Aran Sei

செங்கல்பட்டு கொரோனா தடுப்புமருந்து தயாரிப்பு நிறுவனத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் – மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள, ஹில் பையோடெக் பொதுத்துறை நிறுவனத்தை கொரோனா தடுப்புமருந்து தயாரிக்க மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டுமெனக் கோரி, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை ஒப்படைக்க கோரும் தமிழக அரசு: நாடாளுமன்ற நிலைக்குழுவை கூட்ட ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தல்

மேலும் இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள பத்திரிகையாளர் செய்தியில்,கொரோனா நோய்த்தொற்றால் மக்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிவதாகவும், மறுபுறம் தடுப்பு மருந்து பற்றாக்குறையும் பெருகிவருவதாகவும், மேலும், தற்போது கோவிட் ஷீல்டு, கோவாக்ஸின்
தடுப்பு மருந்து தயாரிக்கும் தனியார் நிறுவனங்களால், இந்திய மொத்த மக்கள் தொகைக்கான தடுப்பு மருந்து தேவையை  பூர்த்திசெய்யமுடியாது என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், “செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த தடுப்பு மருந்து வளாகம் (HLL Biotech) கடந்த ஒன்பது ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. மேலும் இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் நிலையிலுள்ள பொது துறை நிறுவனங்களில் தடுப்பூசி தயாரிக்க ஒன்றிய அரசு முன்வரவேண்டும். அதன் அடிப்படையில் கோரிக்கைகளை முன்வைத்து இந்த பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் கூறியுள்ளது.

‘செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த முன்வர வேண்டும்’ – மே பதினேழு இயக்கம் கோரிக்கை

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் தாக்கல் செய்துள்ள மனுவில்,”செங்கல்பட்டிலுள்ள மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை (HLL Biotech) தடுப்பு மருந்து தயாரிக்க தமிழக அரசிடம் குத்தகை முறையில் ஒப்படைக்க வேண்டும், இந்தியாவிலுள்ள மொத்தமுள்ள 7 பொதுத்துறை மற்றும் 14 தனியார் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களை தடுப்பூசி தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும்”
என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

கடைசி தீர்வு ஊரடங்கு என்று அறிவுரை கூறும் பிரதமரே; முதல் தீர்வான தடுப்பூசியை முதலில் முறையாகச் செயல்படுத்துங்கள்- சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

அதுமட்டுமன்றி,” இந்தியா இன்று எதிர்கொண்டுள்ள பேரிடர் நெருக்கடியை சமாளிக்க பாரத் பையோடெக்  மற்றும் ஐ.சி.எம்.ஆரிடமுள்ள தடுப்பூசி தயாரிப்பதற்கான உரிமத்தை பொதுமைப்படுத்தி தடுப்பூசி தயாரிக்கும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவங்களுக்கு வழங்க வேண்டுமெனவும் அந்த பொது நல மனுவில் கோரியுள்ளதாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் சு. ஜிம்ராஜ் மில்டன் தெரிவித்துள்ளார்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்