Aran Sei

மது மனநோயா? மனநலம் பேசுவோம் – மருத்துவர் முகமது நவீத்

லரின் வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாக மது இருக்கிறது. மதுவை ஒரு பழக்கமாக, கேளிக்கையாக, பொழுதுபோக்காக, மயக்கமூட்டியக அதை உபயோகிப்பவர்கள் கூறுவார்கள். ஆனால் உண்மையில் மது தான் என்ன?

உதாரணத்திற்கு 21ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய சம்பவம்/  பிரச்சனையான கொரோனவை எடுத்துக் கொள்வோம். கொரோனா  தாக்கும் அனைவரும் மரிப்பதில்லை. சில நபர்களுக்கு முக்கியமாக ’இணை நோய்’ உடையவர்களுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதில் கொரோனா என்பது ஒரு நோய் என்று மாற்றுக்கருத்து இல்லாமல் ஒப்பு கொள்ள முடியும்.

மன நலம் பேசுவோம் – மருத்துவர் முகமது நவீத்

மதுவும் இது போன்ற ஒரு நோய், பருகும் அனைவரையும் தாக்குவதில்லை. ஆனால், தாக்கியவரை பலி வரை இழுத்து செல்லும் ஒரு பாழும் கிணறு. காலந்தோன்றிய நாளிலிருந்தே மது இருப்பதால் அதனை நோய் என்பதனை நாம் முற்றிலும் மறந்துவிட்டோம்.

மது நோயா?

ஆம். கொரோனா எவ்வாறு சிலருக்கு வெறும் சுவையின்மை அல்லது வாசமின்மை மட்டுமே உண்டாக்கி சில நாட்களில் மறைகிறது . அது போல மது அருந்தும் அனைவரையும் மரணம்வரை இழுத்து செல்வதில்லை. அதனால் அது பெருவாரியான நபர்களால் ஒப்பு கொள்ள கூடிய ஒரு பொருளாக மாறி விட்டது. 2020-21இல் கொரோனாவினால் இந்தியாவில் உயிரிழந்தவர்கள் 1.6 லட்சம், ஆனால் 2020இல் மட்டும்  2.6லட்சம் உயிர்களை மதுவிற்கு நாம் இழந்திருக்கிறோம். மது என்பது ஒரு கொடிய நோய் என்று இதில் இருந்தே நாம் புரிந்து கொள்ளலாம்.

“எத்தனை தலைமுறைகளுக்கு இட ஒதுக்கீடு தொடரும்?” என்ற உச்சநீதிமன்றத்தின் கேள்வி தவறானது – காஞ்சா அய்லய்யா

மது எப்படி சிலருக்கு நோய் ஆகிறது?

மரபணு அனைவருக்கும் ஒன்றல்ல, நாமக்கு பிடித்த இசையிலிருந்து, சுவை நிறம்வரை 90 விழுகாடு நாம் வாழ்க்கை இயக்கம் மரபணுவின் சித்தமே. இதில் சிலருக்கு இயற்கையாகவே மதுவிற்கு அடிமையாகும் தன்மை மரபணுவில் இருக்கின்றது. சிலருக்கு மதுவின் செயல் விளைவினால் மூளை பாதிக்கப் பட்டு அடிமையாகும் குணம் ஏற்படுகிறது.

போதை – மதுவின் ஆஸ்தான உபயோகம். இயற்கையில் வலியைத் தாங்குவதற்காக நம் மூளையில் சிறிது அளவு சுயமாக என்டார்பின்கள் (Endorphins) என்ற நரம்புக் கடத்தியாகச் செயற்படும்  புரதக்கூறுகள் சுரக்கும். மனித உடலில் எதேனும் வலி ஏற்படும் நிலையில் இந்த என்டார்பின்கள் சுரக்க பட்டு, ஒரு வகை மதி இழக்காத, கட்டுபடுத்தப்பட்ட போதை நிலை உருவாக்கி நம் வலியைத் தாங்கும் சக்தியை ஏற்படுத்தும். இந்த என்டார்பின்கள் வலி கட்டு படுத்தமட்டுமின்றி காதல், உடற்பயிற்சி, அன்பு, சம்பள உயர்வு, யோகா என்று நமக்கு வெகுமதி அளிக்கும் அனைத்து சமயங்களிலும் மூளையில் சுரந்து  இன்பம் ஏற்படுத்தும். சொல்லப் போனால் நாம் அனைவருமே இந்த என்டார்பின்கள் தரும் செயல்களையே செய்ய விரும்புவோம். இந்த இயற்கை எண்டார்பிங்களால் எந்தப் பாதிப்பும் இல்லை.

கொரோனா தடுப்பூசி – மருத்துவக் காப்பீடுகளின் நிலை என்ன? : ஷியாம் ராம்பாபு

இந்த உள்ளார்ந்த என்டார்பின்கள் ஏற்படுத்தும் நிலையை, மது பல நூறு சதவீதம் அதிகமாக ஏற்படுத்தி கட்டு பாடற்ற ஒரு போதை நிலையை உருவாக்கும். இதனாலேயே போதை ஏற்படுகிறது. காதல், வேலை, உடற்பயிற்சி போன்ற எந்தக் கடின உழைப்பும், செயலும் இல்லாமல் மது இந்தப் போதையை எளிதில் அளிப்பதால் மது அடிமைத்தனம் ஏற்படுகின்றது. பத்து மைல்  ஓடி  பெரும் இன்பம் ஒரு மூடியில் கிடைக்கிறது என்பதே இதன் சாராம்சம். எந்த உழைப்புமின்றி மூளைக்கு  வெகுமதி,போதை, இன்பம் இந்த மது அளிக்கிறது; அடிமைத்தனம் ஏற்படுகிறது.

“மூளை ஒரு நல்ல வேலைக்காரன், கெட்ட எசமான்”.

உழைபின்றி உதியமா! என மது உண்டாக்கும் இந்தப் போலியான மயக்கத்தில் மக்களும் மூளையும் மதுவிற்கு அடிமையாகிறார்கள்

மஞ்சள் காமாலை, நீர்க்கோவை, இரத்த வாந்தி, இதயத் தசைநோய், புற்று நோய், மன நோய், பிரம்மை, மறதி, நடுக்கம், வேர்னிக்கி மூளைக்கோளாறு (என்சபாலோபதி), கொரசக்காஃப் மன நோய் என்று மதுவினால் ஏற்படும் பாதிப்பைக் கூறிக்கொண்டே போகலாம்.

கோவில்களை பார்ப்பனர்களிடம் ஒப்படைக்க கோரும் சதி – சூர்யா சேவியர்

தீர்வு தான் என்ன?

மதுவில் மயங்கிய மூளைக்கு, தீடீரென அதனை நிறுத்தினால், நியூரான்கள், பழக்கமாகிவிட்ட இன்பமின்றி தவிக்கும். வலியினால் துடிக்கும். இதனால் தான் மதுவை மருத்துவரின் உதவியின்றி திடீரென நிறுத்துபவர்களுக்கு வலிப்பு ஏற்படுகிறது. வலிப்பு மட்டுமின்றி சித்த பிரம்மை, மாயை, நடுக்கம், படபடப்பு ஏற்படும் வாய்புள்ளது. மருத்துவர்கள் நோயின் பாதிப்பை அளவீடு செய்து, நடுக்கம், வலிப்பு ஏற்படாதிருக்க போதிய மருந்துகள் கொடுப்பார்கள். மதுவினால் ஏற்பட்ட வளர்சிதை மாற்றங்கள், வேதி வினைகளை மருந்துகள் மூலம் சீர் செய்து படி படியாக மது அடிமையிலிருந்து பாதிக்கப் பட்டவரை வெளியே கொண்டு வருவார்கள்.

மது ஒரு நோய், எப்படி கொரோனவிற்கு சமூக தனிமனித இடைவெளியைக் கடைபிக்கிரறோமோ, அது போல மதுவிடம் இருந்தும் இடைவெளியை நாம் கடைப்பிடித்தல் சமூக நலனிற்கு வழிவகுக்கும்.

மதுவிற்கு அடிமையானவரை, குற்றவாளி கூண்டில் நிறுத்தாமல் அவரை நோயாளி என மதித்தால்; மதுவிலிருந்து  மீண்டு வெளிவர அது உறுதுணையாக இருக்கும். மதுவிலிருந்து பூரண மீட்சி பெற மருத்துவரின் உதவியை மக்கள் அணுகுவதே சிறந்த பயன்முடிவை ஏற்படுத்தும்.

கட்டுரையாளர்: மருத்துவர் முகமது நவீத்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்