உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்றிலிருந்து மாடுகளைப் பாதுகாக்க மாவட்டந்தோறும் உதவி மையங்களும், மாட்டுத்தொழுவங்களில் கொரோனா நடைமுறைகளைக் கட்டாயம் பின்பற்றவேண்டுமென அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், மாட்டு தொழுவங்களில் மாடுகளுக்கு ஆக்ஸிமீட்டர் மற்றும் உடல்வெப்ப சோதனை கருவி போன்ற அனைத்து மருத்துவ கருவிகளும் பொருத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும், மாட்டு தொழுவங்களை அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாகவும் அம்மாநில அரசின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
சித்திக் காப்பானுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் – யோகி ஆதித்யநாத்திற்கு பினரயி விஜயன் கடிதம்
அரசின் புள்ளிவிவரப்படி, தற்போது 5,268 பசுப்பாதுகாப்பு மையங்களில் 5,73,417 மாடுகள் பாதுகாக்கப்படுவதாகவும், மேலும், 4,64,311 மாடுகள் 4,529 தற்காலிக பசுப்பாதுகாப்பு மையங்களில் உள்ளதாகவும் உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
SOURCE; டைம்ஸ் ஆப் இந்தியா
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.