Aran Sei

மேற்கு வங்க பாஜக தலைவர் பதிவிட்ட காணொளி – சமூக வழிகாட்டுதல்களுக்கு எதிரானது என நீக்கிய யூடியூப் நிர்வாகம்

மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் யூடியூப்பில் வெளியிட்ட காணொளி, நிறுவனத்தின் சமூக வழிகாட்டுதலுக்கு எதிரானது எனக்கூறி அதை யூடியூப் நிர்வாகம் நீக்கியுள்ளது.

‘மிருகத்தனமான வன்முறை’ காட்சிகள் இருந்ததால் அதை நீக்க யூடியூப் நிர்வாகம் நிர்பந்திக்கப்பட்டது. ஆனால், மேற்கு வங்கத்தில் இது தான் உண்மையான நிலைமை என திலிப் கோஷ் தெரிவித்துள்ளார்.

‘இது நம்ம காலம்’ – ‘சார்பட்டா பரம்பரை’ பேசும் அரசியல் என்ன?

”இரண்டு மாத கால திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகள் என்ற தலைப்பில் யூடியூப் காணொளி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் திலிப் கோஷ் பகிர்ந்திருந்தார்.

காணொளியை உடனடியாக நீக்கிய யூடியூப் நிர்வாகம், ”சமூகம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வடிவமைக்கப்ப்பட்டுள்ள, எங்களின் வழிகாட்டுதலுக்கு எதிராக இருப்பதால் காணொளி நீக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.

‘ஜெய்பீம்’: வரலாறும் பின்னணியும் – ஆதவன் தீட்சண்யா

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கலவரத்தில், 30க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டதாக ஜூலை 21 ஆம் தேதி குற்றம் சாட்டியிருந்தார்.  இதற்குப் பதிலளித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை தொடர்பான ‘இட்டுக்கட்டப்பட்ட கதைகளை’ ஆதரிக்க போலியான வீடியோக்களை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினார்.

Source : The Hindu

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்