Aran Sei

யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான ட்வீட் : எஃப்ஐஆரை ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம்

credits : the print

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்ததற்காகப் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

உத்தர பிரதசேத்தின் அரசு குறித்து யஷ்வந்த் சிங் எனும் நபர் தன் ட்விட்டர் பக்கத்தில், யோகி ஆதித்யநாத் மாநில அரசாங்கத்தை சட்ட ஒழுங்கு எதுவும் இல்லாத காட்டு ராஜ்ஜியம் போல மாற்றிவிட்டதாகப் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து மாநில அரசாங்கம், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 66-டி மற்றும் 500 கீழ் யஷ்வந்த் சிங் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது.

‘லவ் ஜிகாத் வழக்கு : நிரூபிக்க ஆதாரம் இல்லை’ – அலகாபாத் உயர் நீதிமன்றம்

இந்நிலையில், யஷ்வந்த் சிங் தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவருடைய வழக்கறிஞர் தர்மேந்திர சிங் அரசாங்கத்தை எதிர்த்து கருத்துக் கூறுவது அடிப்படை உரிமை என்றும், “ கருத்து வேறுபாடு குற்றம் ஆகாது” என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தேசியப் பாதுகாப்புச் சட்டம் – தனி மனித உரிமைக்கு எதிராகச் செயல்படுகிறது – அலகாபாத் உயர் நீதிமன்றம்

மாநில அரசுக்கு எதிராக தனது மனுதாரர் அதிருப்தியை வெளிப்படுத்துவதை நிறுத்துவதற்கும், அவரை அச்சுறுத்தும் நோக்கிலேயே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தர்மந்திர சிங் வாதாடியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பங்கஞ் நக்வி மற்றும் விவேக் அகர்வால் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ”மாநிலத்தில் இருக்கும் சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்து அதிருப்தி தெரிவிப்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பற்றி ஒரு குடிமகன் கண்காணிக்கும் உரிமை அரசியலமைப்பின் பிரிவு 19-ன் கீழ் பாதுகாக்கப்படுகிறது” என கூறியுள்ளனர்.

‘லவ் ஜிகாத்’ – சேர்ந்து வாழும் உரிமை அடிப்படையானது – அலகாபாத் உயர்நீதிமன்றம்

மாநில அரசாங்கத்தின் செயல்பாட்டிற்கு எதிராக கருத்து தெரிவிப்பது அல்லது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து கருத்துத் தெரிவிப்பதுக் குற்றமாகக் கருதப்படாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சிஏஏ எதிர்ப்பாளர்களின் தனியுரிமைக்கு ஆபத்து – அலகாபாத் உயர் நீதிமன்றம்

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 66-டி மற்றும் 500 கீழ் யஷ்வந்த் சிங் எந்த குற்றமும் செய்யவில்லை எனக் கூறிய நீதிபதிகள் இந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி உத்தரவிட்டுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்