Aran Sei

இந்தியாவில் புலிகளின் வசிப்பிடங்கள் 35% பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வெளியே உள்ளது – டபிள்யு.டபிள்யு.எப் மற்றும் யூ.என்.இ.பி அறிக்கை

ந்தியாவில் உள்ள புலிகள் வசிப்பிடங்களில் 35% பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வெளியே உள்ளதாக டபிள்யு.டபிள்யு.எப் மற்றும் யூ.என்.இ.பி அறிக்கை வெளியிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், பெரும்பான்மையான பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் துண்டிக்கப்பட்ட பகுதிகளாக அதன் இடையில் மனித வசிப்பிடங்கள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

இதே போன்று, ஆப்பிரிக்கா சிங்கங்கள் வசிக்கக்கூடிய 40% பகுதிகளும், 70% ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய யானைகள் வசிக்க்கூடிய பகுதிகளில் பாதுக்காக்கப் படாத பகுதியில் உள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘என்ன சொல்ல? சச்சினை போல சதம் அடிக்கிறது பெட்ரோல் விலை’ – சத்தீஸ்கர் முதலமைச்சர் ஆதங்கம்

மேலும், இந்தியாவில், சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் தரவுப்படி, 2014 மற்றும் 2015 மற்றும் 2018 மற்றும் 2019 க்கு இடையில் 500 க்கும் மேற்பட்ட யானைகள் கொல்லப்பட்ட்டுள்ளதகவும், இது மனித-யானை மோதலுடன் தொடர்புடையது என்றும், இதே காலகட்டத்தில், யானைகளுடன் ஏற்பட்ட மோதலின் விளைவாக 2,361 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்