Aran Sei

பூஜ்ஜியம் கல்வியாண்டு மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் – கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எச்சரிக்கை

மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் பூஜ்ஜியம் கல்வியாண்டு என்கின்ற விவாதத்தை அரசு கைவிட வேண்டும் என்று கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய்த்தொற்றின் காரணத்தால் உலகம் முழுவதும் பல்வேறு நெருக்கடியான சூழல்களும் தொடர்ச்சியான உறங்கினால் பள்ளி கல்லூரி வளாகங்கள் உட்பட அனைத்து கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டன. மாணவர்களின் நலன் மற்றும் எதிர்காலம் குறித்து பரந்துவிரிந்த பார்வையோடு முடிவுகளை எடுக்க வேண்டிய அரசு ஊரடங்கு காலத்தில் மாணவர்களின் கல்வி சார்ந்த அறிவிப்புகளை வெளியிடும் சமயத்தில் முன்னுக்குப்பின் முரணாக அறிவிப்புகளை வெளியிட்டு வருத்தமளிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பிசி, எம்பிசி ஏழை மாணவர்களுக்கும் முழு கல்விக் கட்டணம் இலவசம்’ – புதுவை முதல்வர் அறிவிப்பு

கல்வி ஆண்டை பூஜ்யம் கல்வி ஆண்டாக அறிவிப்பதற்கான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளாதாகவும், பூஜ்ஜிய கல்வியாண்டு என்பது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என்றும் அதோடு அவர்களின் கனவை சிதைத்து மன உளைச்சலுக்கு ஆளாக கூடியதாகவே இருக்கும் என்று தெரிவித்த கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,. பூஜ்ஜியம் கல்வியாண்டின் நடைமுறைப் படுத்துவதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கக்கூடும். மேலும், இதனால் ஏற்படும் நன்மைகளை விட பின்விளைவுகளை அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் தள்ளுபடி – ஸ்டாலின்

”அனைவருக்கும் கல்வி என்கிற அடிப்படையில் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களின் தேர்ச்சி பெற செய்ய வைக்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், இங்கு கல்வி ஆண்டில் மீண்டும் படிக்கவேண்டும் என்கிற நிலையை இந்த அறிவிப்பு ஏற்படுத்தும். இதனால் ஒட்டுமொத்த மாணவர்களின் எதிர்காலம் பாதிப்படைவது கல்வி கட்டணம் மீண்டும் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் இயற்கை ஊரடங்கு காலத்தில் அனைத்து தொழில்களும் முடங்கிப் போனதால் பெற்றோர்களிடம் பணம் இல்லாத காரணத்தினால் பல குடும்பங்களில் உள்ள மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறிய அவலம் இருக்கும் பட்சத்தில் இதுபோன்ற அறிவிப்பு கல்வி இடைநிற்றலை அதிகப்படுத்துவதோடு குழந்தை தொழிலாளர்களை உருவாகி விடுமோ என்கிற அச்சம்” எழுவதாகவும் கூறியுள்ளது.

‘நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும்’ – அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கியதற்கு பின்பும் இந்த கல்வி ஆண்டு இன்னும் 4 மாதங்களில் நிறைய இருக்கும் சூழலில் பூஜையும் கல்வியாண்டு என்பது குறித்து விவாதிப்பது மாணவப் பருவத்தில் மிக முக்கியமான ஒரு வருடத்தை இழக்கச் செய்வது அவர்கள் தோல்வியுற்றது போலவே இருக்கும் இதனால் இந்த அறிவிப்பு மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாகக் கூடிய அறிவிப்பாகவே இருக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இந்த கல்வி ஆண்டிற்கான கல்வி கட்டணங்களை பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் செலுத்தியுள்ளனர். மேலும் மாணவர்களுக்கு பாடங்களை இணைய வழியாக நடத்தி முடித்து அவர்களுக்கு தேர்வுகளும் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் இதுபோன்ற அறிவிப்பு மாணவர்களை பாதிக்கக்கூடும் என்றும் கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களிலும் ஊரடங்கிற்குப் பின்பு கல்வி வளாகங்கள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்க்கும் வேலையில்,  அந்த மாநிலங்களில் இதுவரை பூஜ்ஜியம் கல்வி ஆண்டு பற்றிய எந்த விவாதமும் நடைபெறாத சூழலில் தமிழகத்தில் மட்டும் பூஜ்ஜியம் கல்வி ஆண்டு குறித்து விவாதிப்பது சரியானது அல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.

மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் மறுக்கப்படும் இடஒதுக்கீடு – நடப்பது என்ன?

பூஜ்ஜியம் கல்வியாண்டு என அறிவிக்கும் பட்சத்தில் பிற மாநிலங்களில் அதேபோன்று அறிவிப்பு வெளியாக வில்லை எனில் நமது மாநில மாணவர்களின் மிக முக்கியமான ஒரு வருடத்தை  இழக்க நேரிடும், அதோடு மத்திய பல்கலைக் கழகங்களுக்கு செல்வதற்கான தேர்வுகளிலும் மத்திய வேலை வாய்ப்புகளிலும் ஒருவருடம் பின் தங்கியிருக்கும் நிலை உருவாகும் இதனால் மாணவர்களுக்கு மட்டுமல்லாது நமது மாநிலத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

கல்வி சார்ந்த விஷயங்களில் அரசு மிகத் தெளிவானதொரு முடிவை எடுக்கவேண்டும் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் பூஜ்ஜிய கல்வி ஆண்டு என்ற விவாதத்தை நிறுத்திவிட்டு இந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் கல்வியை கற்றுக் கொடுப்பதற்கும் அவர்களை தேர்ச்சி பெற வைக்கவும் அரசு உரிய நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க வேண்டும் என கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் கேட்டுக்கொள்ளப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்