Aran Sei

அமித்ஷா கூறும் நாட்டுப்பற்றும் முன்னேற்றமும் – ஹிட்லரை நினைவு படுத்துகிறதா?

மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா  ஒரு நெஞ்சைத் தொடும் அறிக்கையைக் கொடுத்துள்ளார்.

இன்றைய இந்திய இளைஞர்களுக்கு அவர் விடுத்துள்ள செய்தியில், சுதந்திரப் போராட்டத்தில் பங்குக் கொண்டு யாருக்கெல்லாம் “தேசத்திற்காக உயிரை விடும்” நல்வாய்ப்பு கிடைக்க வில்லையோ அவர்கள் எல்லோரும் இப்போது “நாட்டிற்காக” உயிர் வாழ வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் “நாட்டிற்காக”  வாழ்வது என்பது அவரது பார்வையில் “முன்னேற்றத்திற்கு”  பங்களிப்பது, அதிலும் குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி கற்பனை செய்தது போல. அந்தப் பாதை மட்டுமே “நாட்டுப்பற்றை” உள்ளடக்கியது என அவர் காண்கிறார்.

ஏர் இந்தியா – வரலாறும் செயல்பாடுகளும்

உலக நிகழ்வுகளை சுற்றி உலா வந்தால், பிரச்சனைக்குரிய இதன் அமைப்பு முறை கண்முன் வருகிறது. ஜெர்மனியின் இழிபுகழ் கொண்ட மூன்றாவது அரசாட்சி (Third Reich) நம்பமுடியாத  வேகத்தடையற்ற வகையில் “முன்னேற்றம்” என்ற ஒரு வடிவிலான மாதிரியை அமைத்தது. ஆனால் சிறிது காலத்திற்குள் இட்லரால் ஜெர்மனி தன்னைத்தானே அழித்துக் கொள்வதில் அது முடிந்தது.

இதனால், ஒரு  கேள்வி தனக்குத்தானே கேட்டுக் கொள்வது: “முன்னேற்றம்” என்றால் என்ன?

வேறு வகையில் முன்வைத்தால், யார், யாருக்காக, எதை, எந்த வழியில் என்பதுடன் எந்த இலக்கை மனதில் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும்?  இந்தக் கேள்வியையே தலைப்பாகக் கொண்ட ஒரு கட்டுரையை நான் இதே முக்கியமான 1989 ல் எழுதினேன். இன்றைய சூழலில், அதாவது கௌதம் அதானி ஒரு நாளில்1,000 கோடி ரூபாய் சம்பாதிக்க, தங்களுக்கு வழங்கப்பட்ட உஜ்வாலா எரிவாயு உருளைகளை நிரப்பப் வழி தெரியாது எட்டுக் கோடி மக்கள் தவித்து நிற்கிறார்கள் என்பது சிறந்ததாக கருதப்படுகிறதா?

ஆட்கொல்லி புலியும் அரசு செய்ய வேண்டியவையும் – சந்துரு மாயவன்

அடுத்து “நாடு” என்பதைப் பார்ப்போம். ஒரு நாட்டு குடிமக்கள், மற்ற நாடுகளைப் பாதிக்கும் காரணங்களுக்காக தங்கள் உயிரை இழந்த நிகழ்வுகளும் நடந்துள்ளன. தனிநபர்கள், சில புகழ்பெற்றவர்கள், 1936 ம் ஆண்டின் ஸ்பெயினின் உள்நாட்டுப் போரில் பங்கெடுக்கக் கூட்டம் கூட்டமாகச் சென்றனர்.

தெளிவாக,  அமித்ஷாவால் வரையறுக்கப்பட்ட  “நாட்டுப்பற்று” என்ற சொல்லாடல் அவர்களின் செயல்பாட்டை வரையறுக்கவில்லை. நாஜி ஜெர்மனியை தோற்கடிக்க இரண்டாம் உலகப் போரின் போது பல நாடுகள் அணி திரண்டதையும் அது வரையறுக்கவில்லை.

அந்த மக்களும் விரக்தி அடைந்த நாடுகளும், தங்கள் சொந்த நாட்டில், சொந்த நாட்டிற்குரிய காரணங்களுக்காக  போராடுவதை விட மிகப்பெரிய காரணத்திற்காக  போராடினார்கள் என்பது தெளிவாகிறது. அவர்கள் ஒரு குறிப்பிட்ட நாட்டினுடையதன்றி, அனைவருக்குமான விழுமியங்களுக்காகப் போராடினார்கள். எனவே, விரிவான வரையறையில் அவர்கள் எல்லோரும்  நாட்டுப்பற்றாளர்கள் ஆக மாட்டார்களா?

இந்தியாவில் ஜனநாயகத்தை மீட்க வேண்டும் – இரா.விக்ரமன்

மேலும், தனது நாட்டிற்காக உயிர் விடுவது அல்லது வாழ்வது என்பதற்கு என்ன பொருள்? நாடு என்பது என்ன,  மக்களா அல்லது நிலப்பரப்பா?

இரண்டும் என்றால் “மக்கள்” என்பது யார்? பணம் சுருட்டுபவர்களா அல்லது நாட்டின் செல்ல வளத்தைப் பெருக்குபர்களாகவும், நாட்டிற்காக எல்லையில் உயிர் நீப்பவர்களாக இருந்தும் கைக்கும் வாய்க்குமாக வாழும் பரந்துபட்ட மக்களா? இதுவரை உலகின் மிகப் பெரிய பணக்கார நாடாக இருந்தாலும், அமெரிக்காவில் சுமார் 15% மக்கள் உணவு அட்டையை நம்பியே உயிர் வாழ்கின்றனர்.  இது ஒரு “முன்னேற்றத்தின்” மாதிரியாக கொள்ளும் அளவு தகுதி உடையதா?

இவ்வாறு, “நாடு” என்றால் என்ன அல்லது என்னவாக இருக்க வேண்டும் என்பதற்கும். மேலும் “முன்னேற்றம்” என்றால் என்ன பொருள் என்பதற்கும் வெவ்வேறு வகையில் சிந்திப்பவர்கள் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருப்பார்கள் எனில் இதனை எப்படி சரியாக தீர்க்க முடியும்- ஆணைகள் மூலமா அல்லது இயன்ற அளவு தூரம் வரை அதன் உண்மையான அரசியல் பொருளாதார சமத்துவத்தை அடைய  ஜனநாயக கருத்தியலுக்கு  அழுத்தம் கொடுப்பதன் மூலமா?

ஐயோ!  “நாடும்” , “முன்னேற்றமும்” எளிதான‌ வரையறைகளுக்கு அனுமதிப்பல்லை. எவ்வளவுதான் வாழ்க்கை அல்லது அறிவு சிக்கலானதாக இருந்தாலும் முன்னேறிச் செல்ல, மனிதாபிமானம் மற்றும் சமத்துவத்துவத்தை முன்னோக்கிச் செலுத்துவது தேவையான ஒன்று. நமக்குத் தேவை அமைச்சர்களின் கட்டளைகள் அல்ல. ஒரு தனிச்சிறப்பான ஜனநாயகம் மட்டுமே தரக்கூடிய கருத்தியல் ரீதியான போட்டியையும்,  கல்வி அறிவுடைய, நேர்மையான சகிப்புத்தன்மையுடன் கூடிய விவாதமுமே நமக்குத் தேவை.

தலித் இஸ்லாமியர்களுக்கும், கிறித்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு தரப்படாதது ஏன்? – சமூகவியலாளர் சதீஷ் தேஷ்பாண்டேவோடு ஒரு நேர்காணல்

அத்தகைய இலட்சியங்களைக் கொண்ட  ‌ஜனநாயகத்தை முதலில் அடைந்தால்தான், நாம் நாட்டுப்பற்று, மனிதாபிமானம் ஆகியவற்றின் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகளுக்கு ஆதரவாகப் பேச முடியும். நிச்சயமாக, அத்தகைய ஜனநாயகத்தை தேர்தல் வெற்றிகள் மூலம் மட்டுமே அடைய முடியாது. அதற்கு சமத்துவக் கொள்கைகளுக்கான உணர்வுபூர்வமான அர்ப்பணிப்பு  நமக்குத் தேவை.

www. thewire.in இணைய தளத்தில் பத்ரி ரெய்னா எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்.

 

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்