Aran Sei

“நீங்கள் எங்கள் இதயத்தில் நிறைந்துள்ளீர் விவேக்” – அரசியல் ஆளுமைகள், திரைக்கலைஞர்கள் இரங்கல்

நடிகர் விவேக் ,நேற்று காலை சாலிகிராமத்தில் உள்ள அவரின் வீட்டில் இருந்தபோது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தார்  வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய சிகிச்சை நிபுணர்கள் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் ரத்த நாள அடைப்பைக் கண்டறியும் ஆஞ்சியோ சிகிச்சையும், இதயச் செயல்பாட்டை அதிகரிக்க, இயல்பு நிலைக்குக் கொண்டுவர எக்மோ சிகிச்சை அளிக்கப்பபட்டது. இந்நிலையில் இன்று காலை 5 மணி அளவில் மீண்டும் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டது, மருத்துவர்கள் தீவிரமாக முயன்றும், அவரைக் காப்பாற்ற முடியவி்ல்லை. அவரின் உயிர் பிரிந்தது.

சரிந்தது நகைச்சுவை சிகரம் – நடிகர் விவேக் காலமானார்

அவரின் மறைவுக்கு  தமிழக முதலைச்சர், அரசியல் கட்சி தலைவர்கள், திரை உலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவரின் மறைவு குறித்து தமிழமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “அரசியல் கட்சி  தமிழ்த் திரையுலகினராலும் திரைப்பட ரசிகர்களாலும் சின்னக் கலைவாணர் என்றழைக்கப்படுவபரும் தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற நடிகருமான விவேக் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்த நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன்” என்று கூறியுள்ளார்.

கொரோனா பரிசோதனை மற்றும் இறப்பு விவரங்களை வெளியிட  வேண்டும் – குஜராத் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், “’சின்னக் கலைவாணர்’ விவேக் அவர்களின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. தலைவர் கலைஞரிடம் தனி அன்பு கொண்டவர். சூழலியல் ஆர்வலர். ஆற்றல்மிகு நடிகர் விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாகப் பறித்ததேன்? அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.

”சின்னக்கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. ’சிவாஜி’ படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். விவேக்கின் ஆத்மா சாந்தி அடையட்டும்” என்று நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விவேக்கின் இறப்பு நம்பமுடியாத ஒன்று, அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும், திரைத்துறையில் பல ஆண்டுகள் மக்களை மகிழ்வித்து வந்த நீங்கள் என்றென்றும் எங்கள் நினைவுகளில் நிறைந்து இருப்பீர்கள் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.

”அவசரமாக சென்று விட்டாய் அன்பு விவேக். நல்சிந்தனைகளையும் மரங்களையும் நட்டுவைத்த உனக்கு நன்றி” என்று நடிகர் பிரகாஷ்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.

”எங்கள் விவேக் இல்லை என்ற உண்மையை ஏற்க என் இதயமும் ஆத்மாவும் நம்ப மறுக்கின்றது. ஒரு அசாதாரண கலைஞரையும், மனிதனையும் நாம் இழந்தோம்” என்று இசையமைப்பாளர் டி.இமான் தெரிவித்துள்ளார்.

இதை என்னால் நம்பமுடியவில்லை. உங்களோடு எம்.குமரன் படத்தில் பணிபுரிந்த நினைவுகள் மறக்க முடியாதவை . குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என்று இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினர் மீது வெறுப்பை தூண்டும் அமெரிக்க இணையதளம் – பாஜக ஆதரவாளர்களின் செயல்திட்டமென ஆய்வில் அம்பலம்

”நீங்கள் எங்கள் இதயத்தில் நிறைந்துள்ளீர் விவேக்” என்று திரைக்கலைஞர்  சிம்ரன் கூறியுள்ளார்.

அவரது குடும்பத்திற்கு எனது மனமார்ந்த இரங்கல் என நிவின் பாலி பதிவிட்டுள்ளார்.

நண்பர் நடிகர் விவேக்கின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. அவருடன் பல சிறந்த நினைவுகள் என் மனதில் ஒடிக் கொண்டிருக்கிறது. அவர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று திரைக்கலைஞர்  ராதிகா தெரிவித்துள்ளார்.

சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்ட நண்பர் விவேக் அவர்களின் பிரிவு … வார்த்தைகளில் சொல்ல முடியாதத் துயர் நடிகர், இயக்குநர் பார்த்திபன் இரங்கலில் கூறிப்பிட்டுள்ளார்.

கொரோனா – தப்லீகி ஜமாத்தை பழித்த பாஜகவும் ஊடகங்களும் மகா கும்பமேளா கூட்டம் பற்றி என்ன சொல்கின்றன?

நடிகர் விவேக்கின் மரணச் செய்தி அறிந்து மனமுடைந்து விட்டேன், அவர் விட்ட சென்ற நற்பணிகளை தொடர்ந்து செய்ய நான் முயற்சிக்கிறேன் என்று நடன இயக்குநர் ராகவா லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

மிகச் சிறந்த நகைச்சுவை நடிகரான விவேக்கிற்கு நான் தீவிர ரசிகன். தனது நகைச்சுவையில், சமூக கருத்துகளை மக்களிடம் சேர்த்தவர். அவர் எப்போதும் நம் இயதங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார் என்று இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்