நடுத்தர வர்க்கத்தினருக்கும் ஏழைகளுக்கும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “சம்பளம் பெறுவோர், நடுத்தர மக்கள், ஏழைகள்உள்ளிட்ட சாதாரண மக்களுக்கு பட்ஜெட்டில் ஒன்றுமில்லை. சமூகத்தில் நலிந்த பிரிவினர்,இளைஞர்கள், விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு எதுவும் கூறப்படவில்லை. பிரதமர் மோடி அரசின் இந்த பட்ஜெட் வெறும் பூஜ்ஜியம்” என்று தெரிவித்துள்ளார்.
M0di G0vernment’s Zer0 Sum Budget!
Nothing for
– Salaried class
– Middle class
– The poor & deprived
– Youth
– Farmers
– MSMEs— Rahul Gandhi (@RahulGandhi) February 1, 2022
மம்தா பானர்ஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், பணவீக்கம், விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டத்தால் மக்கள் நசுக்கப்படுகின்றனர். அவர்களுக்கான எந்த அறிவிப்புகளும் இல்லாத பூஜ்ஜிய பட்ஜெட்டாக இது உள்ளது. வெறும் வார்த்தை ஜாலங்களைத் தவிர சாதாரண மக்களுக்கு பட்ஜெட்டில் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.
BUDGET HAS ZERO FOR COMMON PEOPLE, WHO ARE GETTING CRUSHED BY UNEMPLOYMENT & INFLATION. GOVT IS LOST IN BIG WORDS SIGNIFYING NOTHING – A PEGASUS SPIN BUDGET
— Mamata Banerjee (@MamataOfficial) February 1, 2022
ஒன்றிய பட்ஜெட்டானது ஒருபுறம் பருவநிலை மாற்றத்தை குறித்தும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து பேசுகிறது, ஆனால் மறுபுறம் சூழலியல் பேரிடரை உருவாக்கும் நதிநீர் இணைப்பை ஊக்குவிக்கிறது என்று ஒன்றிய அரசின் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.