Aran Sei

கொரோனா காலத்தில் சூழலியல் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது – இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் ஆய்வில் தகவல்

டந்த ஐந்து வருடங்களில் சூழலியல் மீதான மக்களின் அக்கறையும் விழிப்புணர்வும் 16 விழுக்காடு உயர்ந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் புலனாய்வு பிரிவு மற்றும் இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தால் (WWF) நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக் காலத்தில் சூழலியல் மீதான அக்கறை இணையத்தில் பன்மடங்கு அதிகரித்திருப்பதாகவும் ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஊடகங்களின் டிஆர்பி வெறியால் குற்றவாளியாக்கப்பட்டேன் – சூழலியல் ஆர்வலர் தீஷா ரவி குற்றச்சாட்டு

“சூழலியல் விழிப்புணர்வு:  உலகளாவிய சூழலியல் விழிப்புணர்வையும் ஈடுபாட்டையும் ஆராய்தலும் மற்றும் இயற்கைக்கான திட்டமிடலும்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த நான்கு வருடங்களில் இயற்கை மற்றும் பல்லுயிர்தன்மை குறித்த இணைய செயல்பாடுகள் ட்விட்டரில் 65 விழுக்காடு அதிகரித்திருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

சூழலியல் செயல்பாட்டாளர் தீஷா ரவிக்கு ஜாமீன் – டெல்லி நீதிமன்றம் உத்தரவு

இந்த ஆய்வறிக்கையை வரும் மே 22 உலக பல்லுயிர்த்தன்மை தினத்தன்று வெளியிடவுள்ளதாகவும் அன்றைய தினம் உலக நாடுகள், இவைகுறித்து கருத்து தெரிவிக்கும் என்றும் தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வளரும் நாடுகள் தங்கள் பொருளாதார வளர்ச்சியைவிட சூழலியல் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதால், அது பொருளாதார வளர்ச்சி வேகத்தைப் பாதிப்பதாகவும் அந்த ஆய்வு முடிவுகள் கூறுவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தமிழக முதல்வரே சூழலியலை வலுப்படுத்துங்கள்’- சமூக செயற்பாட்டாளர்கள் ஸ்டாலினுக்கு கடிதம்

அதுமட்டுமல்லாது, உலக நாடுகளிலேயே லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சார்ந்த 96விழுக்காடு மக்கள் இயற்கை அழிப்பை மிகமுக்கிய உலக பிரச்னையாக பார்ப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், நீடித்த வளங்கள்குறித்த மக்களின் விழிப்புணர்வு 71விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும், இயற்கை அழிப்பினால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகள் கொரோனா தொற்று, காலநிலை மாற்றம் போன்ற எண்ணற்ற பிரச்சனைகளுக்குக் காரணமாக உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்