Aran Sei

‘உ.பி., தேர்தல் 80 விழுக்காட்டிற்கும் 20 விழுக்காட்டிற்கும் இடையிலானது’- ஆதித்யநாத்தின் பேச்சிற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

டைபெறவுள்ள உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 80 விழுக்காடு பேருக்கும், 20 விழுக்காடு பேருக்கும் இடையிலான தேர்தல் என்று கூறிய அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்  தெரிவித்துள்ளன.

உத்தர பிரதேச மாநிலத்தில் 80 விழுக்காடு இந்துக்களும், 20 விழுக்காடு இஸ்லாமியர்களும் உள்ளனர் என்பதை குறிப்பிட்டு யோகி ஆதித்யநாத் இவ்வாறு பேசியுள்ளார்.

நேற்று(ஜனவரி 8), தூர்தர்ஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசியுள்ள யோகி ஆதித்யநாத், “உத்தரபிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரைவத் தேர்தல் என்பது 80 விழுக்காட்டிற்கு, 20 விழுக்காட்டிற்கும் இடையிலான தேர்தல் ஆகும். 80 விழுக்காடு ஆதரவாளர்கள் ஒருபுறமும், 20 விழுக்காடு பேர் மருபுறமும் இருக்கிறார்க்ள். 80 விழுக்காடு பேர் சாதகமான மனநிலையுடன் முன்னோக்கி செல்கிறார்கள். ஆனால், 20 விழுக்காடு பேர் எதிர்மனநிலையுடன், தொடர்ந்து எதிர்க்கிறார்கள். இதில் பாஜகதான் வெல்லும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்” என்று தெரிவி்த்துள்ளார்.

‘தாலிபன்கள் இந்தியாவை நோக்கி வந்தால் விமான தாக்குதல் செய்வோம்’ – யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்தின் இக்கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் செய்தித்தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி, “80 விழுக்காடு, 20 விழுக்காடு என்று ஆதித்யநாத் பேச்சு, வகுப்புவாத பிரச்சனையை உருவாக்கும் நோக்கோடு பேசப்பட்டது. இதை மக்கள் பொருட்படுத்த மாட்டார்கள். தேர்தலில் இந்துகள், இஸ்லாமியர்கள் எனும் பேச்சுக்கே இடமில்லை. ஜனநாயகத்தைக் காக்கவே மக்கள் வாக்களிப்பார்கள்” என்று கூறுயுள்ளார்.

மேலும், “இத்தேர்தலில் பாஜக வாங்கப்போகும் வாக்கு விழுக்காட்டையே யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டுள்ளார். அதாவது, பாஜக 20 விழுக்காடும், மற்ற கட்சிகள் 80 விழுக்காடும் வாக்குகள் வாங்குமென தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக பாஜக செய்த தவறுகளை மக்கள் நினைவில் வைத்துள்ளார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்துக்களின் ரேஷன் பொருட்களை இஸ்லாமியர்கள் உண்டு செரித்து விட்டனர் : சர்ச்சையில் சிக்கிய யோகி ஆதித்யநாத்

இது குறித்து பேசியுள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் பி.எல்.புனியா, “வகுப்புவாதம், பிரிவினைவாதத்தை வைத்துக்கொண்டுதான் பாஜக எப்போதும் அரசியல் செய்கிறது. மாறாக, மாநில வளர்ச்சிக்காக ஒன்றும் செய்யவி்ல்லை. ஆனால், 80 விழுக்காடு என்றும் 20 விழுக்காடு என்றும் பேசுகிறார்கள். இக்கருத்துகளின் வழியாக பாஜக தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. இந்து இஸ்லாமிய விவகாரத்தை பாஜக எழுப்புகிறது. ஆனால், அதற்கு பலன் கிடைக்காது” என்று கூறியுள்ளார்.

உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி, மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்