Aran Sei

‘ஆர்எஸ்எஸ்ஸை விமர்சிக்க காங்கிரஸுக்கு என்ன தகுதி இருக்கிறது – கர்நாடக முதல்வர் எடியூரப்பா

ர்நாடக சட்டசபையில், காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பை விமர்சித்துள்ளனர். அதற்குப் பதிலளித்த  கர்நாடக முதல்வர் எடியூரப்பா  “நாங்கள் ஆர்எஸ்எஸ் தான்,  பிரதமர் நரேந்திர மோடியும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்தான் என்பதால் வலது சாரி அமைப்பை விமர்சிக்க எதிர்க்கட்சிக்குத் தார்மீக அடிப்படையில் எந்த உரிமையும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (மார்ச் 4), கர்நாடக சட்டசபையில் சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே ககேரி,  ‘ஒரு நாடு, ஒரு தேர்தல்’ குறித்து சிறப்பு விவாதம் ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சில காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சட்டசபையில் போராட்டம் நடத்தியதோடு, இந்த விவாதம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல் திட்டம் என்றும் நாட்டில் உள்ள ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இந்துத்துவ குழுவின் சதி என்றும் விமர்சித்துள்ளனர்.

‘பாஜக, உயர்சாதி இந்துக்களுக்கான கட்சி’ எனக் கூறும் ஆய்வறிக்கை – எதிர்ப்பு தெரிவித்துள்ள சுப்ரமணியன் சுவாமி

மேலும், இந்த விவாதம் ஒருதலைப்பட்சமாகவும், தங்களின் அனுமதியின்றி நடத்த முடிவு செய்யப்பட்டதாகவும் இது சட்டசபையின் விதிகளுக்கு எதிரானது என்றும் காங்கிரஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இக்குற்றச்சட்டை மறுத்துப் பேசியுள்ள சபாநாயகர், விவாதத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களின் பட்டியலை எதிர்க்கட்சியான காங்கிரஸ் சமர்ப்பித்தனர். ஆனால், கடைசி நிமிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பின்வாங்குகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் சிலர், சட்டசபையின் மையப்பகுதிக்கு சென்று, இந்த விவாதமானது முழுக்க முழுக்க சர்வாதிகார, பாசிச மற்றும் ஹிட்லர் அணுகுமுறை என்று முழக்கமிட்டுள்ளனர்.

ராமர் கோவில் நன்கொடை : ‘ஹிட்லரின் நாஜிக்கள் செய்ததை ஆர்.எஸ்.எஸும் செய்தால் நாடு என்னாகும்?’ – எச்.டி.குமாரசாமி

இம்முழக்கங்கள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், பாஜகவை சேர்ந்த முதல்வர் எடியூரப்பா, முழக்கமிடும் காங்கிரஸ் உறுப்பினர்களை நோக்கி, “ஆம் நாங்கள் ஆர்எஸ்எஸ் தான். பிரதமர் நரேந்திர மோடி கூட ஆர்எஸ்எஸ்தான். ஆர்எஸ்எஸ்ஸை பற்றி பேச உங்களுக்குத் தார்மீக ரிதியாக உரிமை இருக்கிறதா? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “அற்பமான பிரச்சினைகளை எழுப்புவதோ பயனற்ற குற்றச்சாட்டுகளைக் கூறுவதோ எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வேலையல்ல. மாறாக, மாநில மக்களின் நலன்குறித்து பேசுங்கள்.” என்று எடியூரப்பா கூறியுள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்