Aran Sei

‘அந்தோலன்ஜீவி’கள் (பிழைப்புப் போராளிகள்): 1974 ல் அரசுக்கு எதிராகப் போராடிய போது

“போராட்டங்களில் ஈடுபடாமல் வாழ்க்கையை நடத்த முடியாதவர்களை” விவரிக்க பிரதமர் மோடி “அந்தோலன்ஜீவி(பிழைப்புப் போராளிகள்) “என்ற புதிய சொல்லை உருவாக்கி உள்ளார். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் மாநிலங்களவையில் பதிலளித்த மோடி அவர்களை “ஒட்டுண்ணிகள்” என்றும் விவரித்தார்.

மோடியின் இரண்டாவது பதவிக்காலம் சிஏஏ மற்றும் மூன்று விவசாயிகள் சட்டங்கள் போன்ற சர்ச்சைக்குரிய சட்டங்களுக்கு  எதிராக நாடு தழுவிய எதிர்ப்புப் போராட்டங்களை எதிர்கொண்டது. இந்தப் போராட்டங்கள் இயல்பாகவே ஒரு இயக்கமாக வளர்ந்தாலும், அரசு அவற்றை எதிர்கட்சிகள் அல்லது “தேச விரோதிகள்” என்று அழைக்கப்படுபவர்களால்  எரியூட்டப்படும் ‘சூழ்ச்சி’ எனக் காட்ட முயன்றது. “இந்தக் குழுக்களை (பிழைப்புப் போராளிகளின்) எங்குப் போராட்டம் நடந்தாலும் அங்கெல்லாம் காண முடியும், அது வழக்கறிஞர்கள், மாணவர்கள் அல்லது தொழிலாளர்கள் யார் கிளர்ச்சியை நடத்தினாலும், சில வேளைகளில் முன்னணியிலும், சில வேளைகளில் பின்னாலும் நின்று போராடுவார்கள். போராட்டங்கள் இல்லாமல் அவர்களால் வாழ முடியாது. நாம் அத்தகையவர்களை அடையாளம் கண்டு நாட்டை அவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும்,” என்று அவர் இந்தப் போராடும் குழுக்கள் குறித்துக் கூறுகிறார்.

ப்ரேக் – அப் நல்லது – பொன் விமலா

அமைதியானப்  போராட்டங்கள் மற்றும் போராட்டக்காரர்களை இழிவுபடுத்தும் இந்தக் கருத்துக்கள், 1974 ல் மோடி தனது 20 வயது இளைஞராக குஜராத்தில் நவநிர்மாண் போராட்டத்தில் பங்கேற்றபோது கொண்டிருந்தக் கருத்துக்களுக்கு முற்றிலும் மாறுபட்டவை. ரகு கர்னாட் தனது கட்டுரையில் சுட்டிக்காட்டுவது போல  மோடியின் சொந்த வலைதளத்தில் ஒரு பக்கம் இந்த இயக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது மோடி மக்கள் போராட்டத்தைச் சந்தித்த முதல் போராட்டம் என்றும் சமூக பிரச்சனைகளில் அவரது உலகப் பார்வையை விரிவாக்க அது  குறிப்பிடத்தகுந்த அளவு வழிவகுத்தது என்றும், அதுவே 1975 ல் நரேந்திராவை அவரது அரசியல் வாழ்க்கையின் முதல் பதவியான குஜராத்தில் உள்ள லோக் சங்கர்ஷ் சமிதியின் பொதுச் செயலாளர் பதவி பெற உந்தித் தள்ளியது,” என்றும் விளக்குகிறது.

இந்த இயக்கம் 1973 ல் துவக்கப்பட்டது. அகமதாபாத்தில் உள்ள எல்டி பொறியியல் கல்லுாரி மாணவர்கள் உணவகக் கட்டணம் போன்ற குறைகளை எதிர்த்துப் போராடினர். காவல்துறையினர் தங்கள் வலிமையைப் பயன்படுத்தியபோது போராட்டம்,1974 துவக்கத்தில் மற்ற வளாகங்களுக்கும் பரவி, மாநில அரசைக் குறி வைத்து எதிர்த்த, மாநிலம் தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம், தீவைத்தல் மற்றும் கொள்ளை என நீண்டது.”

அகமதாபாத் மிரர் கருத்துப்படி, நவநிர்மாண் இயக்கம் குஜராத் அரசைப் பதவி நீக்கம் செய்ய வழிவகுத்தது. மேலும் அது பிரதமர் இந்திரா காந்திக்கு எதிரான “தேசிய இயக்கத்தைத்” தூண்டியது. அந்த நேரத்தில் மோடி இளைஞர்களுக்கு எழுதிய  செய்தி பின்னர் சங்கர்ஷ் மா குஜராத் (விசாரணைக் காலத்தில் குஜராத்) என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்டது‌. அந்தச் செய்தியில், மோடி வீதிக்குப் செல்லுங்கள். ‘ ஜனநாயகத்தை மரணமடைய விடாதீர்கள்,’ என்று கூறி இருந்தார்.

வெள்ளத்தில் பலியான உயிர்கள்: கடந்த காலத்திலிருந்து நாம் கற்றுக்கொள்வது எப்போது? – கௌரவ் விவேக் பட்நாகர்

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அகமதாபாத் மிரரில் வெளியிடப்பட்ட அந்தக் கடிதம் இன்றைய போராட்டக்காரர்களுக்கு மதிப்புமிகு அறிவுரைகளை வழங்குகிறது. ஆனால், பிரதமரின் போராட்டம்பற்றிய கருத்தில் உள்ள கடுமையான ஊசலாட்டத்தையும் பிரதிபலிக்கிறது. ” பாரத் மாதாவின் பிள்ளைகளே! இன்று நாடு எந்தத் திசையை நோக்கித் தள்ளப்படுகிறது என்று சிந்தியுங்கள். இன்று செயல்படவில்லை என்றால் நாளை நீங்கள் எதிர் கொள்ள விளைவுகள்குறித்த தீர சிந்தித்துப் பாருங்கள். இந்தியாவின் எதிர்காலத்தைத் தூண்டக்ககூடியவர்கள் நீங்கள்தான். ஏனெனில் இன்றைய இளைஞர்கள் நாளையத் தலைவர்கள். இந்த நாட்டை எழுச்சியுறச் செய்து ஒளிவிடச் செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளப் போவது யார்? இதற்கான பதில் தெளிவானது. அந்தப் பொறுப்பு உங்களுடையது,” என அந்தச் செய்தி துவங்குகிறது.”  தொடர்ந்து மோடி,” நாடு ஏமாற்றுக்காரர்கள், மற்றும் மோசடிக்காரர்களால் அமைதியாகி விட்டது, என்றும் “ஏழ்மை, வேலையில்லாத் திண்டாட்டம், கல்வி அறிவின்மை, ஒழுக்கக்கேடு மற்றும் அடக்குமுறை” எதிர்காலத்தில் இளைஞர்களுக்குத் தாங்க வேண்டிய தவறான குறியாக இருக்கும்.” நாட்டில் இன்று ஜனநாயகம் அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பது எதேச்சதிகாரத்திற்கு வழி செய்து விடும். நீங்கள் தலைகுனிந்து நடக்கும் ஆட்டு மந்தைகளில் ஒருவராக ஆகி விடுவீர்கள்,” என்றும் கூறியிருக்கிறார். 2014 லிருந்து மத்திய அரசு எதிர்ப்புகள் மீதும், கருத்து சுதந்திரம் மீதும்  தாக்குதல் தொடுக்கத் துவங்கியதை விளக்க இதைவிட நல்ல மேற்கோள் வேறு என்ன வேண்டும்.

“இப்போது நீங்கள் போதுமான தியாகங்களைச் செய்யாவிட்டால் யாரை வரலாறு கடுமையாகத் தீர்மானிக்கும்? உங்களைத்தான். கோழைகள் என்று யாருடைய பெயர்களை வரலாற்றாளர்கள் தொகுப்பார்கள்? உங்களுடையதைத்தான்…இந்த நாட்டின் வரலாறு எவ்வாறு எழுதப்பட வேண்டும். பேனாவும் மையினாலுமா? அல்லது இளைஞர்களின் இதயத்திலிருந்து கொட்டும் இரத்தத்தினாலா? நீங்களே முடிவு செய்யுங்கள்,” என்றும் கூடுதலாக அவர் கூறுகிறார்.

‘யானை புக்க புலம் போலத் தானும் உண்ணான்’: மோடியின் அரசும் பொதுநலனும் – ரவி ஜோஷி

நவ்நிர்மான் வளர்ந்து வந்த அதே நேரத்தில் ஏபிவிபி (ABVP) “பீகாரில்  மேலும் அதிக அளவிலான விரிவான எழுச்சிக்கு” திட்டமிட்டுக் கொண்டிருந்தது. மற்றொரு கட்டுரையில் கர்னாட் விளக்கி உள்ளது போல, “பீகாரில் இந்த இயக்கம் காலூன்றியதும், மாணவர்களை மீண்டும் பொது மேடைக்கு அழைத்த, புதிய தலைவரும், சுதந்திரப் போராட்டத் வீரருமான ஜெயப்பிரகாஷ் நாராயண் அல்லது ஜெபி அதில்  இணைந்தார். இதுதான் இந்திரா காந்திக்கு எதிரான இயக்கத்தின் துவக்கமாகும். அந்த இயக்கம் அதிக அளவில் பிரபலமடைந்ததால், அப்போதைய பிரதமர் 1975, ஜூன் 25 ல் நெருக்கடி நிலையை அறிவித்தார்.

பாஜக வும் வலது சாரி குழுக்களும்,” எதிர்ப்பையும், ஆத்திரமூட்டல்களையும் மற்றும் காங்கிரஸ் ஒரு போதும் செய்திராத அளவு அடிபணிதலையும்” மோடி எதிர் கொள்வதைப் போல் கதையைத் தள்ளுகின்றன. ஆனால் உண்மை இதற்கு எதிரானது.

ஐஐடி-களில் அநியாயமாக மறுக்கப்படும் இட ஒதுக்கீடு –  ஆர்டிஐ மூலம் கிடைத்த அதிர்ச்சி தகவல்

” பாஜக அரசுகளைக் கவிழ்க்க ஒரேயடியாக மாதக்கணக்கில் வீதிகளில் மாணவர்கள் கலவரம் செய்வதை, மத்திய அமைச்சர் கொலை செய்யப்பட்டிருப்பதை, மேலும் ஒரு நீதிபதி நாடாளுமன்றத்திலிருந்து மோடியை நீக்குவதை அவர் தேர்தலில் நிற்பதை தடை செய்வதை எல்லாம் கற்பனை செய்து பாருங்கள். அந்த ஆத்திரமூட்டல்கள்தான் நெருக்கடி நிலையை அறிவிக்க வைத்தது. அதை அவர்கள் நியாயப்படுத்த முடியாமல் இருக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால், கடந்த நான்கு ஆண்டுகளில், காஷ்மீருக்கு வெளியே எந்த எதிர்ப்பும், அவசர நிலைக்கு முன்னர் பல ஆண்டுகளாக இந்திரா காந்தி எதிர்கொண்ட இடையூறுகளின் அளவை நெருங்கவில்லை. ஒப்பிட்டுப் பார்த்தால் ஜேஎன்யூவிலும் அல்லது ஜந்தர் மந்தரிலும் நடந்த செயல்பாடுகள் திடீர் இசைக் கும்பல் வகையைச் (flash mob) சேர்ந்தவைகளாகவே இருக்கும்.

 

www.thewire.in இணைய தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

 

https://thewire.in/politics/narendra-modi-andolanjivis-protest-1974-message

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்