Aran Sei

அரசின் பொய் பிரச்சாரத்தை முறியடிப்போம் : விவசாயிகளுக்கு ஆதரவாகப் படித்த இளைஞர்கள்

credits : the hindu

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் குடும்பத்தைச் சேர்ந்த தொழிற்நுட்ப அறிவுக் கொண்ட இளைஞர்கள் 50 பேர் போராட்டத்தைப் பற்றி ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரபரப்படும் பொய் பிரச்சாரங்களையும், அவதூறுகளையும் முறியடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் என தி இந்து இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

விவசாயிகளின் போராட்டம் குறித்துச் சமூக வலைதளங்களில் முன் வைக்கப்படும் அனைத்து விதமான தவறான கண்ணோட்டங்களை மாற்றவும், சமூக வலைதளங்களில் போரட்டம் தொடர்பாக எழுப்பபடும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் இளைஞர்கள் முடிவெடுத்துள்ளனர்.

கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக்கொண்ட விவசாயிகள் – படங்களை ஏந்தி போராடும் தாய்மார்கள்

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் தங்கள் குடும்பங்களின் மூத்தவர்கள் சமூக வலைதளங்களில் நடக்கும் அவதூறு பிரச்சாரங்கள் குறித்து அறியாமல் இருக்கிறார்கள். எனவே, போராட்டத்தின் நோக்கத்தை சந்தேகப்படுபவர்களிடம், இது மத்திய அரசு கொண்டு வந்துள்ள சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடத்தப்படும் நியாயமான போராட்டம் என்பதை தெளிவுப்படுத்தவே தாங்கள் சமூக வலைதளங்கள் வழியாக உரையாட இருப்பதாக இளைஞர்கள் கூறியுள்ளனர்.

மக்கள் தினசரி பார்க்கும் மைய நீரோட்டத்தில் இருக்கும் ஊடகங்கள், விவசாயிகள் போராட்டத்தின் நியாயத்தை பிரதிபலிக்காமல் போராட்டத்தால் ஏற்பட்டிருக்கும் இடையூறுகளை காட்டுவதிலே முனைப்பாக இருக்கின்றனர் என இளைஞர்கள் கூறியதாக தி இந்து இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

போராட்டதிற்குப் பெருகும் ஆதரவு : டெல்லியை நோக்கி வாகன பேரணிக்குத் திட்டம் – மகாராஷ்டிரா விவசாயிகள்

எனவே “எங்கள் படிப்பையும், தொழிற்நுட்ப அறிவையும் கொண்டு போராடும் விவசாயிகளுக்கு எதிராக அரசாங்கம் பரப்பும் பொய் பிரச்சாரத்தை முறியடிப்போம். சிங்கு மற்றும் திக்ரி எல்லையில் இருக்கும் மக்கள் மட்டுமல்லாமல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் பெரிய அளவில் உதவி செய்கிறார்கள்” என விவசாயிகள் போராட்டத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஹரிந்தர் ஹாப்பி தி இந்துவிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், “எங்கள் போராட்டத்தைப் பற்றி விவசாயிகளுக்கும் மக்களுக்கும் சமூக ஊடகங்களில் தெளிவுப்படுத்த, ஒவ்வொரு நாளும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை சமூக ஊடகங்களில் ஒரு நேரடி அமர்வை (Live session) நடத்துகிறோம். அந்த அமர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு நாங்கள் பதிலளிக்கிறோம். சமூக ஊடகங்களில் எங்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது” என்று தி இந்துவிடம் கூறியுள்ளார்.

உரிமைக்காக உயிர்நீத்த விவசாயிகள் – மலர் தூவி அஞ்சலி செலுத்திய போரட்ட குழு

”விவசாய போராட்டங்கள் பற்றிய புரிதல் இல்லாத நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தை பாஜக தகவல் தொழிற்நுட்ப பிரிவு குறிவைக்கிறது, அவர்கள் ஊடகங்களாலும் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். விவசாயிகளின் போராட்டத்தின் சரியான நோக்கத்தை அவர்களிடம் முன் வைப்பது எங்கள் கடமை” எனவும் தெரிவித்துள்ளார்.

போராடும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தலைப்பாகை – உற்சாகப்படுத்தும் கிராம மக்கள்

சமூக வலைதளங்கள் மூலம் உரையாட பெரிய அமைப்பு இல்லையென்றாலும் இருப்பதை வைத்து, போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் என சித்தரிக்கும் வெறுப்பு பிரச்சாரத்தை முறியடிப்போம் என அவர் கூறியுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய தலைவர்கள் சமூக ஊடகங்களில் குறிவைக்கப்பட்டு அவதூறு செய்யப்படுவதாக விவசாயிகள் போராட்டத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஹரிந்தர் ஹாப்பி குற்றம் சாட்டியுள்ளார் என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்