பல இரட்டை வேடங்கள், பல சதித்திருப்பங்களைக் கொண்ட பாலிவுட் திரைப்படங்களைப் போல, மூன்று புதிய விவசாயப் சட்டங்களைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் குறிப்பிட்ட சில சட்டங்களை மட்டும் பாதிக்கவில்லை, அதற்கும் மேலாக மிக மோசமானதாக உள்ளது. 1995 ஆம் ஆண்டு வருமானவரிச் சட்டத்துடனும், 2017 மத்திய சரக்கு மற்றும் சேவை வரிச் (CGST) சட்டத்துடனும் இணைத்துப் படிக்கும்போது அதன் மோசமான சதி அவிழத் தொடங்குகிறது.
வருமான வரிச் சட்டம் பிரிவு 2 (1அ)வின் படி, வேளாண் வருமானம் என்பது இந்தியாவில் அமைந்துள்ள நிலத்திலிருந்துப் பெறப்பட்ட எந்தவொரு வாடகை அல்லது வருவாய், விவசாய நிலங்கள் மற்றும் கட்டிடங்களின் வாடகை உட்பட அனைத்திற்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை ஆணையருக்கும், ராஜா பினோய்ராய் என்பவருக்கும் இடையிலான வழக்கில் (1957) உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் விவசாய வருமானம்பற்றிய விளக்கத்தைத் தருகிறது.
இந்திய சந்தைகளின் செயல்திறன் மேம்படுத்தப்படும் – விவசாய சட்டங்கள் குறித்து அமெரிக்கா கருத்து
விவசாய வருமானம் என்ற தகுதியைப் பெற, அடிப்படை நடவடிக்கைகள் மற்றும் அடுத்தடுத்த தொடர் நடவடிக்கைகள் என்ற இரண்டு வகையான நடவடிக்கைகள் அவசியம். அடிப்படை நடவடிக்கைகளில், சாகுபடி குறித்த நமது தொன்மை புரிதல் படி, உழுதல், விதைத்தல், நடுதல், இன்ன பிற., மேலும் பயிர்களை முளைக்கச் செய்யத் தேவையான உழைப்பு மற்றும் திறன் ஆகியவை அடங்கும்.
தொடர் செயல்பாடுகளில் பயிர் முளைத்தப் பிறகு அதிகமாகத் தேவைப்படும், களை எடுத்தல், தோண்டுதல், அகற்றுதல் மற்றும் பூச்சிகள், கால்நடைகள், நோய் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்தல் இன்ன பிற அடங்கும். ஒப்பந்த விவசாயத்தில், ஒரு விவசாயி இவற்றில் பல செயல்பாடுகளை மேற்கொண்டு வரிவிலக்கிற்கானத் தகுதியைப் பெற முடியும்.
கார்பரேட் விவசாயத்தின் கீழ், விவசாயி முற்றிலும் நிலத்தைக் குத்தகைக்கு விட்டுவிடுகிறார். அடிப்படை மற்றும் தொடர் நடவடிக்கைகளைக் கார்பரேட்டுகள் மேற்கொள்கிறார்கள். ஆயினும் தற்போது விவசாயிகள் தொடர்ந்து வருமான வரி விலக்கைப் பெறுவார்கள்.
அச்சில் மறைந்திருக்கும் விதிகள்
ஜிஎஸ்டியின் வில்லத்தனம் இரட்டை வேடம் வெளிச்சத்திற்கு வரும் போதுதான், கதைக்களம் இன்னும் மோசமான ஒன்றுக்கு வழிவகுக்கிறது. 2017 ஆம் ஆண்டின் ஜிஎஸ்டி சட்டத்தின் அட்டவணை II ன் பத்தி 2(அ) படி, எந்தவொரு குத்தகை, வாடகைக்கு விடுதல், நிலத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் பயன் உரிமை மற்றும் நிலத்தை வைத்துக் கொள்ளத் தரப்படும் உரிமை ஆகிய அனைத்தும் சேவை வழங்கலாகக் கருதப்பட்டு 18% ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு உள்ளாகும்.
“உங்கள் டிராக்டர் கவர்ச்சிகரமானது” – விவசாயிகளுக்கு ஆதரவாக மீண்டும் குரல் எழுப்பிய அமெண்டா
அதே சமயத்தில், “உணவு, நார், எரிபொருள், மூலப்பொருள் அல்லது பிற ஒத்தப் பொருட்கள் அல்லது விவசாய விளைபொருட்களுக்காக, குதிரை வளர்ப்பதைத் தவிர, பயிர்களை வளர்ப்பது மற்றும் அனைத்து வகை விலங்கினங்களையும் வளர்ப்பது
(அ) சாகுபடி, அறுவடை, கதிரடிப்பது, தாவரப் பாதுகாப்பு அல்லது சோதனை உள்ளிட்ட எந்தவொரு விவசாயப் பொருட்களின் உற்பத்தியுடன் நேரடியாகத் தொடர்புடை விவசாய நடவடிக்கைகள்:
(ஆ) பண்ணைத் தொழிலாளர் வழங்கல்,
(இ) விவசாயப் பண்ணையில் செய்யப்படும் நடைமுறைச் செயல்களான கவனித்தல், சீர்தறிப்பு, வெட்டுதல், அறுவடை செய்தல், உலரவைத்தல், சுத்தம் செய்தல், ஒழுங்கமைத்தல், வெய்யிலில் உலர வைத்தல், புகைமூட்டல், பதப்படுத்துதல், பிரித்தல், தரப்படுத்துதல், குளிரச் செய்தல் அல்லது மொத்தமாகக் கட்டுதல், மேலும் இது போன்ற விவசாய உற்பத்தியின் அவசியமான பண்புகளை மாற்றாத, ஆனால் முதன்மைச் சந்தையில் மட்டுமே சந்தைப்படுத்தக்கூடிய வகையில் உள்ள
(ஈ) போதுமான கட்டிட வசதிகளுடனோ அல்லது இல்லாமலோ விவசாய இயந்திரங்கள் அல்லது காலியான நிலத்தை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடுதல்;
(உ) விவசாயப் பொருட்களை ஏற்றுதல், இறக்குதல், பொதி செய்தல், சேமித்தல் அல்லது கிடங்கில் வைத்தல்
- f) விவசாய விரிவாக்கச் சேவைகள்
(எ) எந்தவொரு வேளாண் உற்பத்தியையும் சந்தைப் படுத்துதல், குழு அல்லது வாரியத்தின் சேவைகள் அல்லது விவசாய விளைபொருட்களை விற்பனை செய்வதற்காகவோ அல்லது வாங்குவதற்கோ ஒரு இடைத்தரகர் வழங்கும் சேவைகள்.”
ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படும்.
“கவால்துறையினர் என்னை கடுமையாக தாக்கினர்” – பத்திரிகையாளர் மந்தீப் புனியா குற்றச்சாட்டு
வேளாண் நடவடிக்கைகளையும் சேர்த்து விவசாய நிலங்களைக் குத்தகை விடுவதற்கு ஜிஎஸ்டி வரி இல்லையென ஜிஎஸ்டி சட்டம் கூறியிருக்கலாம். ஆனால் உற்பத்தியுடன் நேரடியாகத் தொடர்புடை செயல்பாடுகள் மட்டுமே வரிவிலக்கிற்குத் தகுதி பெறுகின்றன என்பதையும் குறிப்பிடுகிறது. விவசாய இயந்திரங்களைக் குத்தகைக்கு மற்றும் வாடகைக்கு விடுவதும் இதில் சேர்க்கப்பட்டிருந்தாலும், விவசாய நிலங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடுவது பற்றிக் குறிப்பிட்டு எதுவும் கூறவில்லை. இது விவசாய குத்தகைகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பது குறித்த ஐயத்திற்கு இடமளிக்கிறது. மேலும், இது மூன்று விவசாயச் சட்டங்களின் பின்னணியில் தெளிவற்றதாகவே இருக்கின்றன.
எனவே, கார்பரேட் விவசாயத்திற்கு குத்தகைக்கோ வாடகைக்கோ விடும் விவசாயி, அடிப்படை அல்லது தொடர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என்பதாகக் காட்டி சேவையை வழங்குவதாக விளக்கலாம்.
2028, மே 28 ஆம் தேதி, நிதி அமைச்சகம் கொடுத்துள்ள விளக்கத்தின் படி, விவசாயிகளுக்கு ஜிஎஸ்டி பதிவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுகிறது. விவசாயி என்பவர், “சாகுபடியில் ஈடுபடும் தனிநபர் அல்லது பிரிக்கப்படாத இந்து குடும்பம் – சொந்த உழைப்பு அல்லது குடும்ப உழைப்பு அல்லது வேலையாள்மூலம் அல்லது பணமாகத் தரப்படும் கூலி அல்லது கருணை அடிப்படையில் அல்லது சொந்த மேற்பார்வையில் வாடகைக்கு ஆட்களை வைத்துக் கொள்வது அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவரின் மேற்பார்வையில் செய்யப்படுவது ஆகும்.”
ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வழக்குகள்: உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் – மதன் பி.லோக்கூர்
இந்த அறிக்கை மேலும் உறுதிப்படுத்துவது என்னவென்றால், நேரடியாக அடிப்படை அல்லது தொடர் விவசாய நடவடிக்கையில் ஈடுபடாத விவசாயிகளுக்கு, ஜிஎஸ்டியில் பதிவு செய்ய முடியாது. எனவே 18% ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும். ஒரு விவசாய நிலக் குத்தகைச் சேவை வழங்கல் என்ன என்பதை நிதி அமைச்சகத்தின் செய்திக் குறிப்பிற்குப் (press release) பதிலாக ஒரு அறிவுறுத்தல் (notification) மூலம் தெளிவுபடுத்தி இருக்கலாம்.
விவசாயி அடிப்படை அல்லது தொடர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடாமல் கார்பரேட் பண்ணை மாதிரியில் விவசாய நிலத்திற்கான வாடகைப் பெறுவது எப்படி வரிவிதிப்பிற்குள்ளாகும்? எந்த வருமான உச்சவரம்பு வரை? போன்றவை தெளிவாக இல்லை. ஏற்கனவே விவசாயி முன் அனுமானிக்க முடியாத காலநிலை, நிலத்தின் தன்மை, நிலத்தடி நீர்மட்டம், உள்ளீட்டு விலைகள், குறைந்தபட்ச ஆதார விலை ஆகியவற்றால் பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறான். வரிச் சட்டங்களில் உள்ள இரகசிய குறியீடுகளை அறிந்து கொள்வது விவசாயிகளுக்கு முற்றிலும் அனுபவமில்லாதது அல்லது ஆதரவு என்பது ஒரு சதித்திட்டத்தின் திருப்பம்.
தொழிலாளர், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தலித் இளம் பெண் – காவல் நிலையத்தில் சித்திரவதை
வரி செலுத்துபவர்களை நட்சத்திரங்களாகக் காட்டும் இந்த மூன்று விவசாயப் சட்டங்களும், விவசாயிகளுக்குத் திகில் திரைப்படமாகவே மாறும். இவை ஒருவேளை திரும்பப்பெறப்பட்டாலும், ஏற்கனவே சட்டமாகிவிட்ட ஜிஎஸ்டி, விவசாய குத்தகை வருமானத்தை எப்படி நடத்தும் என்பது பற்றி எந்த விளக்கமும் அல்லது நிவர்த்தியும் குறித்து எந்த கவனமும் இல்லை.
மாநில அரசுகளும் விவசாய சங்கங்களும் மத்திய அரசிடம் அடிப்படை அல்லது தொடர் விவசாய நடவடிக்கைகளில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அனைத்து விவசாய நிலங்கள் மற்றும் கட்டிடக் குத்தகைகள் வருமானத்தையும், ஜிஎஸ்டி வரி விலக்கின் கீழ் கொண்டு வருவது பற்றிய தெளிவான அறிவிப்பைப் பெற வேண்டும். பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்திரப்பிரதேச விவசாயிகளை மட்டும் போராடும் வில்லன்களாகக் காட்டுவது நடக்கிறது. ஆனால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் ஜிஎஸ்டி யின் கீழ் வரி செலுத்த வேண்டிய நிலைகுறித்து கவலைப்பட வேண்டும்.
(www.thewire.in இணையதளத்தில், ஜெய்மால் ஷெர்கில் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்)
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.