Aran Sei

சீக்கியர்களின் புனித நூலை அவமதித்ததாக குற்றச்சாட்டில் ஒருவர் படுகொலை – காவல்துறை விசாரணை

சீக்கிய சமூகத்தின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப்பை அவமதித்ததாக, டெல்லி சிங்கு எல்லையில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நிஹாங்ஸ்(சீக்கியர் போர்வீரர் குழு) குழுவைச் சேர்ந்தவர்கள் ஒருவர் உடலின் மீது நிற்பதைக் காட்டும் காணொளி வைரலாகியுள்ளது. ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தின் குண்டிலி பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்தும் பகுதியில், இன்று(அக்டோபர் 15) அதிகாலை நடந்த இக்கொலைக்கு அக்குழுவினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பட்டினி குறியீட்டு பட்டியல்: 101- வது இடத்தில் இந்தியா – மோடியே காரணமென குற்றஞ்சாட்டிய கபில்சிபில்

அக்காணொளியில், ஆயுதங்களை ஏந்திய சில நிஹாங்குகள், அந்த நபரின் பெயரையும் வசிப்பிடத்தையும் சொல்லும்படி கேட்கிறார்கள். அவரின் மணிக்கட்டு வெட்டப்பட்டு, ரத்தப்போக்குடன் காணப்படுகிறார்.

‘லக்கிம்பூர் வன்முறைக்கு ஒன்றிய அமைச்சர்தான் காரணம்’ – உத்தரபிரதேச பாஜக செயற்குழு உறுப்பினர் குற்றச்சாட்டு

குரு கிரந்த் சாஹிப்பை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அடித்துக்கொல்லப்பட்ட அந்த நபரை பின்னர், தலைகீழாக தொங்கவிட்டதாக ஹரியானா காவல்துறையினர் கூறியுள்ளனர்.

தொடக்கத்தில், சம்பவம் நடந்த பகுதிக்குள் நுழைய காவல்துறை அனுமதிக்கப்படவில்லை. பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் போராடும் விவசாயிகளிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்