Aran Sei

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி – லோக்ஆயுக்தா துணைத்தலைவராக நியமனம் – யோகி ஆதித்யநாத் பரிந்துரை

பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி சுரேந்திரா குமார் யாதவ் உத்தரப்பிரதேச லோக்ஆயுக்தா நீதிமன்றத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக  என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.

நீதிபதி சுரேந்திரா குமார் யாதவ் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய அன்றைய தினமே பணி ஓய்வு பெற்றார் . இந்நிலையில், தற்போது அவர் உத்தரப்பிரதேச லோக்ஆயுக்தா நீதிமன்றத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.

பாபர் மசூதி இடிப்பு – ‘வரலாற்றுப் பிழை சரி செய்யப்பட்டுள்ளது’ – அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பெருமிதம்

அயோத்தியில் இருந்த பாபர் மசூதி ராமர் பிறந்த இடம் என்ற பெயரில் கடந்த டிசம்பர் 6, 1992 ஆம் ஆண்டு இந்துத்துவ கர சேவர்களால் இடிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து நாடு முழுதும் ஏற்பட்ட கலவரத்தில் 2000 மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

‘ பாபர் மசூதி இடிப்பு சதித் திட்டம் இல்லை ‘ : தீர்ப்பு முழு விபரம்

மத்திய புலனாய்வு துறை இந்தச் சம்பவத்தை விசாரித்து வந்த நிலையில் நீதிபதி சுரேந்திரா குமார் யாதவ் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பாஜக தலைவர்களான எல்.கே.அத்வானி, எம்.எம்.ஜோஷி, உமாபாரதி ஆகியோரை விடுவித்து தீர்ப்பு வழங்கியிருந்தார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் சதித்திட்டம் – லிபர்ஹான் கமிஷன் கூறியது என்ன?

இந்நிலையில், உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் பரிந்துரையின் பேரில் உத்தரபிரதேச லோக்ஆயுக்தா நீதிமன்றத்தின் மூன்று துணைத் தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளதாக என்டிடிவிசெய்தி கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்