Aran Sei

‘பந்தயம் கட்டி எழுத்தாளரானவர் ‘ – அகதா கிறிஸ்டி எழுதிய துப்பறியும் நாவலுக்கு நூற்றாண்டு

துப்பறியும் நாவல் வகைமையில் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான அகதா கிறிஸ்டியின் நூல்கள் 200 கோடி எண்ணிக்கையில் விற்று சாதனை படைத்துள்ளது.

‘உன்னால் ஒரு நாவல் எழுத முடியுமா’ என்று அவரது சகோதரி போட்ட பந்தயத்தில் ஜெயிக்க எழுதியதுதான் அகதா கிறிஸ்டியின் முதல் படைப்பு.

Credit: printrest
சகோதரி மேட்ஜ் மில்லருடன் அகதா கிறிஸ்டி
Credit: printrest

அந்த நூல் வெளியாகி தற்போது நூறு ஆண்டுகள் கடந்துள்ளனஇந்நாவலை எழுதும் போது அவருக்கு வயது 30. ஒரு பிரிட்டிஷ் செய்தித்தாளில் தொடராக வெளிவந்ததுஅதே ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவிலும் அதற்கு அடுத்த ஆண்டு பிரிட்டனிலும் இத்தொடர் நூலாக வடிவம் பெற்று வெளியீடு செய்யப்பட்டது.

இன்றுவரை எழுதிவரும் புனைகதை எழுத்தாளர்களில் அதிகம் விற்பனையான எழுத்தாளராக கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அகதா கிறிஸ்டியைப் பட்டியலிடுகிறதுஇந்த ஆண்டுவரை இவரது படைப்புகள் 200 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்றுள்ளன.

பெண்கள் தொழில்முறை எழுத்தாளராக ஈடுபட்டிராத காலகட்டத்தில் ஒரு பெண்ணாக அகதா கிறிஸ்டி தன் எழுத்து வாழ்க்கையை ஆரம்பித்தார்ஊதியத்துக்காகவோ வாழ்வாதாரத்துக்காகவோ அவர் எழுத்தாளராக ஆகவில்லை.

அவரது சகோதரியுடன் பந்தயத்தில் ஈடுபட்டு அவர் எழுதிய முதல் படைப்பு ‘தி மிஸ்டீரியஸ் அஃபேர் அட் ஸ்டைல்ஸ்’ ஆகும்.

பெல்ஜியத்தைச் சேர்ந்த துப்பறியும் கதாபாத்திரமான ஹெர்குலே பொயிரோட் மற்றும் ஆர்வக்கோளாறான ஸ்லூத் மிஸ் மார்பிள் போன்ற கதாபாத்திரங்கள் கிறிஸ்டியின் கற்பனையில் உருவானவை” என்று அவரது பேரன் ப்ரிச்சார்ட் கூறியுள்ளார்.

கிறிஸ்டி 19 நாடகங்களை எழுதியுள்ளார்அவற்றில் மிகவும் பிரபலமான தி மௌஸ்ட்ராப் 1952-ல் முதன்முறையாக அரங்கேற்றம் பெற்றதுதொடர்ந்து நடைபெற்று வந்த இந்நாடகம் கொரோனா பெருந்தொற்று காரணமாக மார்ச் மாதத்தில் முதல் முறையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ட்ரீமிங் சர்வீஸ் பிரிட்பாக்ஸ் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சௌமியா ஸ்ரீராமன் கூறுகையில், “அவரது படைப்புகள் எந்தெந்த வடிவங்களில் தழுவப்பட்டிருக்கிறதோ அத்தனையையும் சேகரித்து வைப்பதே எங்கள் லட்சியம்” என்று கூறியுள்ளார்.

நன்றி : https://www.telegraphindia.com/

தமிழாக்கம் பச்சோந்தி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்