ராமரை கற்பனை கடவுள் என்று கூறியவர்கள் எல்லாம் இப்போது “ராமர் எல்லோருக்குமானவர்” என்கிறனர் என உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் எதிர்கட்சிகளை குறிப்பிட்டு பேசியுள்ளார்.
உத்திரபிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த மாற்றங்கள் குறித்து, கோரக்பூர் பகுதியில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“ராமர் என்று ஒருவர் இல்லவே இல்லை என, ராம பக்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த அனுமதி கொடுத்தார்கள். இப்போது ராம பக்தர்களின் பலத்தை உணர்ந்ததும், ராமர் எல்லோருக்குமானவர் என்று சொல்கின்றனர். இதை தான் நாங்கள் கரசேவையிலும் கூறினோம் – ராமர் எல்லோருக்குமானவர், ராம் ஜென்மபூமியையும் ( பிறந்த இடம்) கரசேவையையும் எதிர்க்காதீர்கள் என்று தான் கூறினோம்” என்று யோகி ஆதித்யனாத் கூறியுள்ளார்.
தன் உரையில், யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை என்றாலும், மறைமுகமாக சமஜ்வாதி கட்சிதலைவர் அகிலேஷ் யாதவை தான் அவர் தாக்கி பேசினார் என்கிறது தி இந்து.
சமீபத்தில் அயோத்தியாவில் நடந்த கூட்டமொன்றில், “ நாம் எல்லோருமே விஷ்ணுவின் (கடவுள்) அவதாரங்களை நம்புகிறோம். சமஜ்வாதியினருக்கு ராமர் சொந்தம் இல்லையா?” என அகிலேஷ் யாதவ் பேசியிருந்தார்.
டெல்லியில், விவசாயிகள் போராடிக் கொண்டிருப்பது “அயோத்தியாவில் ராமருக்கு கோவில் கட்டுவதை சகித்துக் கொள்ள முடியாமல் தான்” என்றும் யோகி ஆதித்தியநாத் கூறியுள்ளார்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.