Aran Sei

வெறுப்பு பிரச்சாரம் செய்யாமல் திருந்துங்கள்: அடிப்படைவாதிகளுக்கு அறிவுரை வழங்கிய யுவன் ஷங்கர் ராஜா

ஃபேஸ்புக்கில் குரான் வாசகத்தைப் பதிவிட்டதற்காக கடும் விமர்சனத்தை எதிர்கொண்ட யுவன்ஷங்கர் ராஜா, ”வெறுப்பு பிரச்சாரம் செய்வதை நிறுத்துங்கள். உங்களுக்கு அமைதி கிடைக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம், சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் ஏறக்குறைய 20 லட்சம் பின்தொடர்பாளர்களை கொண்டுள்ள இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ”அவர்களும் திட்டமிடுகிறார்கள், அல்லாவும் திட்டமிடுகிறார், ஆனால் அல்லாதான் திட்டமிடுவதில் வல்லவர் (குரான் 8:10)” என்கிற வாசகத்தைப் பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவின் வழியாக யுவன் ஷங்கர் ராஜா இஸ்லாமை பரப்புவதாக குற்றம் சாட்டி, அவருடைய பதிவில் பின்னூட்டமிட்ட பலருக்கு யுவன் ஷங்கர் ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.

அவரை ஃபேஸ்புக்கில் பின் தொடரும் ஸ்ரீ கிருஷ்ணன் எனும் நபர், “நான் உங்களை விரும்பியதும், உங்களைப் பின்தொடர்வதற்குமான காரணம், நீங்கள் யுவன்ஷங்கர் ராஜாவாக பிறந்து தான். இது மதத்தைப் பரப்பும் தளம் அல்ல. இது தொடர்ந்தால் நான் உங்கள் பக்கத்திலிருந்து நிரந்தரமாக வெளியேற நேரிடும்” என பதிவிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்த யுவன் ஷங்கர் ராஜா, ”வெளியேறவும்” என பதிவிட்டுள்ளார்.

மற்றொரு நபர், ”புதிய மதத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் நீங்கள், இன்னும் ஏன் உங்கள் பழைய பெயரையே பயன்படுத்துகிறீர்கள். இந்தப் புதிய மதத்தில் நீங்கள் புதிதாக பிறந்துள்ளீர்கள். எனவே உங்கள் பெயரை மாற்றுங்கள் இல்லையெனில் நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ள மதத்தை இழிவு செய்வது போன்றது” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்த யுவன், ”நான் உங்களுக்கு ஒரு சில விஷயங்களைத் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.  நான் ஒரு இந்தியன், நான் ஒரு தமிழன், நான் ஒரு இஸ்லாமியன். இஸ்லாமியர்கள் அரேபிய நாடுகளில் மட்டும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என நீங்கள் எண்ணினால் அது உங்களின் அறியாமையை வெளிப்படுத்துகிறது. மதமும் இனமும் இரு வெவ்வாறான விஷயங்கள். இனமும் மொழியும் ஒரு வெவ்வாறான விஷயங்கள். தேசியமும் மதமும் வெவ்வாறான விஷயங்கள். நம்பிக்கை என்பது நம்மில் இருப்பது. இந்த அடிப்படை விஷயமே உங்களுக்குப் புரியவில்லை என்றால், உங்களுக்கு என்ன தான் புரியும்?” என்று தெரிவித்துள்ளார்

மேலும், “நீங்கள் இது போன்ற இழிவான செயல்களை நிறுத்த வேண்டும் என்று தான் நான் இவ்வளவும் நேரம் எடுத்துக் கொண்டு ஒரு சக இந்தியச் சகோதரனுக்கு இதைத் தெளிவுப்படுத்தியுள்ளேன். வெறுப்பு பிரச்சாரம் செய்வதை நிறுத்துங்கள். உங்களுக்கு அமைதி கிடைக்கட்டும்” என்று பதிலளித்துள்ளார்.

”இது மதத்தைப் பரப்பும் பக்கமா? நாங்கள் உங்களைப் பின்தொடர்வது உங்களின் இசைக்காகத் தான், உங்களுடைய மத பிரச்சாரத்தைப் பார்க்க அல்ல. நான் இனியும் உங்களைப் பின் தொடர வேண்டுமா?” என்று விக்னேஷ் மாயவேல் எனும் நபர் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்திருக்கும் யுவன், ”வேண்டாம். நீங்கள் என்னைப் பின்தொடர வேண்டியதில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

விஷ்வ ஹிந்து பரிஷித் நடத்திய பேரணியில் வன்முறை – மசூதியின் மீது பறக்கவிடப்பட்ட காவிக் கொடி

”அமைதியான இந்து மதத்தை விடுத்து,  உலக நாடுகளை அமைதியின்மையால் தவிக்க வைத்துக் கொண்டிருக்கும் வன்முறை மதமான இஸ்லாமுக்கு ஏன் மாறினீர்கள் என்று இன்னும் புரியவில்லை” என தேசார் சாய் ஷஷாங்க் என்பவர் பதிவிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்திருக்கும் யுவன், ”எளிய காரணம் தான். ஏனேன்றால் அது என்னுடைய முடிவு. என்னுடைய நம்பிக்கை என்பது என்னுடைய உரிமை. இது ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபத்தை ஏற்படுத்துகிறது?” என்று பதில் கேள்வியெழுப்பியுள்ளார்.

`வலதுசாரி சித்தாந்தத்தை நம்பித் தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ளார்’ – நியூலாந்து விசாரணை ஆணையம்

சங்கர் ரெட்டி எனும் நபர், ”இந்துக்களின் பகவத் கீதையும், கிறிஸ்துவர்களின் பைபிலும் இதையே தான் போதிக்கிறது. ஒரு பிரபலமாக இருக்கும் நீங்கள் அனைத்து மதங்களுக்கும் மரியாதை வழங்க வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

”எனக்குப் பிடித்த வேத நூலிலிருந்து எனக்குப் பிடித்தமான வரிகளை சமூகவலைதளத்தில் பதிவிடுவதற்கும், மற்ற மதங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று கூறுவதற்கும் என்ன தொடர்பு உள்ளது?” என்று பதில் கேள்வியெழுப்பியுள்ளார்.

சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்படும் பஜ்ரங் தளம் – தடை செய்ய அச்சப்படும் ஃபேஸ்புக் நிறுவனம்

அவர் தொடர்ந்து, ”ஏன் சர்ச்சையை உருவாக்குகிறீர்கள்?” என்று பதிவிட்டுள்ளார்.

“கிறிஸ்துமஸ் அன்று தேவாலயம் செல்லும் இந்துக்களை தாக்குவோம்” – பஜ்ரங் தளம் எச்சரிக்கை

இதில் ”என்ன சர்ச்சை உள்ளது? விளக்குங்கள். பிரபலங்களும் தனி மனிதர்கள் தான் அவர்களுக்கென்றும் தனிப்பட்ட உரிமைகளும் தனிப்பட்ட நம்பிக்கைகளும் உள்ளன என்று பதிவிட்டுள்ளார்.

உத்தர பிரதேசம் : இந்து முஸ்லிம் திருமணத்தைப் பதிவு செய்ய விடாமல் தடுத்த பஜ்ரங் தளம்

இதில் மேஷ்ரா ராவ் எனும் நபர், “கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு எதிராக நீங்கள் என்ன செய்தீர்கள் ? அட்டைப் போல மக்களின் பணத்தை உரிஞ்சியவர் நீங்கள். உங்களைப் போன்ற பிரபலங்களுக்கு முன்னுரிமை வழங்கியிருக்க கூடாது” என்று கூறியுள்ளார்.

இதற்குப் பதிலளித்திருக்கும் யுவன் ஷங்கர் ராஜா, “இந்த உலகை ஒரு சிறந்த இடமாக மாற்றுவதில் உங்களுடைய பங்கு என்ன ? நான் என்னைப் பற்றிக் கூற வேண்டுமெனில், மக்களின் வாழ்க்கையில் எனது இசையின் வழியாக ஒரு சிறிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்