Aran Sei

என்னை ஆபாசமாக திட்டி என் மீது செருப்பை வீசி எறிந்தார் – சோமாட்டோ ஊழியர் புகார், பெங்களூரு பெண் மீது வழக்கு பதிவு

தான் பலமுறை மன்னிப்பு கேட்டும் ஹிதேஷ் சந்திராணி தன்னை ஆபாசமாக திட்டி, தன் மீது செருப்பை வீசி எறிந்ததாக, சோமாட்டோ ஊழியர் காமராஜ் காவல்துறையில் புகாரளித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது

சென்ற வாரம் செவ்வாய்க் கிழமை, பெங்களூரில் வசிக்கும் ஹிதேஷ் சந்திரானி, எனும் நபர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு காணொளியை பதிவு செய்திருந்தார்.

அந்தப் பதிவில், தனக்கு உணவு டெலிவரி செய்ய வந்த சோமாட்டோ ஊழியர் 59 நிமிடங்கள் தாமதமாக வந்ததாகவும், இதனால் தான் செய்திருந்த ஆர்டரை ரத்து செய்ய முற்பட்டபோது, சோமாட்டோ ஊழியர் காமரஜ் தன்னை தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாகவும் தெரிவித்திருந்தார்.

அரசின் தனியார்மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் – வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

இதனால் தன்னுடைய மூக்கு உடைக்கப்படதாகவும், அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, புதன் கிழமையன்று, சோமாட்டோ ஊழியர் காமராஜ் மீது, அவர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 325 மற்றும் 504-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சமூக ஊடகத்தின் ஊழியர்கள் யாரையும் அரசு அச்சுறுத்தவில்லை – மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம்

இதையடுத்து, கடந்த மூன்று வருடமாக சோமாட்டோ நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த காமராஜ் அந்நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டு, காவல்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தனியார் மயமாகும் பொதுத்துறை வங்கிகள் – ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு திருமாவளவன் ஆதரவு

இந்நிலையில், நேற்றைய தினம், சோமாட்டோ ஊழியர் காமராஜ், ஹிதேஷ் சந்திராணி மீது காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

அந்தப் புகாரில், “நான் பலமுறை மன்னிப்பு கேட்டும் அவர் என்னை ஆபாசமாக திட்டி, என் மீது செருப்பை வீசி எறிந்தார். நான் என்னை தற்காத்து கொள்ள மட்டுமே செய்தேன். அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட காயம் அவருடைய மோதிரத்தால் நிகழ்ந்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அரசு ஊழியர்களை தேர்தல் ஆணையராக நியமிக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

இதையடுத்து ஹிதேஷ் சந்திராணி மீது, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள், 341, 355, 504, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

” தொழிற்சங்க உரிமையில் முதலாளிகள் தலையிட முடியாது ” – அமேசான் ஊழியர்களுக்கு ஆதரவாக ஜோ பைடன்

இது தொடர்பாக சோமாட்டோ நிறுவனத்தின், இணை நிறுவனர், தீபிந்தர் கோயல், ”இரண்டு பக்கத்தின் நியாயத்தையும் வெளிக் கொண்டு வர, அனைத்து விதமான உதவிகளும் வாடிக்கையாளருக்கும் ஊழியருக்கும் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாலிவுட் நடிகர் பர்நிதி சோப்ரா, ”சோமாட்டோ ஊழியர் மீது எந்த தவறும் இல்லை என்றால், அந்தப் பெண் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்