர் மக்களைத் தான் மிகவும் அதிகமாகப் பாதிக்கும் என்று எச்சரித்தேன். அது இப்போது நடப்பதை நாம் பார்க்கிறோம்,” என்கிறார் அவர்.

கைது செய்யப்பட்ட மற்றவர்களில் 31 வயதான காய்சிர் அகமதுவும், 27 வயதான பிலால் அகமது மிர்ரும் சகோதரர்கள். அவர்கள் இருவரும் ஒரு உதிரி பாகங்கள் கடையை நடத்தி, எளிமையான வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள் என்கின்றனர், அவர்களது ஒரு குடும்ப உறுப்பினர். “பிலால், காய்சிர் இருவரும்  அடுத்த மாதம் நடக்க உள்ள காய்சிரின் திருமண ஏற்பாடுகளில் ஈடுப்பட்டிருந்தனர்,” என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத அவர்களுடைய உறவினர். ” காவல்துறை அவர்கள் முழக்கங்களை எழுப்பியதாக குற்றம் சாட்டி உள்ளனர். ஆனால் அவர்கள் காணொளியில் இல்லை. அந்தக் காணொளி நூற்றுக்கணக்கானவர்கள் அந்த முழக்கத்திற்கு  பதில் முழக்கம் எழுப்பினர். அதற்காக காவல்துறை அவர்கள் எல்லோரையும் கைது செய்யுமா? ” என அவர் வியப்புறுகிறார். ” இது அநீதி மற்றும் மிருகத்தனத்தின் உச்சமாக உள்ளது‌. இத்தகைய சிறு சிறு பிரச்சனைகளுக்காக மக்கள் கைது செயய்ப்படுவார்களேயானால் எங்கள் எல்லோரையும் சிறையில் அடைத்து கதையை முடிவுக்குக் கொண்டு வரலாம்,” என்கிறார் அவர்.

பாஜக அரசால் வீழ்த்தப்பட்ட செங்கல்பட்டு மருந்து உற்பத்தி நிறுவனத்தின் வரலாறு – சூர்யா சேவியர்

அடையாளம் தெரியாத காரணத்தால் இதுவரை நான்கு பேரைக் கைது செய்துள்ளோம். அவர்கள் இறுதிச் சடங்கில் தேச விரோத முழக்கங்களை எழுப்பினர். அவர்களை உபாவில் கைது செய்துள்ளோம்,” என்கிறார் ஒரு மூத்த காவல் அதிகாரி. அதில் ஒருவர் சிறுவனாக இருப்பதால் சிறார் இல்லத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அவர்கள் நால்வரையும் கைது செய்தத்ற்கு அடிப்படை காணொளிதான்‌ என்று கூறும் அந்த காவல் துறை மூத்த அதிகாரி,” எங்களிடம் காணொளி ஆதாரம் உள்ளது,” என்றும் கூறுகிறார்.

உபா வழக்குகள் அதிகரிப்பு

மூத்த குற்றவியல் வழக்கறிஞர் மிர் உர்ஃபி, ஜம்மு காஷ்மீர் காவல் துறை உபா சட்டத்தை தன்னிச்சையாகப் பயன்படுத்துகிறது என்பதற்கு இந்த குப்வாரா நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு.” காவல்துறை அவர்களை இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் அமைதியை சீர்குலைத்ததாக பதிவு செய்திருக்க முடியும். அதற்குப் பதிலாக “கொடூரச் சட்டத்தின்” கீழ் குற்றம் சாட்டியுள்ளனர்” என்கிறார். வழக்கறிஞர் மிர் அவர்களுக்கு மாநிலம் முழுவதும் குற்றவியல் சட்ட வழக்குகளில் 15 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இந்த ஒன்றியப் பகுதியில் மக்களின் சுதந்திரத்திற்கான உணர்வுகளை உபா சட்டம் மூலம் அரசு அடக்க நினைகிறது.

லட்சத்தீவை ஆட்டிப் படைக்கும் இந்த பிரஃபுல் படேல் யார்? – பேராசிரியர் அ.மார்க்ஸ்

“உபா சட்டத்தைப் பார்த்து மக்கள் அச்சப்படுகிறார்கள். மக்களிடையே அச்சத்தை விதைப்பதில் அரசு வெற்றிப் பெற்றுவிட்டது என நாம் கூற முடியாது. ஆனால் உபா சட்டத்தின் கீழ் பிணை விடுதலைப் பெறுவது மிகவும் சிரமமானது. அது மக்களை கவலைக்குள்ளாக்கி,  உடைத்து விடுகிறது,” என்கிறார் மிர்.

முன்பு, ஜம்மு காஷ்மீர் காவல் துறை பயங்கரவாதம் மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம்(TADA), பயங்கரவாதத் தடைச் சட்டம் (POTA), பொது பாதுகாப்புச் சட்டம் (PSA) போன்ற பாதுகாப்புச் சட்டங்களை பயன்படுத்தினர். இப்போது உபா நடைமுறையில்  உள்ளது. ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவி வரும் சுதந்திரத்திற்கு ஆதரவான உணர்வு மடிந்து விடவில்லை. 2019, ஆகஸ்டில் 370 வது பிரிவு நீக்கப்பட்டதிலிருந்து கொடூர உபா சட்டத்தின் மூலம் எந்த ஒரு எதிர்ப்பையும் குற்றமாகக் காட்டுவது நடக்கிறது. ஒன்றியப் பகுதியில் உள்ள பலரது கருத்தின் படி 2019 லிருந்து கடுமையான குற்றங்களுக்காக மட்டுமின்றி, ஐபிசியின் கீழ் வரும் சிறு சிறு குற்றங்களுக்கும் கூட உபா சட்டம் பயன்படுத்தப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் நிலைமையை மேலும் மோசமாக்க, காவல்துறை ஒரே நபர் மீது உபா மற்றும் பிஎஸ்ஏ  ஆகிய இரு சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டைப் பதிவு செய்கிறது. இது விசாரணையை தாமதமாக்குகிறது. பிஎஸ்ஏ வைப் பரவலாக பயன்படுத்தியதற்காக இந்தியா உலகளவில் விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளது. மேலும் இப்போது உபாவை அதற்கு மாற்றாகவோ அல்லது அதனுடன் சேர்த்தோ பயன்படுத்துகிறது.

மனித குலத்திற்கு எதிரான குற்றத்திற்கு நாம் சாட்சியாக நிற்கிறோம்: அருந்ததி ராய்

ஜனநாயகத்திற்கான இடம் சுருங்கி வரும் இந்தப் பகுதியில், அதிகாரிகள், ஊடகவியலாளர்களையும், பல்கலைக்கழக மாணவர்களையும், அரசியல்வாதிகளையும், கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களையும் மற்றும் இறுதிச் சடங்கில் சுதந்திர உணர்வுக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்புபவர்களையும் உபா சட்டத்தின் கீழ்  கைது செய்கின்றனர்.  அதிகாரிகளிடம் உள்ள தனது மகனின் இறந்த உடலை கேட்ட தந்தையைக் கூட உபா சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

தேசிய குற்ற ஆவண ஆணையம் சேகரித்த தரவுகளின் படி ஜம்மு காஷ்மீரில் 2019 ல் மட்டும் 255 பேர் உபா சட்டத்தின் கீழ் குற்றப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ” ஸ்ரீ நகர், கண்டர்பால், பட்காம், புல்வாமா ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய ஸ்ரீ நகரில் உள்ள உபா நீதிமன்றத்தில் தற்போது வரை 157 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை ஏராளம்,” என்கிறார் வழக்கறிஞர் மிர்.

அந்நியமாகி போன மக்கள்

 மூத்த அரசியல் பகுப்பாய்வாளரும், காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைத் தலைவராகவும் இருந்த ஷேக் சௌகத், பாதுகாப்பின்மை உணர்வு காரணமாகவே அரசு இந்த சட்டத்தை அடிக்கடி பயன்படுத்துகிறது என்கிறார். ” எங்காவது ஏதோ ஒரு வகையிலான எதிர்ப்பை உணர்ந்தாலும் உடனே காவல்துறை அங்கு விரைந்துச் சென்று மக்களைத் துன்புறுத்த முயற்சிக்கின்றது,” என்று கூறுகிறார் அவர். இந்த சட்டத்தின் தாக்கம் பற்றி கருத்துத் தெரிவிக்க அவர் மறுக்கிறார். ஏனெனில், இந்தச் சட்டம் அதன் உண்மையான நோக்கத்திற்காகப் பயன்படுத்தப் படுவதில்லை. ஆனால் முந்தைய, மாநில நிலையில் இருந்த மக்களின் சுதந்திரத்திற்கு ஆதரவான மனநிலையிலிருந்து   விலக்குவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறுகிறார். இந்தச் சட்டத்தைப்  பயன்படுத்திய பின்னும் அந்த தடுக்கும் வேலை எடுபடவில்லை. களத்தில் இன்னும் எதிர்ப்பு உள்ளது. இதற்கு காரணம் இந்த மக்கள் பிரச்சனைகளுக்கிடையில் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர் என்பதுடன் இத்தகைய சட்டங்களைக் கண்டு அவர்கள் இப்போது அச்சப்படுவதில்லை. இந்த நடைமுறை( உபா சட்டத்தின் கீழ் மக்களை குற்றம் சாட்டுவது) முன்னெப்போதையும் விட அதிகமாக இப்போது அவர்களை அந்நியப்படுத்தி விட்டது.

கொரோனா பேரிடர்: வைரசின் இரக்கமின்மைக்கும்,  மோடி அரசின் இரக்கமின்மைக்கும் சம பங்கு உண்டு – மருதையன்

காஷ்மீரில் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் மற்றும் தேசிய புலனாய்வு  அமைப்பு ஆகியன தன்னிச்சையாக செயல்படுவது குறித்து ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர்கள் ஏழு பேர் கொண்ட குழு கடந்த பிப்ரவரியில் அவர்களுடைய பணிகளை மதிப்பிழக்கச் செய்யும் நோக்குடன் செயல்படுவதாக  தனது” ஆழ்ந்த கவலைகளை” வெளிப்படுத்தியது.

ஜஹாப்பைத் தேடி

ஜஹாப்பை கைது செய்து ஐந்து நாட்களாகி விட்டன. தற்போது ஏற்கனவே குறைந்து வரும் தனது செல்வத்தையும் விழுங்கப் போகும் நீண்ட சட்டப் போருக்குத் தயாராக வேண்டியது குறித்து கைஃப் சிந்திக்கத் துவங்கி விட்டார்‌. ” ஊரடங்கு காரணமாகத் தற்போது எனக்கு வேலையை தேடுவதில்லை. மாறாக உபா சட்டம் வேலை செய்கிறது என்பதை கற்றுக் கொள்வது மற்றொரு கனவாக உள்ளது. எனது குடும்பத்தைக் காப்பாற்றும் கூட என்னிடம் போதுமான செல்வம் இல்லை. நான் எப்படி எனது மகனுக்காக வழக்காட முடியும்? என்று கேட்கிறார் கைஃப்.

*. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

www.thewire.in இணைய தளத்தில் கெய்சர் அன்ட்ராபி மற்றும் ஜூபேர் அமீன் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்