Aran Sei

இந்தியாவின் முதல் இளம் மேயர் ஆர்யா – கவுன்சில் கூட்டத்தில் பதவி ஏற்றார்

Image Credits: The News Minute

21 வயதான ஆர்யா ராஜேந்திரன், திருவனந்தபுரம் மாநகராட்சி கவுன்சிலில், இன்று நடைபெற்ற மேயரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில், 100 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் 54 வாக்குகளை பெற்று வெற்றியடைந்துள்ளார். இவ்வளவு இளம் வயதில் ஒருவர் மேயராகப் பதவியேற்பது இதுவே முதல் முறையாகும்.

சபையில் 52 இடங்களைக் கொண்ட இடது ஜனநாயக முன்னணியின் கவுன்சிலர் ஆர்யாவுக்கு, மூன்று சுயேச்சை கவுன்சிலர்களின் ஆதரவும் கிடைத்தது. கச்சனி வார்டின் கவுன்சிலர் தனது பெயரையும், கையொப்பத்தையும் வாக்குச் சீட்டில் வைக்கத் தவறிவிட்டார். அதனால் அவரது வாக்கு செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

21 வயது இளம் பெண்ணுக்கு மேயர் பதவி – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாதனை

34 இடங்களையும், சுயேச்சை கவுன்சிலர் ஒருவரின் ஆதரவையும் பெற்ற எதிர்கட்சியான பாரதிய ஜனதா, மேயர் பதவிக்கு நகராட்சி வரி மேல்முறையீட்டு நிலைக்குழுவின் (chairperson of the Corporation’s tax appeal standing committee) முன்னாள் தலைவர் சிமி ஜோதிஷை நிறுத்தியது. 10 இடங்களைக் வென்ற ஐக்கிய ஜனநாயக முன்னணி, கவுன்சிலர் மேரி புஷ்பத்தை நிறுத்தியது. பாஜக வேட்பாளர் தனது கட்சியின் அனைத்து வாக்குகளையும் (35) பெற்றார். முல்லூர் வார்டு கவுன்சிலர் கொரோனா பாதிப்பு காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததால், ஐக்கிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் ஒன்பது வாக்குகளை மட்டுமே பெற்றார்.

இதைத்தொடர்ந்து, மாவட்ட மேயர் நவ்ஜோத் கோசா உறுதிமொழியை முன்மொழிய, ஆர்யா ராஜேந்திரன் அதனை வழிமொழிந்தார். ஆர்யா மேடை ஏறும்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாக பலத்த முழக்கங்களை எழுப்பினர். ஆட்சியர், ஆர்யாவுக்கு மேயர் கவுனை வழங்கிய போது, மாநகராட்சி அலுவலகத்திற்கு வெளியே பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

துணை மேயருக்கான தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. இடது ஜனநாயக முன்னணி, பட்டம் வார்டு கவுன்சிலர் பி.கே.ராஜுவை அதன் வேட்பாளராகக் களமிறக்க உள்ளது. பாஜக, பால்குலங்கரா வார்டு கவுன்சிலர் பி.அசோகுமாரை களமிறக்குகிறது. ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பாக, அக்குலம் வார்டு கவுன்சிலர் எஸ்.சுரேஷ்குமார் களமிறங்கவுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்