Aran Sei

‘அரசின் பிற்போக்கு தத்துவங்களை ஆதரிப்பவர்களை மட்டுமே நீதிபதியாக்க அரசு தேடுகிறது’ – நீதிபதிகள் நியமனம் குறித்து ப.சிதம்பரம் கண்டனம்

credits : the indian express

காலியாக உள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் தீர்ப்பாய்த்தின் தலைவர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு, அரசின் பிற்போக்கு தத்துவம் மற்றும் சித்தாந்ததிற்கு அனுதாபம் காட்டும் நபர்களை அரசு தேடுகிறது என ஒன்றிய அரசின் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “நாட்டில் உள்ள 1080 உயர்நீதிமன்ற பணியிடங்களில், 416 பணியிடங்கள் காலியாக உள்ளன. டிஆர்டி, என்சிஎல்ஏடி, டிடிஎஸ்ஏடி தீர்ப்பாயங்களின் தலைவர் பதவிகள் உள்ளிட்ட ஏராளமான தீர்ப்பாய்ங்களின் பதவிகள் காலியாக உள்ளன.” என தெரிவித்தார்.

ஏழு ஆண்டுகளாக பதவியில் இருக்கும் மோடியின் அரசால் ஏன் காலி பணியிடங்களை நிரப்ப முடியவில்லை அல்லது தயாராக இல்லை என அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த பதவிகளை நிரப்புவதற்கு தகுதியான நபர்களுக்கு நாட்டில் குறைவில்லை என அவர் வலியுறுத்தினார்.

”பணியிடங்கள் நிரப்பபடாததற்கு உண்மையான காரணம், அரசாங்கம் பிற்போக்கு தத்துவம் மற்றும் சித்தாந்தத்திற்கு அனுதாபம் காட்டும் நபர்களை தேடுகிறது” என ஒன்றிய அரசின் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம்  குற்றம்சாட்டியுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்