Aran Sei

தொண்டு நிறுவனங்களை கண்காணிக்க தீவிரப்படுத்தப்பட்ட சட்டம் – கொரோனா தடுப்பிற்கு வெளிநாடுகள் உதவுவதில் சிக்கல்

ந்தியாவில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து உதவிகள் பெறுவதற்கு, வெளிநாட்டு பங்களிப்புகள் ஒழுங்குமறைச் சட்டத்தின் (எஃப்.சி.ஆர்.ஏ) கீழ் பதிவுசெய்யப்படுவதில் சிக்கல் நிலவுவதால், உதவிகளை பெறுவதில் குழப்பம் நீடிப்பதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த வெளிநாட்டு தடுப்பூசிகள் – அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு

கடந்த மே 3 ஆம் தேதி, கொரோனா தொற்று தடுப்பு பணிக்காக, மருத்துவ உபகரணங்களை ஜிஎஸ்டி விதிக்கப்படாமல் இறக்குமதி செய்யலாம் என்றும், அரசு அங்கீகரிக்கும் நிறுவனங்கள் அத்தகைய உதவிகளை பெற இயலும் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், இதுவரை எந்த ஒரு நிறுவனத்துக்கும் வெளிநாட்டு பங்களிப்புகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப்படவில்லை என்றுதி இந்து குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெளிநாடுகள் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய நீண்ட காலம் எடுத்துக்கொள்வதால், கொரோனா காலத்தில் வெளிநாடுகளில் இருந்து வழங்கப்படும் இந்த உதவிகளுக்கு, சட்டத்தில் இருந்து விலக்களிக்க வேண்டுமென வரி மற்றும் சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளதாகவும் தி இந்து செய்தி கூறுகிறது.

காஷ்மீரில் பலத்த பாதுகாப்பிற்கிடையில் “இயல்பு நிலை” – காதில் பூ சுற்றிக் கொண்டு புறப்பட்ட வெளிநாட்டு தூதர்கள்

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லியை சார்ந்த வழக்கறிஞர் கவுரவ் குப்தா, “எஃப்.சி.ஆர்.ஏ சட்டத்தின் கீழ் பதிவு இல்லாமல், எந்தவொரு நிறுவனமும் வெளிநாடுகளில் இருந்து பணமோ, மருந்துகளோ அல்லது உயிர்களைக் காப்பாற்றுவதற்கான உபகரணங்களையோ பெற முடியாது. மேலும், வெளிநாட்டு பங்களிப்பின் நோக்கமும் எஃப்.சி.ஆர்.ஏ சட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது, அறக்கட்டளையின் குறிப்பிட்ட நோக்கத்துடன் பொருந்தினால் மட்டுமே பதிவு செய்யப்படும்” என்றும் தி இந்து –விடம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் மீண்டும் வெளிநாட்டு பிரதிநிதிகள் – பிராந்திய கட்சிகளின் தலைவர்களை சந்திக்கும் திட்டம் இல்லை

வரி ஆலோசனை நிறுவனமான ஆர்எஸ்எம் இந்தியாவின் நிறுவனர் சுரேஷ் சூரனா “எஃப்.சி.ஆர்.ஏ சட்டத்தின் கீழ் இறக்குமதி செய்ய, நிறுவனங்களுக்கு எஃப்.சி.ஆர்.ஏ சட்டத்தில் விலக்களிக்க மத்திய அரசு எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. மேலும், வெளிநாடுகளில் இருந்து உதவிகளை பெறுவதற்கும் அல்லது இறக்குமதி செய்வதற்கும் எஃப்.சி.ஆர்.ஏ சட்டத்தில் பதிவு செய்வது மற்றும் சிக்கல்கள் குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்” என்று தி இந்து -விடம் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்