Aran Sei

‘ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் செத்துக்கொண்டிருக்க தனது அதிகார வெறியை தம்பட்டம் அடிக்கிறார் பிரதமர்’ – சீதாராம் யெச்சூரி

credits : the newindian express

க்சிஜன் இல்லாது மக்கள் செத்துக்கொண்டிருக்க, தனது அதிகார வெறியை தம்பட்டம் அடித்துக்கொள்ள, பிரதமர் மக்களின் பணத்தை பறித்து இரையாக்கிக் கொள்வார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து இந்தியா கேட் வரையிலான, 3 கிலோ மீட்டர் நீளமான சென்ட்ரல் விஸ்டாவை மறுகட்டுமானம் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

மத்திய பொதுப்பணித்துறை முன்வைத்த இந்த வரைவுத் திட்டத்தில், மத்திய செயலக கட்டிடங்கள், மத்திய கருத்தரங்க மையம், பிரதமருக்கான இல்லம், சிறப்புப் பாதுகாப்புப் படை இல்லம், துணை குடியரசுத் தலைவருக்கான சிறப்பு வளாகம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மொத்த கட்டிட பரப்பளவு 17.21 லட்சம் சதுர மீட்டர், 4.58 லட்சம் சதுரமீட்டர் அளவிலான இப்போதைய கட்டுமானங்கள் இடிக்கப்படும்.

‘ரத்து செய்யப்படும் தொகுதி மேம்பாட்டு நிதி; தேவையில்லாமல் கட்டப்படும் புதிய நாடாளுமன்றம்’ – சுப்ரியா சுலே குற்றச்சாட்டு

இந்நிலையில், இன்று (மே 3), ஊடகவியலாளர் அனிஷா தத்தா, தனது டிவிட்டர் பக்கத்தில், “பிரதமரின் புதிய இல்லம் டிசம்பர் 22 ஆம் தேதி கட்டி முடிக்கப்பட உள்ளது. சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ், பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படைக்கான இல்லம், துணை குடியரசுத் தலைவருக்கான சிறப்பு வளாகம் (மே 22) போன்றவையும் இத்துடன் இடம்பெறும். மத்திய அரசு இதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தோராயமாக, இதற்கு ரூ.13,450 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த டிவீட்டை மறுபகிர்வு செய்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, “இது பெரும் கோரமானது. ஆக்சிஜனுக்கும் தடுப்பூசிக்கும் பணம் இல்லாமல், படுக்கைகளுக்காக மருத்துவமனைகளில் காத்துக்கிடந்து மாண்டு போகும் நம் சகோதர சகோதரிகளை, வாகன நிறுத்தத்திலேயே வைத்து எரியூட்டிக்கொண்டிருக்கிறார்கள். மறுபுறம், தனது அதிகார வெறியை தம்பட்டம் அடித்துக்கொள்ள, பிரதமர் மக்களின் பணத்தை பறித்து இரையாக்கிக் கொள்வார்.” என்று விமர்சித்துள்ளார்.

மேலும், இந்தக் குற்றச்செயலை நிறுத்துங்கள் என்று பிரதமர் மோடியை அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்