Aran Sei

மியான்மர் ராணுவத்திற்கு ஆதரவான யுடியூப் சேனல்கள் நீக்கம் –  ஃபேஸ்புக்கை தொடர்ந்து யுடியூப் நடவடிக்கை

மியான்மரில் ராணுவ ஆட்சியை வலுப்படுத்தும் வகையில் ராணுவம் நடத்தி வந்த ஐந்து யுடியூப் சேனல்களை அந்த நிறுவனம் நீக்கியுள்ளது.

யுடியூப் தளத்தின் சமுக வழிகாட்டுதல்களுக்கும், விதிகளுக்கும் பொருந்தாத வகையில் காணொளிகளை வெளியிட்டுள்ள சேனல்களை நீக்கியுள்ளதாக, யுடியூப்யின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மியன்மார் தேர்தல் – ரோஹிங்கியா முஸ்லீம்களின் உரிமைகள் மீட்கப்படுமா?

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் மக்கள்  போராட்டங்களில், புதன்கிழமை அன்று மட்டும் 38 பேர் இறந்த கொடுமையான சம்பவத்திற்கு பிறகு, யுடியூப் நிறுவனம் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மியான்மர் அரசு நடத்திய யுடியூப் சேனல், மியான்மர் வானொலியின் சேனல் மற்றும் ராணுவம் நடத்திய மூன்று சேனல்கள் என மொத்தம்  ஐந்து சேனல்கள் நீக்கபட்டுள்ளன.

” உலகமயம் நாட்டின் பொருளாதாரத்தை பாதித்து விட்டது ” – வெளியுறவுத்துறை அமைச்சர்

மியான்மர் ராணுவம் கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில், மோசடி செய்து ஆன் சாங் சுகி ஆட்சியைப் பிடித்தார் என்று குற்றச்சாட்டை முன்வைத்தது. இதையே ஊடகங்களில் காரணமாக பரப்பி, ஆட்சியையும் கைப்பற்றியது. ஆனால் மியான்மர் தேர்தல் ஆணையம் இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளது.

இதே வகையில் ஃபேஸ்புக் (facebook) நிறுவனமும், கடந்த பிப்ரவரி மாதமே மியான்மர் ராணுவம் தொடர்பான அனைத்து கணக்குகளையும் நீக்கியது.

ஆவணங்கள் சாலையில் கிடந்ததா? – டெல்லி கலவரம் வழக்கில் காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

மியான்மர் ராணுவ வீரர்கள், மக்களை அச்சுறுத்தும் வகையில், டிக்டாக்கை (tiktok) செயலியை பயன்படுத்துகின்றனர்.

மியான்மர் ராணுவம் தொடர்பான எல்லா கணக்குகளையும் ஃபேஸ்புக் நீக்கிய பிறகே, அவர்கள் மற்ற சமுக ஊடகங்ககளை பயன்படுத்த தொடங்கியிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Source: Reuters

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்