Aran Sei

‘அவர்கள் ஜின்னாவை வணங்குபவர்கள்; நாங்கள் இந்தியத் தாய்க்கு உயிரைக் கொடுப்போம்’ – சர்ச்சையான யோகி ஆதித்யநாத்தின் ட்விட்

த்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், பிரதான போட்டியாளரான சமாஜ்வாதி கட்சியைக் குறிவைத்து, அவர்கள் ஜின்னாவை வணங்குபவர்கள் என்றும் பாகிஸ்தானின் ஆதரவாளர்கள் என்றும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இன்று(ஜனவரி 28), தனது ட்விட்டர் பக்கத்தில், “அவர்கள் ஜின்னாவை வணங்குபவர்கள். நாங்கள் சர்தார் படேலை வணங்குபவர்கள். பாகிஸ்தான் அவர்களுக்குப் பிரியமானது. இந்தியா தாய்காக எங்கள் உயிரைத் தியாகம் செய்வோம்” என்று பாகிஸ்தான் நாட்டின் தந்தை என அழைக்கப்படும் முகமது அலி ஜின்னாவைக் குறிப்பிட்டு யோகி ஆதித்யநாத் ட்வீட் செய்துள்ளார்.

இந்த வார தொடக்கத்தில், ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், “முன்பு காஜியாபாத்தில் ஹஜ் இல்லங்கள் கட்டப்பட்டன. எங்கள் அரசாங்கம் கைலாஷ் மானசரோவர் பவனைக் கட்டியுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

உ.பி. தேர்தல் பரப்புரையில் வகுப்புவாத கலவரத்தைத் தூண்டும் சர்ச்சை பேச்சுகள் – பாஜக வேட்பாளர்மீது வழக்கு

நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 80 விழுக்காடு பேருக்கும், 20 விழுக்காடு பேருக்கும் இடையிலான தேர்தல் என்று கூறிய யோகி ஆதித்யநாத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்  தெரிவித்திருந்தன.

உத்தர பிரதேச மாநிலத்தில் 80 விழுக்காடு இந்துக்களும், 20 விழுக்காடு இஸ்லாமியர்களும் உள்ளனர் என்பதை குறிப்பிட்டு யோகி ஆதித்யநாத் இவ்வாறு பேசியிருந்தார்.

ஜனவரி 8 அன்று, தூர்தர்ஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசியுள்ள யோகி ஆதித்யநாத், “உத்தரபிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரைவத் தேர்தல் என்பது 80 விழுக்காட்டிற்கு, 20 விழுக்காட்டிற்கும் இடையிலான தேர்தல் ஆகும். 80 விழுக்காடு ஆதரவாளர்கள் ஒருபுறமும், 20 விழுக்காடு பேர் மறுபுறமும் இருக்கிறார்க்ள். 80 விழுக்காடு பேர் சாதகமான மனநிலையுடன் முன்னோக்கி செல்கிறார்கள். ஆனால், 20 விழுக்காடு பேர் எதிர்மனநிலையுடன், தொடர்ந்து எதிர்க்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.

‘உ.பி., தேர்தல் 80 விழுக்காட்டிற்கும் 20 விழுக்காட்டிற்கும் இடையிலானது’- ஆதித்யநாத்தின் பேச்சிற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

கடந்த ஆண்டு, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் தந்தையும் அம்மாநில முன்னாள் முதலமைச்சருமான முலாயம் சிங் யாதவை ‘அப்பாஜான்’ (உருது மொழியில் இஸ்லாமியர்கள் தங்கள் தந்தையை அழைக்கும் சொல்) என்று குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு, செப்டம்பர் 2ஆம் தேதி, உத்தர பிரதேச மாநிலம், குஷிநகரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய யோகி ஆதித்யநாத், “2017ஆம் ஆண்டுக்கு முன்னர் ரேஷன் பொருட்களைப் பெற்றிருக்கிறீர்களா? அந்தக் காலகட்டத்தில் அப்பாஜான் என்று அழைப்பவர்கள்தான் ரேஷன் பொருட்களை உண்டு செரித்தனர்” என்று தெரிவித்திருந்தார்.

யோகி ஆதித்யநாத்தின் சர்ச்சைக்குரிய கருத்துக்குப் பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, ட்விட்டரில் அப்பா ஜான் (Abba Jaan) எனும் ஹேஷ்டேக் வைரலானது.

இந்துக்களின் ரேஷன் பொருட்களை இஸ்லாமியர்கள் உண்டு செரித்து விட்டனர் : சர்ச்சையில் சிக்கிய யோகி ஆதித்யநாத்

கடந்த சில நாட்களாக, யோகி ஆதித்யநாத்தின் ட்விட்டர் பக்கம் வகுப்புவாத பிரிவினையை துண்டும் பதிவுகளால் நிரம்பி வழிகிறது என்றும் பாஜக மற்றும் யோகி ஆதித்யநாத் தரப்பு கருத்துக்கள் விவசாயிகளின் போராட்டங்கள் ஏற்படுத்திய எதிர்மறையான தாக்கத்தில் இருந்து மக்களின் கவனத்தை திருப்பும் பாஜகவின் முயற்சியாக இச்செயல்கள் பார்க்கப்படுகிறது என்றும் என்டிடிவி குறிப்பிட்டுள்ளது .

‘டங்கா’(கலவரம்), ‘அப்பாஜான்’, ‘மாஃபியா’ மற்றும் ‘பழையன்’(குடியேற்றம்) போன்ற வார்த்தைகள் அதிகம் இடம்பெற்றுள்ளன என்று என்டிடிவி கூறியுள்ளது.

உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி, மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.

Source: NDTV, PTI, New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்