Aran Sei

விவசாயிகளின் போராட்டப் பாடல்களை நீக்கிய யூடியூப் – இந்திய அரசு கேட்டுக்கொண்டதால் நடவடிக்கை

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகப் பதிவேற்றிய இரண்டு பாடல்களை, யூடியூப் நிறுவனம் நீக்கியிருப்பதாகவும், இது போரட்டதிற்கான ஆதரவை அழிக்கும் முயற்சியெனப் விவசாயிகள் குற்றம்சாட்டியிருப்பதாகவும் தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

’ஃபஸ்லான் டி ஃபைஸ்லி கிசான் கருகா’ (அனைத்து விவசாய முடிவுகளும் விவசாயிகளால் மட்டுமே எடுக்கப்படும்) என, போராட்டத்திற்கு முக்கிய முழக்கத்தைக் கொடுத்த ஒரு பாடலும், ’ஆசி வதங்கே’ (நாங்கள் உங்களை உடைப்போம்) என்ற பாடலும் நீக்கப்பட்டிருப்பதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்தப் பாடல் மூன்று நாட்களுக்கு முன்பு யூடியூப் இந்தியாவிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலிபோர்னியாவில் உள்ள யூடியூப் தலைமையகத்தில் இருக்கும் சிலருடன் பேசினேன். இந்தப் பாடல், இந்திய அரசாங்கம் வகுத்துள்ள சில சட்டங்கள் மற்றும் கொள்கைகளை மீறுவதாகச் சட்டப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டதன் பெயரில், இந்திய அரசின் தலையீட்டால் நீக்கப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்” எனப் பாடலின் தயாரிப்பாளர் ஹர்ஜிஞ்தர் லடி, தி வயர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

மகனின் உடலைக் கேட்டு போராடிய தந்தை மீது வழக்கு – தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

”இது தொடர்பான அனைத்து விவரங்களும், மின்னஞ்சல்மூலம் 48 மணி நேரத்தில் தெரிவிக்கப்படும் என யூடியூப் தலைமையகம் தெரிவித்துள்ளது. இன்றைய நாளின் இறுதிக்குள் (பிப்ரவரி 8) பதில் வரும் எனக் காத்திருக்கேன்” என்று லடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தி வயர் இணையதளத்திடம் பேசிய, பாடகர் க்ரூவால், “எங்களுக்கு எதுவும் மாறவில்லை. எங்கள் பாடல் தடை செய்யப்பட்டாலும், மக்கள் அதைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள். டிராக்டர் மற்றும் தள்ளுவண்டிகளில் எங்கள் பாடல் வரிகள் எழுதப்பட்டிருக்கிறது. வணிகரீதியாகவும் எதுவும் மாறவில்லை. எங்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்துவிட்டது. இதைப் பற்றிப் பேசுவதற்கு பதிலாக, இந்தப் பாடலின் இரண்டாம் பாகத்தை வெளியிட இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரேவை விமர்சித்த பாஜக தொண்டர்: கருப்பு மை ஊற்றிய சிவசேனா தொண்டர்கள்

இந்தப் பாடலுக்கு எதிராக இந்திய அரசு தாக்கல் செய்ததாகக் கூறப்படும் சட்டப் புகாரின் விவரங்களையும், இதுகுறித்து எதன் அடிப்படையில் யூடியூப் நடவடிக்கை எடுத்தது என்பதையும் தி வயர் இணையதளம் அந்த நிறுவனத்திடம் கோரியுள்ளது.

அதற்குப் பதிலளித்துள்ள அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், “முடிந்தவரை அதிகாரிகளிடமிருந்து செல்லுபடியாகும் சட்ட கோரிக்கைகளுக்கு நாங்கள் இணங்குகிறோம், எங்கள் நீண்டகால கொள்கைக்கு இணங்க, அடையாளம் காணப்பட்ட வீடியோக்களை அகற்ற விரைவாகச் செயல்படுகிறோம்.” என தெரிவித்ததாக தி வயர் கூறியுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்