Aran Sei

’காலிஸ்தானிகளோடு விவசாயிகளுக்கு தொடர்பிருப்பதாக செய்தி வெளியிட்ட ஜீ நியூஸ்’ – செய்திகளை நீக்க செய்தி ஒளிபரப்பு ஆணையம் உத்தரவு

விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளுக்கு காலிஸ்தானிகளுடன் தொடர் உண்டு என்றும் ஜனவரி 26 அன்று டெல்லி செங்கோட்டையில் இருந்து இந்திய மூவர்ணக் கொடி அகற்றப்பட்டது என்றும் பொய்யாக நெறிமுறைகளை மீறி மூன்று காணொளிகளை ஒளிபரப்பியுள்ளதாக ஜீ செய்திகள் தொலைக்காட்சிமீது செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தர நிர்ணய ஆணையம் கண்டறிந்துள்ளது.

அக்காணொளிகளை அகற்றுமாறு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இரண்டு டைம்ஸ் நவ் தொலைக்காட்சி தொகுப்பாளர்களான ராகுல் ஷிவ்சங்கர் மற்றும் பத்மஜா ஜோஷி இருவரும், கடந்தாண்டு பிப்ரவரி மாதம் டெல்லி கலவரம் குறித்து நடத்திய விவாதங்கள் நடுநிலையோடு நடத்தப்படவில்லை என்று அவ்வாணையம் கண்டறிந்த அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு இச்செய்தி வெளி வந்துள்ளது.

‘60 டிராக்டர்கள், 1000 விவசாயிகளுடன் நாடாளுமன்றம் நோக்கி பெரும் பேரணி’- ராகேஷ் திகாயத் அறிவிப்பு

ஜீ செய்திகள் தொலைக்காட்சியில், ஜனவரி மாதம் 19, 20 மற்றும் 26 ஆகிய தேதிகளில், ஒளிபரப்பப்பட்ட இரண்டு நிகழ்ச்சிகள் தொடர்பாக சமூக ஆர்வலர் இந்திரஜீத் கோர்படே தாக்கல் செய்த புகாரை விசாரித்து இவ்வுத்தரவை செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தர நிர்ணய ஆணையம் பிறப்பித்துள்ளது.

ஒளிபரப்பப்படும் செய்தி அறிக்கைகள் வதந்தி, பீதி, தேவையற்ற பயம் போன்றவற்றை உருவாக்கக் கூடாது என்ற விதி உட்பட, எட்டு வழிகாட்டுதல்கள் அந்நிகழ்ச்சிகளில் மீறப்பட்டுள்ளன.

ஜெர்மனியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்ட விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட டிராக்டர்களைக் காட்டும் காணொளி உட்பட, விவசாயிகளின் போராட்டங்களுடன் தொடர்பில்லாத காணொளிகளை முறையாக சரிபார்க்காமல் அந்நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டன என்று சமூக ஆர்வலர் இந்திரஜீத் கோர்படேவின் புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பட்டியல் சமூகப் பெண்ணை திருமணம் செய்ததால் வேலை பறிப்பு – வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு

போராடும் விவசாயிகளின் ஒரு பகுதியினர் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட நாளான குடியரசு தினத்தன்று, ஜீ நியூஸ் செய்தி தொலைக்காட்சியில், ‘குடியரசு தினத்தில் உள்நாட்டுப் போர்’, ‘குடியரசுக்கு எதிரான போரின் சதி’, ‘போராட்டத்தில் பயங்கரவாதத்தின் நிழல்’ மற்றும் ‘விவசாயிகள் பிடிவாதம்- ஒரு இரத்தக்களரி போர் முடிவு செய்யப்படுகிறதா?’ போன்ற தலைப்புகளில் செய்திகள் வெளியிடப்பட்டன.

Source: The Wire, LiveLaw,

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்