Aran Sei

‘தாலிபன்கள் இந்தியாவை நோக்கி வந்தால் விமான தாக்குதல் செய்வோம்’ – யோகி ஆதித்யநாத்

பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் தாலிபான்களால் அச்சுறுத்தப்படுவதாக உணர்கிறோம் என்றும் தாலிபன்கள் இந்தியாவை நோக்கி நகர்ந்தால் விமான தாக்குதல் நடத்த இந்தியா தயாராக உள்ளது என்றும் பாஜகவைச் சேர்ந்த உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

நேற்று(அக்டோபர் 30), உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நிகழ்ச்சி ஒன்றில் யோகி ஆதித்யநாத் கலந்துக்கொண்டு பேசியுள்ளார். அப்போது, “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், இன்று நம் நாடு சக்தி வாய்ந்ததாக உள்ளது. எந்த நாடும் இந்தியாவை நோக்கி கண்களை உயர்த்த துணியவில்லை” என்று கூறியுள்ளார்.

லக்கிம்பூர் வன்முறை: பதவி விலக கோரி ஒன்றிய அமைச்சரின் வாகனம் மீது காங்கிரஸ் மாணவர்கள் அணி முட்டை வீச்சு

மேலும், “இன்று, தாலிபான்களால் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் கலக்கமடைந்துள்ளன. ஆனால், இந்தியாவை நோக்கி தாலிபான்கள் நகர்ந்தால், அவர்கள் மீது விமானத் தாக்குதல்கள் நடத்த இந்தியா தயாராக உள்ளது என்று தாலிபான்களுக்கு தெரியும்” என்று யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டுள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்