Aran Sei

‘இஸ்லாமியர்களை நிம்மதியாகவும் மரியாதையுடனும் வாழவிடுங்கள்’ – எடியூரப்பா

credits : the indian express

ர்நாடகாவில் நிலவும் பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பாஜக கட்சியைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

ஹிஜாப் விவகாரம், திருவிழாக்களில் இஸ்லாமியர்கள் கடைப்போட எதிர்ப்பு கிளம்புவது, மசூதிகளில் ஒலிபெருக்கிகளை தடை செய்ய கோருவது, ஹலால் இறைச்சிகள் மீதான தாக்குதல் என கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து இந்துத்துவ அமைப்புகள் செய்யும் சர்ச்சைகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், இவை குறித்து நேற்று (ஏப்ரல் 11) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள எடியூரப்பா, “கர்நாடகாவில் நிலவும் பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அனைத்து மக்களும் சமம் என்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்றும் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். முதலமைச்சரை சந்திக்கும்போது, இதுபோன்ற பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து முன்னேற்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்த அறிவுறுத்துவேன்” என்று கூறியுள்ளார்.

இஸ்லாமியரின் கடையை தாக்கிய ஸ்ரீராம சேனை: ‘கன்னடர்களை பாஜக தலைகுனிய வைக்கிறது’ – சித்தராமையா

“கர்நாடகாவில் உள்ள அனைத்து சமூகமும் அமைதியுடனும், கண்ணியத்துடனும் வாழ வேண்டும். ஒரே தாய்க்கு பிறந்த சகோதரர்களான இந்துக்களும் இஸ்லாமியர்களும் இடையே ஒரு பந்தம் இருக்கிறது. அமைதியுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ விரும்பும் இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் சிலர் பிளவுப்படுத்த முயல்கிறார்கள். இஸ்லாமியர்களை நிம்மதியாகவும் மரியாதையுடனும் வாழவிடுங்கள்” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ற்சிக்கின்றனர்”

“இந்துகளும் இஸ்லாமியர்களும் இணைவதை உடைக்க முயற்சிகள் நடந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்குலைவதைத் தடுக்கவும், மக்கள் நிம்மதியாக வாழவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.

Source: NDTV

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை மிரட்டும் இந்துத்துவாவினர். பதிலளிக்கிறார் இயக்குநர் மு.களஞ்சியம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்