Aran Sei

எல்.ஐ.சி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனத்திற்கு காத்திருக்கும் இளைஞர்கள் – நடவடிக்கை எடுக்க சு.வெங்கடேசன் கோரிக்கை

எல்.ஐ.சி பணி நியமனத்திற்குகாக 400 இரண்டு ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். இதில் எல்.ஐ.சி சேர்மன் உடனடியாக தலையிட வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், ”எல்.ஐ.சியின் பணி நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து நடைமுறைகளும் முடிந்தும் 400 பேர் பணி நியமனத்திற்காக காத்திருக்கின்றனர். இதுகுறித்து கடிதங்கள் வரப் பெற்றுள்ளேன். என்னை நேரில் சந்தித்தும், அலை பேசியில் அழைத்துப் பேசினார்கள்.” என தெரிவித்துள்ளார்.

”வேலையில்லா இளைஞர்களின் வலி மிகவும் துயரமானது. இவர்களுக்கோ வேலை வாசல்படி வரை வந்து வசம் ஆகாமல் உள்ளது. இதில் அவர்களின் தவறு இல்லை.” என கூறியுள்ளார்.

”இதற்குச் சட்டரீதியான தடைகள் இருப்பதாகவும், தற்காலிக ஊழியர்கள் வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாகவு காரணம் சொல்லப்படுகிறது. ஆனால் அதில் இறுதி முடிவு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொருத்தே அமையப் போவதால் இந்த 400 பேர் பணி நியமனம் எந்த வகையிலும் தடயாய் இருக்க போவதில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, எல்.ஐ.சி சேர்மன் உடனடியாக தலையிட்டு இந்த பிரச்னையில் உள்ள சட்டரீதியான தடைகளை அகற்ற வேண்டும் என அவருக்குக் கடிதம் எழுதியிருப்பதாக கூறியுள்ளார்.

”நிறுவன உலகின் சிறந்த உதாரணமாகவும்,  20 ஆண்டு கால போட்டி உலகில் தனியார்களை எதிர் கொண்டு 70 விழுக்காடு சந்தைப் பங்கைத் தக்க வைத்துச் சாதனையும் புரிந்து வருகிற எல்.ஐ.சி. க்கு இந்த புதிய ரத்தம், புதிய ஊழியர் நியமனம் இன்னும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கிறேன்” என பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்