Aran Sei

ஆப்கானிஸ்தான்: அமெரிக்காவின் தோல்வியும் தாலிபான்களின் மறு வருகையும்

இருபதாண்டு கால இரத்தகளரி ஆக்கிரமிப்பிற்குப் பின் அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகள் படைகளும் திரும்பப் பெறப்படுவதால் ஆப்கானிஸ்தான் மற்றுமொரு உள்நாட்டுப் போரை நோக்கிச் செல்கிறது. ஜோ பிடேன் அறிவித்துள்ளபடி இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதிக்குள் ஏகாதிபத்திய துருப்புக்கள் திரும்பப் பெறப்படும். இந்நிலையில், பெரும்பாலான அமெரிக்க படைகள் ஏற்கனவே வெளியேறிவிட்டன அல்லது பல பகுதிகளிலும் தாலிபான்கள் முன்னேறி வந்துக் கொண்டிருப்பதால் அவசர அவசரமாக ஆப்கனை விட்டு வெளியேறி வருகின்றன.

அமெரிக்கா மற்றும்  கூட்டுப் படைகள் வெளியேறுவதற்கு உண்மையில் தாலிபான்கள் மட்டும் தான் காரணம் எனக் காட்டப்படுகிறது. இருப்பினும்  உண்மை என்னவென்றால் கடந்த இருபது ஆண்டுகளாக அமெரிக்க தலையீட்டையும், ஆக்கிரமிப்பையும் உள்ளூர் மக்களே கடுமையாக எதிர்த்து வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்து, முழு நாட்டையும் பேரழிவு, நிலையற்றத்தன்மை மற்றும் காட்டுமிராண்டித்தனம் ஆகியவற்றில் மூழ்கடித்து விட்ட இந்த ஏகாதிபத்திய போருக்கு எதிரான பற்றியெரியும் வெறுப்பு நாடு முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில், குறிப்பாக பாஷ்டுன் பகுதிகளில், மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் மீதான வெறுப்பின் காரணமாக உள்ளூர் மக்கள் தாலிபான்களை அமைதியாக ஏற்றுக் கொள்பவர்களாகவோ அல்லது சில சமயங்களில் தாலிபான் தாக்குதலுக்கு உதவுபவர்களாகவோ இருக்கிறார்கள். இருப்பினும், இதிலிருந்து பெரும்பான்மையான மக்கள் தாலிபானின் பிற்போக்கான மற்றும் தெளிவற்ற சக்திகளுக்கு ஆழ்ந்த இரக்கம் கொண்டுள்ளார்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

நிலைமையின் சோகம் என்னவென்றால் அமெரிக்கா விட்டுச் செல்லும் அதிகார வெற்றிடம்  தங்களுடைய ஆயிரக்கணக்கான ஆயுதமேந்திய நபர்களாலும், பல வெளிநாடுகளின் மறைமுக ஆதரவாகவும், பல பகுதிகளில் முக்கியமாக தாலிபான்களால் நிரப்பப்பட்டு வருகின்றது.

இருபதாண்டு கால போருக்குப்பின், இரண்டு லட்சம் கோடி டாலர் செலவிற்குப்பின், அமெரிக்க ஆளும் வர்க்கம் குறிப்பிடத்தகுந்த அளவு, அது இந்தப் போரைத் துவங்கும் போது அறிவிக்கப்பட்ட  போல எந்த ஒரு நோக்கத்தையும்  அடைவதில் தோல்வி அடைந்துள்ளது. பல பகுதிகளில் தரைவிரிப்பு குண்டு வீச்சு (ஒரு அறையில் தரைவிரிப்பு எப்படி தரைமுழுவதையும் மூடுகின்றதோ அது போல ஒரு பகுதி முழுவதும், ஒரு இடம் விடாமல் அழிப்பது தரைவிரிப்பு குண்டுவீச்சு) மூலம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை நாசமாக்கி, எண்ணிலடங்கா பொது மக்களை கொன்று குவித்தப்பின், தாலிபான்களுடன் ஒரு அவமானகரமான ஒப்பந்தத்திற்கு உடன்பட்டு அமெரிக்கப் படைகள் வெளியேறுகின்றன. அமைதி ஒப்பந்தம் என்றழைக்கப்பட்ட, கடந்த ஆண்டு குவெட்டாரின் தோஹாவில் ட்ரம்ப் நிர்வாகமும், தாலிபான் தலைவர்களுக்குமிடையில் நடந்த  அந்த உடன்படிக்கையில், அமெரிக்கா தாலிபான்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டது.

கயன்வாபி மசூதிக்குச் சொந்தமான நிலம்: காசி விஷ்வநாத் ஆலயநிர்வாகத்திடம் ஒப்படைப்பு

அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கூட்டு படைகளின் அதரவுடன் இருக்கும் தற்போதுள்ள அதிபர் அஷ்ரஃப் கனி தலைமையிலான வலுவற்ற, ஊழல் மிகுந்த காபூல் அரசு, அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதால் வேகமாக சின்னாபின்னமாகி வருகிறது‌.  இந்த அரசை ஏகாதிபத்தியத்தின் பொம்மை அரசாகக் கருதி பெரும்பகுதி மக்கள் அரசின் மீது வெறுப்படைந்திருப்பதே இதற்கு காரணம் ஆகும். படைகளை திரும்பப்  பெற்ற பின் ஆறு மாதங்கள் கூட இந்த அரசு தாங்காது என அமெரிக்க உளவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. போரில் இறங்கும் போது ஆப்கானிஸ்தானை நவீன ஜனநாயக நாடாக மாற்றப் போவதாக ஏகாதிபத்தியவாதிகள் கூறினர். ஆனால் அது மோசமான தோல்வியில் முடிந்துள்ளது.

டெல்லியில் தகர்க்கப்பட்ட கிறிஸ்தவ ஆலயமும் இந்தியக் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களும் – அ.மார்க்ஸ்

இருபது ஆண்டுகளுக்கு முன் பன்னாட்டு மார்க்சிய உணர்வு (IMT) அமைப்பு  ஏன் இந்த சாகசம்  ஒட்டு மொத்தப் பகுதியையும் சீர்குலைப்பதுடன் ஆப்கன் மக்களுக்கு துயரத்தையும், வறுமையையும் ஏற்படுத்தும் என்பதை விளக்கியது. 2001, நவம்பரில் அமெரிக்க ஆதரவு படைகளிடம் காபூல் வீழ்ந்த போது:

தாலிபான்கள் அதிகாரத்தின் பிடியை இழந்திருக்கலாம். ஆனால் போரிடுவதற்கான  திறனை இழக்கவில்லை. அவர்கள் மலைப்பகுதிகளில் கொரில்லா போர் செய்வதில் பழக்கமுள்ளவர்கள். இதனை அவர்கள் முன்பும் கூட செய்துள்ளனர். மீண்டும் செய்வர். வடபகுதியில் அவர்கள் அந்நிய, எதிரிப் பகுதிகளில் போரிட்டனர். ஆனால் கிராமங்களும் மலைகளும் உள்ள பாஷ்டுன் பகுதி அவர்களுடைய சொந்த நிலமாகும். இந்த வாய்ப்பு பல ஆண்டுகளுக்கு கொரில்லா போர் முறையைத் தொடர வழியை திறந்து விட்டுள்ளது. கூட்டணி படைகளில் முதல் கட்டப் போர் எளிதானதாக இருந்தது. இரண்டாவது பகுதி அவ்வளவு எளிதானதாக இருக்காது.  அமெரிக்க- இங்கிலாந்து படைகள் கொரில்லாத் தாக்குதல் இலக்காக வைத்துள்ள பாஷ்டுன் பகுதிக்குள் சென்று தேடுதல் மற்றும் அழித்தொழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். உயிர்சேதங்கள் தவிர்க்க முடியாதது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இது அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் உள்ள மக்கள் கருத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.”

“அமெரிக்க விமானப்படையை நம்பி, பின்லேடனுக்கு எதிரான,  விரைவான  தாக்குதல் நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என அமெரிக்கா நம்பியது. இதற்கு பதிலாக, மோதல் இன்னும் சிக்கலானதாக வரும் கடினமானதாகவும் மாறி வருகிறது. அத்துடன் ஒரு முடிவுக்கான வாய்ப்பு காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்படுகிறது.  மேலும் அவர்கள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பிற நாடுகளில் தங்களுக்கு ஆதரவாகப் படைகளை நிறுத்த வேண்டிய நிலை உள்ளது.”

‘ஜெய்பீம்’: வரலாறும் பின்னணியும் – ஆதவன் தீட்சண்யா

“இது செப்டம்பர் 11 ல் அமெரிக்கர்கள் தாங்கள் இருந்த நிலையை விட மிகவும் மோசமான, அபாயகரமான நிலையாகும். தற்போது வாஷிங்டன்,  திவாலாகிப் போன, நிலையற்ற பாகிஸ்தான் அரசையும் அதே போல இந்த பகுதியைச் சேர்ந்த, தன்னால் நிலையற்றத் தன்மைக்கு உள்ளாக்கப்பட்ட பிற “நட்பு”  நாடுகளையும் காப்பீட்டு உறுதியளிப்பு செய்ய வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவது தங்களுடைய நோக்கமாக அவர்கள் கூறினால் அவர்கள் அதற்கு நேர்எதிரான ஒன்றையே விளைவாகக் காண்பார்கள்‌. இந்த நிகழ்வுகளுக்கு முன்பு, ஏகாதிபத்தியவாதிகள் இந்தப் பகுதியின் சமூக எழுச்சி மற்றும் போரிலிருந்து ஒப்பீட்டளவில் ஒரு பாதுகாப்பான தூரத்தை பராமரித்து வந்தார்கள். ஆனால் இப்போது அதில்  முற்றிலும் சிக்கிக் கொண்டு விட்டார்கள். செப்டம்பர் 11 முதல் தங்களுடைய நடவடிக்கையால் அமெரிக்காவும் இங்கிலாந்தும் தங்களைத் தாங்களே ஒரு புதைகுழியில் மாட்டிக் கொள்ள வைத்துள்ளனர். அதிலிருந்து மீட்டுக் கொள்வது மிகவும் கடினம்.”

மீண்டும் 2008 ல் நாங்கள், இந்தப் போர் ஏகாதிபத்தியவாதிகளால் வெற்றி பெற முடியாதப் போர் என விளக்கினோம். நீடித்தப்போருக்குப் பின் தோல்வி அடைந்து, பேரழிழிவின் சுவடுகளைப் பதித்து விட்டு, ஏகாதிபத்தியவாதிகள் பின்வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

இறுதியில் கூட்டணிக் படைகள் ஆப்கனை கைப்பற்றும் முயற்சியை  கைவிட்டு விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள். தங்களுக்குப் பின்னால் இறப்பு மற்றும்அழிவின் சுவடுகளையும் பல பத்தாண்டு காலங்களுக்கு நீடிக்கும்   வெறுப்பு மற்றும் கசப்புணர்வு மரபையும் விட்டுச் செல்வார்கள். அடுத்து எந்த போட்டிக் கும்பல் காபூலில் ஆதிக்கம் செலுத்தும் என எங்களுக்குத் தெரியாது. எங்களுக்குத் தெரிந்ததெல்லாம், எப்போதும் போல சாதாரண மக்களான விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழைகள், வயதானவர்கள், நோய்வாய் பட்டவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டி இருக்கும்.”

 “அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் கணக்கற்ற குற்றங்களில் மேலும் ஒன்றாக ஆப்கன் மக்களின் கொடூரமான தலைவிதி இருக்கும். இழிந்த பெருமை கொண்ட ‘ பயங்கரவாதத்தின் மீதான போர்’ தனது நோக்கங்களை அடைவதற்கு பதிலாக எதிர்விளைவையே அடையும். ஏகாதிபத்திய வாதிகள் தங்கள் செயலால் பயங்கரவாதத்திற்கு மேலும்  வலுவான உத்வேகத்தை அளித்துள்ளனர். அவர்கள் வெறித்தனம் என்ற எரியும் தீயில் எண்ணெயை ஊற்றி உள்ளனர். இதன் மூலம் அல் கொய்தா மற்றும் தாலிபான் போன்ற அமைப்புகளுக்கு ஆட்சேர்ப்பு அதிகாரிகளாக செயல்பட்டுள்ளனர். அவர்கள் ஆப்கானிஸ்தானை முற்றிலும் சீர்குலைய செய்ததுடன் அந்த நடைமுறையில் பாகிஸ்தானை நிலையற்றதாக்கி விட்டனர். ரோமானிய வரலாற்றாசிரியரான டேசிடஸின் அழியாத மற்றும் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் வார்த்தைகளில் கூறினால்,” அவர்கள் ஒரு பாலைவனக் காட்டை உருவாக்கி விட்டு அதை அமைதி என அழைக்கின்றனர்.”

‘இது நம்ம காலம்’ – ‘சார்பட்டா பரம்பரை’ பேசும் அரசியல் என்ன?

ஏகாதிபத்தியவாதிகளின் உயர்ந்த கூற்றுக்கள் சுக்குநூறாகிப் போனதால்    இந்த பகுப்பாய்வு முற்றிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மிதவாதிகளும், ‘இடதுசாரிகள்’ , ‘தேசியவாதிகள்’ என்று தங்களை அழைத்துக் கொண்டு அமெரிக்க ஏகாதாபத்தியத்தை ஆதரித்தவர்களும் தங்கள் திவாலான கொள்கையால் அம்பலமாகி நிற்கிறார்கள்.

நாற்பதாண்டுகளான அமெரிக்கத் தலையீடு

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தலையீடு துவங்கி நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன.  நூர் முகம்மது தராக்கி தலைமையில் 1978 ல் நடந்த ஏப்ரல் புரட்சி(Saur Revolution) ஒரு திருப்பு முனையாக இருந்தது. அது சோசலிச மாற்றத்திற்கும், அப்போதைய ஒட்டு மொத்த உலக ஆதிக்க சக்திகளுக்கும் சவாலாகவும் மாற வழி வகுத்திருக்கும்.

மார்க்சீய உணர்வாளர்களின் தலைவராக இருந்த டெட் க்ரான்ட்டின் கடும் எதிர்ப்பிற்குள்ளான சோவியத் தலையீட்டிற்குப் பின், ஏகாதிபத்தியவாதிகள் பிரபலமற்ற “டாலர் ஜிகாத்”திற்காகத்  தங்கள் பணப்பெட்டியை திறந்து விட்டனர். அதன் மூலம் சோவியத் படைகளை எதிர்க்க   பாகிஸ்தானை, தாலிபான் மற்றும் அமெரிக்க ஆதரவு போராளிகளின் நிலைக்களமாக பயன்படுத்தினர். (அவர்களுக்கு புனிதப் போராளிகள், ஜிகாதிகள் எனப் பெயரிட்டனர்.)  பாகிஸ்தானின் ஜெனரல் ஜியா-உல்-ஹக்கின் மிருகத்தனமான எதேச்சதிகார அரசு தொழிலாளர்களை கடுமையாகத் தாக்கியதோடு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் குழுக்கள் உருவாக தளமிட்டார். அவை அமெரிக்க- சவூதி அரேபிய உதவியால் செழித்து வளர்ந்தன. ஆனால் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பின், தாங்கள் உருவாக்கிய அசுரர்களின் மீதான கட்டுப்பாட்டை  அவை இழந்தன. இதன் விளைவாக 1990 கள் முழுவதும் ஆப்கானிஸ்தானில் கொடூரமான உள்நாட்டுப் போர் நடைபெற்றது. போரில் ஈடுபட்டிருந்த ஜிகாதி குழுக்களுக்கிடையேயான காபூலின் அதிகாரத்தைக் கைப்பற்றும் சண்டையில் நாடு முழுவதும் காட்டுமிராண்டித்தனத்துக்கு ஆளாகி பல பத்தாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் வெட்டி வீசப்பட்டனர்.

வகுப்புவாதத்தை ஏற்படுத்த வரலாற்றைத் திரிக்கும் வலதுசாரிகள் – மதமாற்ற திருமணங்களும் சில விளக்கங்களும்

நூற்றாண்டின் தொடக்கத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விருப்பம் மாறி விட்டதால், இந்த “புனித போராளிகள்”  இப்போது தங்கள் முந்தைய எசமானர்களின் கைகளை கடிக்க ஆரம்பித்ததால், அவர்கள் திடீரென பயங்கரவாதிகள் என முத்திரையிடப்பட்டனர்.  வரலாற்றில் ஒரு மிகப்பெரிய ஏகாதிபத்தியம்  உலகிலேயே மிகவும் பின்தங்கிய, சீர்குலைந்து நின்ற ஒரு சிறிய நாட்டின் மீது போரைக் கட்டவிழ்த்து விட்டது. இந்த போர் அறிவிப்பு எந்தவித முரண்பாடும் இன்றி முழு உலகிற்கும் அச்சுறுத்தலாக இருந்தது. இந்த போரின் முடிவில் அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் அதே பயங்கரவாதிகளுடன், ஆப்கன் சிறையில் உள்ள ஆயிரக்கணக்கான தாலிபான் சிறைவாசிகளையும் விடுவிப்பது உள்ளிட்ட அவர்கள் கூறிய அனைத்து நிபந்தனைகளையும் ஏற்று  ஒரு “அமைதி” உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. இதன்மூலம் பன்னாட்டு அரசியல் மேசையில் அவர்களுக்கு ஒரு இருக்கையை விட்டுக் கொடுத்துள்ளன

இதற்கிடையில், மதத்தின் பெயரால் தாலிபான் நடத்திய கொடுமைகளும், அட்டூழியங்களும், நாடு முழுவதும், குறிப்பாக  பஷ்டுன் மக்களைத்  தவிர்த்த பிற பகுதி மக்களின் பெரும்பாலானவர்களிடம் உரிய எதிர்ப்பைப் பெற்றுள்ளது. பாகிஸ்தான், ஈரான் மற்றும் பிற ஏகாதிபத்திய நாடுகளின் ஆதரவால்தான் அவர்கள் தங்களுக்குள் அமைப்பாகி எதிர்த்து சண்டையிட முடிகிறது என்ற வகையில் அவர்களுக்கு தாலிபான்கள் நன்றி கூற வேண்டும். இத்துடன் அமெரிக்காவால் நிறுவப்பட்ட மிருகத்தனமான, ஊழல் மலிந்த ஆட்சி, குறிப்பாக பஷ்டுன் பகுதியில் ஒரு அடுக்கு கிராமப்புற மக்களை தாலிபான் கையில் விழ வைத்துள்ளது.

வரலாற்றின் நினைவில் ஒரு பயணம் – பாபாசாஹேப்பின் பெடரேஷன் கட்சியும் அதன் செயல்பாடும்

இந்த பிற்போக்கான, இஸ்லாமிய அடிப்படைவாத படைகள் முன்பு அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஆதரிக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டது என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. இந்த பிற்போக்குவாதிகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரானவர்களாக மாறிய உடனே, இந்த பகுதியில் அமெரிக்க இராணுவத்  தலையீட்டை நியாயப்படுத்த அதே தாலிபான்கள் போலி காரணமாக பயன்பட்டனர்.

தற்போது ஏகாதிபத்தியங்கள் வெளியேறுவது அவமானகரமான தோல்வி என்று மட்டுமே சொல்லப்பட வேண்டிய ஒன்று.

பென்டகனில் உள்ள தளபதிகள் போரை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று கூறியதை எல்லாம் எதிர்த்துதான், இது அமெரிக்க முதலாளித்துவத்திற்கு ஒரு முள்ளாக மாறிவிட்ட நிலையில்தான், அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றில் வரலாற்று ரீதியான விகிதாச்சாரத்தில் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டி வந்ததால்தான், மக்களிடம் ஏற்பட்டுள்ள முடிவில்லாத போரின் மீதான விரக்தியும்தான் வெளியேறுவதற்கான காரணம். இதில் ஆப்கானிஸ்தானில் எஞ்சியிருப்பது பின்தங்கிய நிலை, துயரம் மற்றும் பேரழிவு ஆகியவையே. உண்மை என்னவென்றால், இந்த சக்திகளால் முடுக்கிவிடப்பட்ட போதிலும், காபூல் அரசாங்கம் தேசிய அளவில் பொதுமக்கள் ஆதரவைப் பெற தவறி விட்டது. இருபதாண்டு காலமாக பெற்ற மிகப்பெரிய உதவி மற்றும் பல்லாயிரக் கோடிக் கணக்கான டாலர்களாக பெற்ற உதவி,  இப்போது நடுவில் நிறுத்தப்பட்டுள்ளது. பொம்மை அரசும் அதன் அனைத்து நிறுவனங்களும்  வெறுக்கப்பட்ட போர் முடிவுக்கு வந்த போது தரைமட்டமாகிவிட்டன. வலிமையான இரண்டு லட்சம் ஆப்கன் தேசிய படைகள் மற்றும் பிற பாதுகாப்பு படைகள் மிக வேகமாக கலைந்து வரும் நிலையில்  ஆப்கானிஸ்தானின் மீது ஏகாதிபத்திய வாதிகளால் திணிக்கப்பட்ட செயற்கை அரசு வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஏகாதிபத்திய வாதிகளால் திணிக்கப்பட்ட எந்த ஒரு அரசும் பொது மக்களால் வெறுக்கப் படுகையில் தன்னை  காலவரையற்று தக்க வைத்துக் கொள்ள முடியாது. கடந்த இருபது ஆண்டுகளாக நடந்த வெட்கக்கேடான தேர்தல்கள், ஆட்சியின் ஊழல் மற்றும் மக்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவை தற்போது உலகமக்களால் அப்பட்டமாக பார்க்கப்படுகிறது.  காபூல் அரசாங்கத்தின் வலுவற்றத் எளிதில் சிதறி விடும் தன்மையில் இருப்பது பல ஆண்டுகளாக ஏகாதிபத்திய சக்திகளுக்கு தெரிந்திருந்த ஒன்றுதான் என்ற போதிலும், அவர்கள் ஆப்கானிஸ்தானில் “வெற்றி” என்ற அறிவிப்பின் மூலம் உலகெங்கும் தங்கள்   கட்டுக்கதையை விற்பனை செய்கிறார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கொலைகளும், பயங்கரவாதிகளின் தாக்குதலும் மிகவும் அதிகரித்துள்ளன. இதற்கு மேலும் ஆக்கிரமிப்பாளர்கள் நீடித்து இருந்திருந்தால் மேலும் அதிக அவமானத்தை எதிர்கொள்ள நேரிட்டிருக்கும்.

குடிகளின் நலன் காக்கும் அரசிற்கு மக்கள் தொகை பெருக்கம்: வரமா? சாபமா?

தாலிபான்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களில் முன்னேறி வருவதாகவும், நாட்டின்  85% பகுதியை அவர்கள் கைப்பற்றி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒருவேளை மிகைப்படுத்தலாக இருக்கலாம். எனினும், நாட்டின் 40% மாவட்டங்களை தங்கள் வசப்படுத்தி இருக்கிறார்கள் என்ற நிலையில், மேலும் ஆப்கன் தேசிய படையின் கட்டுப்பாட்டில் உள்ள 42 விழுக்காடு பகுதிகளில் கடும் போட்டியில் உள்ளனர் என்பதும் நிச்சயம். பல நகரங்களில் ஆப்கன் தேசியப் படையினர் தங்கள் நிலையை கைவிட்டுவிட்டு ஓடி விடுகின்றனர் அல்லது சரணடைந்து விடுகின்றனர் அல்லது தாலிபான்களுடன் சேர்ந்து கொள்கின்றனர். கைவிடப்பட்ட பல நிலைகளை தாலிபான்கள் கையகப்படுத்தி, அங்கு வெளியேறும் அமெரிக்கப் படைகள் விட்டுச் சென்றுள்ள ஆயுதங்களையும், பிற தளவாடங்களையும், அவர்களுக்கு  வரும் பொருட்களையும்

கைப்பற்றி உள்ளனர். இருந்தாலும் பெரிய அளவு  பகுதிகளை பிடித்து வைத்துக்  கொள்ளும் அளவு எண்ணிக்கையில் படைகள் அவர்களிடம் இல்லை.

அந்நிய நாட்டுப் படைகள் வெளியேறுவதால் மக்கள் ஒருவேளை மகிழ்ச்சி அடையலாம் என ஒருவர் கருதலாம், எனினும் தாலிபான்கள் அந்த இடத்தை பிடித்துக் கொள்வர் என்று முன்கூட்டியே மக்கள் உணர்ந்துள்ளனர். மக்களிடையே மீண்டும் ஒரு இரத்தம் தோய்ந்த உள்நாட்டுப் போர் ஏற்படும் என்ற அச்சத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தாலிபான் ஆக்கிரமித்துள்ள பகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர். தாலிபான்களுக்கான ஆதரவு இல்லாதது, அவர்கள் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தான் அரசின் மறைமுக ஆதரவுடன்  தாலிபான்கள்  ஆட்சேர்ப்பு இயக்கத்தை நடத்தி வருவதில் எதிரொலிக்கிறது. நூற்றுக்கணக்கான தாலிபான்களின்  இறந்த உடல்கள் புதைக்கப்படுவதற்காக மீண்டும் பாகிஸ்தானுக்குக் கொண்டு வரப்படுகின்றன.

கொரானாவை கையாளாததால் விசாரணைக்கு உள்ளாகும் பிரேசில் அதிபர் – எப்போது மோடி?

வட்டார சக்திகளின் தலையீடு

அமெரிக்காவின் தோல்வியையும், அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதைத் தொடர்ந்து சீர்குலைக்கும் உள்நாட்டுப் போருக்கான சாத்தியக் கூறுகளையும் எதிர் நோக்கி, ரஷ்யா,சீனா ஆகிய நாடுகளுடன் இணைந்து ஈரான் அரசு தாலிபான்களுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றன. எதிர்கால அரசாங்கத்தில் செல்வாக்கை  வளர்த்துக் கொள்ளும்  நம்பிக்கையில் ஈரான், கடந்த சில ஆண்டுகளாக ஆப்கானிய இஸ்லாமியர்களிடையே வலுப்பெற்று வரும் இஸ்லாமிய அரசு என்ற கருத்திற்கு எதிரான போராட்டங்களை ஆதரிக்க வேண்டும் மற்றும் அமெரிக்கப் படைகள் மீது கூடுதல் தாக்குதலை மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனைகளின் பேரில்   தாலிபான்கள் மீண்டும் ஒருங்கிணைய உதவி வந்தது. கடந்த சில மாதங்களுக்கு இதற்கு முன்பு ஈரானின் கொடூரமான முல்லா ஆட்சிக்கு பாதுகாப்புக் கோரி ஒரு தாலிபான் குழு டெஹ்ரான் சென்று வந்தது. ஈரானிய தலைவர்கள் பயிற்சி முகாம்கள் மற்றும் ஆயுதங்களைக் கொடுத்து தாலிபான்களை ஆதரிப்பது மட்டுமல்ல, தங்கள் இன் மற்றும் குறுங்குழு வாத நலன்களைத் தாண்டி ஆப்கானிஸ்தானில் உள்ள ஷியா பிரிவு முஸ்லீம்கள் தாலிபான்களை ஆதரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். குறுங்குழுவாத குழுக்கள், தேசிய குறுநில மன்னர்கள் அல்லது தனி அதிகாரம் பெற்ற படைத்தலைவர்கள் மற்றும் உள்ளூர் மேல்தட்டு வர்க்கத்தினர் ஆகியோர் கூட்டணி அடிப்படையில் ஒரு அரசை நிறுவ வேண்டும் என்பதே ஈரானின் நோக்கமாகும். இதன் மூலம் தனது செல்வாக்கை உறுதி செய்து கொள்வதுடன்,  உறுதியற்ற தன்மையை குறைப்பதன் மூலம் தனது எல்லையில் ஊடுருவலைத் தடுத்து,  தனது நலனையும் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதும் அதன் எண்ணம். தாலிபான்கள் ஈரானுடனான மிகப்பெரிய வணிக நுழைவு வாயிலாக உள்ள இஸ்லாம் காலா சந்திப்பைக் கைப்பற்றியிருக்கும் நிலையில் இது மிக முக்கியமானதாகும். மீண்டும் எந்த வித எதிர்ப்பும் இன்றி இதனை கைப்பற்றியது குறித்த காட்சிகள் ஈரானிய ஊடகங்களில் பரந்த அளவில் பகிரப்பட்டன. இந்த வழி ஈரானிய அரசுக்கு 20 மில்லியன் டாலர் வணிகத்துக்கான ஆதாரமாக  உள்ளது. பெரும்பான்மையாக பஷ்டுன் வஹாபி படையினரைக் கொண்டுள்ள தாலிபான்கள், பணமும் ஆயுதங்களும் எளிதில் வரும் வரை தங்கள் மத எதிரியாக கருதும் ஷியா ஆட்சியுடன் கரம் கோர்த்துக் கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதைச் சொல்லத் தேவையில்லை.

ஒன்றிய அரசின் சட்டங்களும் – நிலைமை மாறாத ஜம்மு காஷ்மீரும்

இதே நலன்களின் அடிப்படையில்தான், தாலிபான்கள் பெரும்பான்மையாக உள்ள அல்லது பெரும்பான்மை சக்தியாக இருக்கப் போகும் எதிர்கால அரசில் தங்கள் செல்வாக்கை பாதுகாத்துக் கொள்ள ரஷ்யாவும் சீனாவும் தாலிபான்களை அடைய முயல்கின்றனர். ஆப்கானிஸ்தானின் வடக்கு எல்லையை தளமாகக் கொண்டு  முன்னாள் சோவியத் குடியரசுகளை தாக்குவதில்லை என்ற உறுதிமொழியை தாலிபான்களிடம் ரஷ்யா தனது பங்கிற்கு கேட்கிறது. எதிர்கால ஆப்கன் தலைமையில் ஒரு சாத்தியமான ஒப்பந்தத்திற்காக இந்தியாவும் தனது பிரதிநிதிகளை கத்தாரில் தோஹாவிற்கு அனுப்பியது. இந்து அடிப்படைவாதி மோடி இஸ்லாமிய அடிப்படைவாதிகளான தாலிபான்களை நெருங்குவது முரண்பாடாகத் தோன்றலாம். ஆனால் அதில் இந்திய ஆளும் வர்க்கமும் நாட்டை நிர்வகிக்கும் சக்தியிடம் செல்வாக்கு அடைய வேண்டும் என்ற உணர்வுடன் இருப்பதுதான் அதில் உள்ள ஒரு சித்தாந்தம். கடந்த சில வாரங்களில், மேற்கு சீன எல்லைப்புறத்தில் உள்ள படாக்ஷான் மாகாணத்தில் உள்ள சில மாவட்டங்கள் உட்பட நாட்டின் வடக்கில் உள்ள சில பகுதிகளை தாலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். அவை பெரும்பாலும் பஷ்டுன் தேசிய இனத்தவரல்லாத பகுதிகள் என்பதுடன் அவை காலங்காலமாக தாலிபான் எதிர்ப்பு சக்திகளின் கோட்டையாக கருதப்படுவன. இந்த ஒரு சில வெற்றிகளை  பாகிஸ்தான் உள்ளிட்ட தாலிபான் ஆதரவாளர்கள்  காபூலை மிக விரைவில் கைப்பற்றும் வழியில் மிகப் பெரிய முன்னேற்றம் என சிலாகிக்கின்றனர். ஆனால் தாலிபான்கள் காபூலை முழுமையாக எடுத்துக் கொள்வது நம்ப இயலாததாக உள்ளது. ஏனெனில் அவர்களுக்கு மக்களின் பெரும் ஆதரவு இல்லை. தாலிபான்கள் பிற குழுக்களுடன் சேர்ந்து ஒரு விருப்பமில்லா கூட்டணி அரசை உருவாக்கலாம் என்றே தெரிகிறது.  எனினும் இத்தகைய கண்ணோட்டம் உறுதியாவது வெகு தொலைவில் உள்ளது. நிலையற்றத்தன்மை என்பது  இந்தச் சூழ்நிலையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் ஹசாரா ஷியாக்கள், தாஜிக்குகள் மற்றும் உஸ்பெக்குகள் ஆகிய துன்புறுத்தப்பட்ட சமூகங்கள் தாலிபான்களை வரவேற்கவில்லை. உள்நாட்டுப் போர் ஏற்பட்டால் தற்காப்புக்குத் தயாராகி வருகின்றனர். தாலிபான்கள் தாக்குதல் ஏற்பட்டால் தங்களைத் தற்காத்துக் கொள்ள உள்ளூர் பழங்குடிப் படைகள்,  குறுநிலத்தலைவர்கள் மற்றும் இராணுவத்தினர் அமைப்பாகவும், மறு அணிசேர்க்கைச் செய்துக் கொள்ளவும் காபூல் அரசு அனுமதி அளித்தது. இதன்மூலம்  காபூல் அரசாங்கமும், ஆப்கன் தேசியப் படையும் தோல்வியுற்று விட்டதை ஒப்புக் கொள்கின்றன. உள்ளூர் குறுநிலத் தலைவர்களும், பழங்குடி மக்கள் தலைவர்களும், சிறு தேசியவாதிகளும் தங்கள் சொந்த பகுதியைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்துவர். இது நாடு முழுவதும் உள்நாட்டுப் போருக்கு வழி வகுக்கும்.

இந்த சூழலில் அமெரிக்கா தனது முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள கடும் முயற்சி எடுத்துள்ளது. அதன்படி அது ரஷ்யாவையும் சீனாவையும் கூட ஆப்கானிஸ்தான் நிலைமைகளை கட்டுபடுத்த வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன் மூலம் குறைந்தது  அரைகுறை ” வெற்றி” யை உரிமையாக்கிக் கொண்டு இந்த இரத்தகளரி போரிலிருந்து தான் விடுபடுவதாக அறிவித்துள்ளது. உண்மையாகவே, பிடேனுக்கும் புடினுக்கும் இடையே நடந்த சமீபத்திய சந்திப்பில் ஆப்கானிஸ்தானும் ஒரு பேசு பொருளாக இருந்தது. எனினும் ரஷ்யா, சீனா, துருக்கி மற்றும் பிற அரசுகளின் முயற்சிக்குப் பின் ஏற்பட்ட உடன்படிக்கைகளால் பயன் ஏதும் விளையவில்லை. போரின் முடிவும், ஏகாதிபத்தியப் படைகளை திரும்பப் பெறுவதும் நிலையற்றத்தன்மைக்கு முடிவைத் தராது. அதற்கு மாறாக, அது மக்களின் வாழ்க்கையை புதிய குத்தகைதாரர் கையில் தள்ளிவிடும்.

பெருமையோடு திரியும் ஜாமியா துப்பாக்கிச் சூடு நடத்தியவன் – கவலையற்று இருக்கும் காவல்துறை

மாஸ்கோவும், பீகிங்கும் கூட கடந்த சில ஆண்டுகளில் பல முறை காபூல் அரசுடனும், தாலிபான்களுடனும் பேச்சுவார்த்தைகளை  நடத்தின. ஆனால் எந்த ஒரு உறுதியான முடிவும் எட்டப்படவில்லை. அனைத்து தரப்பிலும் வலுவிழந்த சக்திகளுடனான இந்தப்போரில், வட்டார சக்திகளின் ஆதரவு இருந்த போதும், எவரும் முழுமையான வெற்றியைப் பெற்று விட்டதாகக் கூற முடியவில்லை. சீனா தனது சொந்த நலனுக்காக ஆப்கானிஸ்தானின் கனிம வளங்களை கொள்ளையடிப்பது மற்றும் போர்தந்திர பகுதிகளை தனது நலனுக்காக பயன்படுத்திக் கொள்வது ஆகிய இலாபக்கரமான கொள்கையை பின்பற்றுகிறது. ஆனால் முழு நிலைமையையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்குத் தேவையான நிதி மற்றும் இராணுவ வளங்களை ஒதுக்குவதில் எச்சரிக்கையாக உள்ளது.

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளை விட சீனா வலுவானது அல்ல. மிகப்பெரும் செல்வந்த, வலிமையான நாடுகள் இருபதாண்டுகளில் ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலை நாட்ட முடியவில்லை என்றால், சீனா, ரஷ்யா மற்றும் பிற அண்டை நாடுகள் அதை விட சிறப்பாக என்ன செய்து விட முடியும்? இருப்பினும், சீனா அதிக அளவில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. குறிப்பாக, 2013 ம் ஆண்டின், 70 நாடுகளை உள்ளடக்கிய தனது உலகளாவிய உள்கட்டமைப்பு முன்னெடுப்பான Belt and Road Initiative  தொடர்பாக சீனா தனது நடப்பில் உள்ள முதலீடுகளையும் எதிர்கால முதலீடுகளையும் பாதுகாக்க தாலிபான்களுடன் ஒரு இணக்கமான உடன்படிக்கையை எதிர் நோக்குகிறது. பீகிங், ஆப்கானில் தாலிபான்களுக்கு  நொறுங்கிக் கிடக்கும் உள்கட்டமைப்பு வசதிகளை மறுகட்டமைப்புச் செய்ய உதவ உறுதிமொழி அளித்துள்ளதாக ஈரானிய ஆதாரங்கள் கூறுகின்றன. அத்துடன் தனது ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு ஜிகாதி குழுக்கள் எல்லைத் தாண்டி ஆதரவு தருவதைத் தடுத்து அவர்களைத் தனிமைப்படுத்தவும் சீனா முயல்கிறது.

பசுஞ்சாணமும் கொரோனாவும்; மோடி அரசின் அறிவியல் ஆலோசனைகள் – சத்யசாகர்

பாகிஸ்தான்

பல பத்தாண்டு கால  அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஊடுருவல், 73 ஆண்டு கால வரலாற்றில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரவணைப்பில் பயனடைந்து வந்த பாகிஸ்தானில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது.  பல பத்தாண்டுகளாக ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி யாகச் செயல்பட்டு வரும் பாகிஸ்தான், 1980 களில் ஆப்கானிஸ்தானில் நடந்த இரத்தம் தோய்ந்த ‘டாலர் ஜிகாத்’ தையும், பின்னர் நடைபெற்ற ‘பயங்கரவாதத்தின் மீதான போர்’ என்று சொல்லப்பட்டதையும் ஆதரித்தது. இரத்தக் கறைபடிந்த  இந்த வியாபாரத்தில் பாகிஸ்தானின் ஆளும் வர்க்கம் கேடுகெட்ட பணக்காரர்களாக மாறியுள்ளதுடன், தாலிபானின் பிற்போக்குத் படைகளைப் பயன்படுத்தி பாகிஸ்தானில் உள்ள உழைக்கும் மக்கள் நடுவே கொடூர அச்சத்தைத் பரப்பி வருகிறது.

ஆனால் ஆப்கானிஸ்தானில் அண்மையில் நடந்து வரும் நிகழ்வுகள் பாகிஸ்தான் அரசின் அடித்தளத்தை  நடுநடுங்கச் செய்திருக்கிறது. அமெரிக்கா தனது அனைத்துத் தோல்விகளுக்கும் பாகிஸ்தான் மீது பழியைச் சுமத்துகிறது. பாகிஸ்தான் இந்தப் போரில்  இரட்டை வேடம் போடுவதாக மிகச் சரியாக அது கூறுகிறது. பாகிஸ்தான் ‘பயங்கரவாதத்தின் மீதான போர்’  என்று சொல்லப்படும் சண்டையை ஆதரிப்பதற்காக ஒரு வெகுமதியை (டொனால்ட் ட்ரம்பின் கருத்தின்படி 33 பில்லியன் டாலர்கள்) பெற்றுக் கொண்ட அதே சமயம் தாலிபான் தலைவர்களுக்கு புகலிடமாகவும் பாதுகாப்பான சொர்க்கமாகவும் இருந்தது. இப்போது அமெரிக்கா தனது முன்னாள் கைக்கூலிக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுக்க நினைக்கிறது. தனது நீண்டநாள் கைக்கூலியை ஒழுங்காக மேய்க்க இயலாதது அமெரிக்காவின் சொந்த நெருக்கடிக்கு ஒரு விளக்கம். இதற்குப் பிறகும் கூட, உலக அரங்கில் தனது வலிமையைப் பயன்படுத்தி பாகிஸ்தான் அரசின் வலிமையை நெரித்து இந்தப் பகுதியில் அதன்  முக்கியத்துவத்தை மட்டுப்படுத்தவும் முயல்கிறது. அமெரிக்காவின் உத்தரவின் பேரில், நிதி நடவடிக்கைக் குழு (FADF) கடந்த மூன்றாண்டுகளாக பாகிஸ்தானை சாம்பல் நிற பட்டியலில் வைத்துள்ளது. மேலும் பயங்கரவாதம் மற்றும் அதற்கு நிதியளிப்பதற்கு எதிரான தன் விதிமுறைகளை பாகிஸ்தான் கடைபிடிக்காவிட்டால் அதனை கருப்புப் பட்டியலில் வைக்கப் போவதாக அச்சுறுத்தி வருகிறது. உண்மையில், உலகளாவிய போதைப் பொருள் வர்த்தகத்துடன்  சேர்ந்த இந்த எல்லா குற்றங்களும், பாகிஸ்தான் சோவியத் யூனியனுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போரில் முன்னணியில் இருந்த 1980 களின் ‘டாலர் ஜிகாத்துடன்’ பிணைக்கப்பட்டவை. தற்போது இந்த குற்றவியல் நடவடிக்கைகள் யாவும் பாகிஸ்தான் அரசின் இரத்த நாளங்களில் ஓடும் இரத்தமாக உள்ளன.

இஸ்லாமியர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் இந்துத்துவா – அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகுமா?

அமெரிக்க ஏகாதிபத்தியம், பாகிஸ்தானின் பொருளாதாரத்தை முறியடிக்க பன்னாட்டு நிதி நிறுவனம் (IMF), உலக வங்கி மற்றும் பிற நிதி நிறுவனங்களிலும்  தனது செல்வாக்கைப் பயன்படுத்துகிறது. முதலில்  பாகிஸ்தானியப் பொருளாதாரம் பன்னாட்டு நிதி நிறுவனத்தைச் சார்ந்தே இயங்கி வருகிறது. அதுதான் பாகிஸ்தானின் எல்லா நிதிக் கொள்கைகளையும், நிதிநிலை அறிக்கைகளையும் ஆணையிடுகிறது. அமெரிக்கா இந்த ஏகாதாபத்திய நிதி நிறுவனங்களைப் பயன்படுத்தி  அதன் ஆளும் வர்க்கத்தை தனது வழியில் நடத்தி, அந்த நாட்டின் உழைக்கும் மக்கள் உருவாக்கும் செல்வத்தை எல்லாம் கடன்கள் மற்றும் வட்டி மூலமாக கரைத்து வருகிறது.  இந்த ஏகாதிபத்திய நிதிக் கொள்கையின் கீழ்தான், இந்த கோளின் மிகவும் ஏழ்மையில் இருக்கும் மக்களில் சிலர் ஆதரிக்கும் பாகிஸ்தானின் அணு ஆயுதங்களும்,   வலிமையான ஏழு லட்சம் படை வீரர்களும் உள்ளனர். கடந்த எழுபது ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில்  ” ஆழமான போர்தந்திரம்” என்ற பாகிஸ்தானின்  கொள்கையின் அடிப்படையில் இந்த ஏற்பாடு ஏகாதிபத்திய வாதிகளின் நலனை பின்தொடர பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஒரு இணக்கமான அரசை காபூலில் உருவாக்க அமெரிக்கா எண்ணியது.

ஆப்கானிஸ்தானில் போரைத் தொடர்ந்து நடத்துமாறு அமெரிக்க ஆளும் வர்க்கத்தை பாக்கிஸ்தான் மீண்டும் மீண்டும் கெஞ்சி கேட்டு வருகிறது. ஏனெனில் இதனால் அமெரிக்கா பாகிஸ்தானை நம்பி இருக்க வேண்டிய நிலை மாறி, பாகிஸ்தான் ஆளும் வர்க்கத்தின் பணப்பெட்டிக்கு வரும் டாலர்கள் நின்றுவிடும் என பாகிஸ்தான் கருதுகிறது. இத்தனைக்குப் பிறகும் அமெரிக்கா இப்போது இந்த ஒட்டு மொத்தப் பகுதியிலிருந்தும் வெளியேற முடிவு செய்துள்ளது. அமெரிக்க ஆளும் வர்க்கம் சென்ற பத்தாண்டுகளாக சீனாவுடனான மோதலால் அல்லது இந்தியாவுடன் சுமுகமாக உறவை வளர்த்து வருவதால் பாகிஸ்தான் ஒரு தரக்குறைவான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. குழந்தைகளை போருக்குப் பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா பாகிஸ்தானை சேர்த்துள்ளது. இதனால் பாகிஸ்தான் பல நாடுகளிலிருந்து இராணுவ, நிதி உதவிகளைப் பெறுவதை தடை செய்ய முடியும்.  இது பாகிஸ்தான் மீதான அமெரிக்காவின் உறவு நிலை மாறி வருவதைக் காட்டுவதாக உள்ளது.  இந்த பகுதியின் மேலான விருப்பத் தேர்வாக தேர்ந்தெடுக்கப்பட்டக் கைக்கூலி மீது ஏகாதிபத்திய எசமானர்கள் கோபம் கொண்டிருப்பதை காட்டும் நடவடிக்கையே இது ஆகும்.

பாகிஸ்தான் ஆளும் வர்க்கம் ஒருபுறம் அமெரிக்க ஆளும் வர்க்கத்தை தங்கள் பக்கம் இழுக்க முயலும் போதே மறுபுறம் தங்களுக்கு சாதகமான நிலையைப் பெற தாலிபான்கள் காபூலைக் கைப்பற்ற ஆதரவு தெரிவித்து வருகின்றது. அவர்களின் எல்லா நோக்கங்களும் முற்றிலும் முரண்பாடுகளைக் கொண்டுள்ள நிலையில்  இந்த எந்த ஒரு விருப்பமும் நிறைவேறாது. பாகிஸ்தான் ஆளும் வர்க்கம் எதிர்கொள்ளும் பிரச்சினை என்னவென்றால், தாலிபான் தலைமை பாகிஸ்தானை மட்டுமே நம்பி இல்லை என்பதுடன் ஈரான், ரஷ்யா மற்றும் பிற நாடுகளின் ஆதரவின்றி இருக்க முடியாது என்பதே. அந்த ஆதரவு இருந்தாலும், அவர்களிடம் நாடு முழுவதையும் கட்டுப்படுத்தும் படை பலம் இல்லை.

பீமாகோரேகான் வழக்கு : நிராகரிக்கப்பட்ட பிணை மனுக்களும் ஊசலாடும் நீதியும்

முடிவில்லாத திகில்

ஒருவேளை இறுதியாக தாலிபான் காபூலைப் வெற்றிகரமாக பிடித்தாலும் வலுவற்ற, நிலையற்ற ஆட்சியாகவே இருக்கும்.  உள்ளூர் நிலப்பிரபுக்கள் மற்றும் பழங்குடியினத் தலைவர்களை உள்ளடக்கிய எதிர்ப்பு சக்திகளின்   போராட்டத்துடன், உட் சண்டையும், பிளவுகளும் ஏற்படத் துவங்கும். அந்த ஏழை நாட்டின் அடித்தளத்திலேயே சமூக உறுதியற்றத் தன்மை  கட்டமைக்கப்பட்டுள்ளது‌. இதனை ஹெராயின் வர்த்தகம் மூலமாகவோ அல்லது பிற குற்ற நடவடிக்கைகள் மூலமோ தீர்த்துவிட முடியாது. சீனா, ரஷ்யா, ஈரான், பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளின் நிதி ஆதரவு உறுதியற்ற தன்மை, தீவிர வறுமை மற்றும் பெரும்பான்மை மக்களின் துயரம் ஆகியவற்றிற்கான முக்கிய காரணத்தை நீக்குவதற்கும் போதுமானவைஅல்ல.  எப்படி இருபது ஆண்டுகளாக அமெரிக்காவிலிருந்து டாலர்கள் வந்தன என்பதையும், அது குறுநிலத் தலைவர்கள், பழங்குடியின தலைவர்கள், அரசு சாரா தன்னார்வலர் அமைப்புகள் அத்துடன் நிச்சயமாக அமெரிக்க சிவில் ஒப்பந்தக்காரர்கள் ஆகியோரின் பணப்பெட்டிகளை எப்படி நிரம்பின என்பதையும் இந்நேரத்தில் நினைவில் கொள்வது பயனுடையது.

ஈரான், சீனா, ரஷ்யா ஆகியவை தங்கள் குறுகிய சுய நலனை பின் தொடர்ந்தே ஆப்கானிஸ்தானை உறுதிப்படுத்த எண்ணுகின்றனர். அங்கு நிலவும் உறுதியின்மை தங்கள் நாட்டிற்குள் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்றும், தங்கள் நலனுக்கு நட்பான ஒரு புதிய அரசு உருவாக வேண்டும் என்றும் விரும்புகின்றன. ஆனால் அவ்வளவு விரைவில் ஒரு உறுதியான அரசு உருவாக வாய்ப்பில்லை. குறுங்குழுவாத மோதல்கள், பரவி கிடக்கும் உள்ளூர் போராளிகள் மற்றும் போலி போர்களின் அதிகரிப்பு ஆகியவை ஏதாவது ஒரு வழியில் தொடரும். இது இரத்தக்களரிக்கும், கொலைகளுக்கும் வழிவகுக்கும். மேலும் ஆப்கானிய மக்களின் துன்பங்களை நீடிக்கச் செய்யும். இது ஒரு  பெரும் மக்கள் திரளை அகதிகளாக அண்டை நாடுகளுக்கு விரட்டும்.  இந்த குழப்பத்திற்கு பொறுப்பான மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் ஏற்கனவே ஆப்கானியர்களுக்கு தங்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுத்திருப்துடன்,   ஏகாதிபத்தியவாதிகளால் உருவாக்கப்பட்ட இரத்தம் படிந்த நரகத்தில் வாழ வேண்டும் என அவர்களை கண்டிக்கிறார்கள்.

போராட்ட நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள் – ஸ்டான் சாமியின் கடிதம்

நாற்பது ஆண்டுகளாகவே அண்டை நாடுகளான பாகிஸ்தான் போன்றவை  இரக்கமின்றி ஆப்கன் அகதிகளைச் சுரண்டி வருகின்றன.  ஒருபுறம் இந்த அகதிகளின் வாழ்நிலை உலகின் பணக்கார நாடுகளிடம் உதவிக்காக கோரிக்கை வைப்பதும், அது பணக்காரர்களின் பைகளையே நிரப்புவதும்தான் நடக்கிறது. மறுபுறம், இந்த ஆவணமற்ற அகதிகளின் மலிவான உழைப்பை உள்ளூர் முதலீட்டாளர்கள் சுரண்டி அதீத இலாபத்தைப் பெற்று சராசரி ஊதியத்தை மிகவும் கீழிறக்கி விட்டனர். முன்பு, அகதிகளே அரசு ஆதரவு நிறுவனங்களின் கீழ் பயங்கரவாத செயல்களை நிறைவேற்றும்  பிற்போக்குவாதிகளுக்கான  ஆட்சேர்ப்பிற்கு மூலமாக இருந்தனர். ஆனால் தற்போது, தாலிபான்கள் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்களுக்கு பரந்த அளவில் வெறுப்பு இருப்பதால் நிலைமை கணிசமான அளவு மாறிவிட்டது.

இப்போது, 1980 களில் ஜிகாதிகளின் ஏவுதளமாகவும், எதிர்தாக்குதலுக்குத் தளமாகவும் விளங்கிய ஆப்கானிஸ்தான் எல்லைகளில் உள்ள பாகிஸ்தான் பகுதிகளில் ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான கிளர்ச்சி மனநிலை  நிலவுகிறது. இராணுவ நடவடிக்கைகள் என்று சொல்லப்படுவதற்கும், மதம் மற்றும் ஏகாதிபத்திய வடிவமைப்பு என்ற பெயரில் நடக்கும் போர் மற்றும் அட்டூழியங்களுக்கும் எதிராக ஒரு வலுவான இயக்கம் உருவாகி உள்ளது. கெடுவாய்ப்பாக இதன் தலைமை இந்த இயக்கத்தில் நாடு முழுவதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தை  இணைத்து இயக்கத்தை ஒரு வர்க்க அடிப்படையிலான இயக்கமாக மாற்றவில்லை. இதற்கு மாறாக, அவர்கள் தாலிபான்களின் கொடூரத் தாக்குதலுக்கு எதிரான தீர்விற்காக  ஆட்டுக் குட்டி ஓநாயிடம் உதவி கேட்பது போல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நம்புகின்றன.

இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை – கனடாவில் நடந்த இன அழிப்பின் சாட்சியங்கள்

தற்போதைய சூழல், கடந்த இருபது ஆண்டுகளாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஆதரித்து வந்த ‘இடதுசாரிகள்’ என்றும் ‘ தேசியவாதிகள்’ என்றும் தங்களை அழைத்துக் கொள்பவர்களின் உண்மையான தன்மையை அம்மலப்படுத்தி உள்ளது. மார்க்சிஸ்டுகள் வாதிட்டது போல், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும், தாலிபான் பிற்போக்கு வாதிகளுக்கும் எதிராக ஒரே நேரத்தில் ஒரு வர்க்கப் போரை நடத்தி இருந்தால், நிலைமை இன்று முற்றிலும் வேறாக இருந்திருக்கும். ஒரு புரட்சிகரமான மாற்று, ஆப்கன் மக்களுக்குக் கிடைத்திருக்கும். அண்டை நாடுகளின் குறிப்பாக ஈரான் மற்றும் பாகிஸ்தானின் தொழிலாளர் வர்க்கத்தின் ஆதரவுடன் ஒரு வர்க்கப் போராட்டம் நடைபெற்றிருக்கலாம். இறுதியாக, அவர்கள் அமெரிக்கா உள்ளிட்ட உலகம் முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்களின் ஒற்றுமையை கோரியிருக்கலாம். ஆனால் முன்னாள் இடதுசிரிகளும், தேசியவாதிகளும் அதற்கான சாத்தியக் கூறினை மறுத்து விட்டனர். அத்துடன் மற்றொரு ஏகாதிபத்தியத்தின் இரத்தம் தோய்ந்த கரங்களைப் பிடித்துக் கொண்டனர். இதன்மூலம் நாடு முழுவதையும் ஒரு படுகுழியில் தள்ளி விட்டனர்.

நடந்துவரும் குழப்பங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு, தனித்துவமான புரட்சிகர மார்க்சியத்தின் அடிப்படையிலான ஒரு புரட்சிகர மாற்றை கூட்டமைப்பிற்கு இதுவே தக்க தருணம். போரில் சிதைந்து மௌன இந்த பகுதியில் அமைதியையும் வளத்தையும் கொண்டு வருவதற்கும், அனைத்தே பிற்போக்குத் சக்திகளையும் தோற்கடிப்பதற்கும் இந்தப் பகுதியின் உழைக்கும் வர்க்கத்திடம்தான் உத்வேகமும், உறுதியும் உள்ளது. முதலாளித்துவத்தின் அடிப்படையில், அனைத்து வழிகளும் நாசமடைவதற்கும் அழிவிற்குமே இட்டுச் செல்லும். அது அடுத்தத் தலைமுறை ஆப்கன் மக்களை ஏராளமான முரண்பாடுகளுக்கும் பேரழிவிற்குமே இட்டுச் செல்லும்.

கும்பமேளா கொரோனா போலி பரிசோதனைகள்: குற்றத்திற்கு துணை நின்றதா பாஜக? – விலகும் திரை பெருகும் ஒளி

சோசலிச மாற்றமே ஆப்கானிஸ்தான் முன்னால் உள்ள ஒரே வழி. அது ஈரான், பாகிஸ்தான் மற்றும் இந்தப் பகுதியில் உள்ள பிற நாடுகளின் புரட்சிகளின் தலைவிதியுடன் தொடர்புடையது. இந்த கருத்துக்களின் அடிப்படையில் ஒரு புரட்சிகரப் படையை கட்டமைப்பின் கான் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இது ஒன்றே   ஆப்கானிஸ்தானில் இடைவிடாது தொடர்ந்து  வரும்  போரை முடிவுக்குக் கொண்டு வரும். அத்துடன் இரத்தம் சிந்துவதற்கு  முற்றிலுமாக ஒரு முடிவு கட்டும்.

 

www. marxist.com இணையதளத்தில் ஆடம் பால் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்