Aran Sei

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களிடம் டெல்டா மாறுபாடு கொரோனா வேகமாக பரவுகிறது – உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் தகவல்

டுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களிடம் டெல்டா மாறுபாடு கொரோனா அதிகமாக பரவுகிறது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேசியஸ் தெரிவித்தார்.

முதலில் இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட டெல்டா மாறுபாடு, தற்போது வரை குறைந்தபட்ச 85 நாடுகளில் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், இதுவரை கண்டறியப்பட்ட மாறுபாடுகளில் இதுவே அதிகமாக பரவும் தன்மை கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் இஸ்லாமியராக வாழ்வது குற்றமா? – ஹத்ராஸ் வழக்கும் அரசின் நடவடிக்கைகளும்

செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர், ”உலக அளவில் டெல்டா மாறுபாடுகுறித்து தற்போதைய நிறைய கவலைகள் உள்ளன என்பதை நான் அறிவேன். மேலும் உலக சுகாதார நிறுவனமும் அதைப்  பற்றிக் கவலை கொள்கிறது” என கூறியுள்ளார்.

சில நாடுகளில் பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளை எளிதாக்கும்போது, உலகெங்கிலும் பரவல் அதிகரிப்பதை காணமுடிகிறது என அவர் தெரிவித்தார்.

‘பாஜகவுக்கு எதிராகன தேசிய கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றாலும், கூட்டுத் தலைமையே இருக்கும்’ – சரத் பவார்

பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள், தங்களிடம் தேவைக்கு அதிகமாக இருக்கும் தடுப்பூசிகளை ஏழை நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளாதததை கண்டனம் தெரிவித்த டெட்ரோஸ், ஆப்பிரிக்க நாடுகளை சந்தித்து வரும் சிக்கல்கள்குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

புதிய கொரோனா மாறுபாடுகள் கண்டறியும்போது தொடர்ந்து அறிவிக்கப்படும் என குறிப்பிட்ட டெட்ரோஸ், ”வைரஸ்கள் அதைத்தான் செய்கின்றன, அவை பரிணமிக்கின்றன – ஆனால் பரிமாணத்தைத் தடுப்பதன் மூலம் மாறுபாடுகள் வெளிப்படுவதை நாம் தடுக்க முடியும்” என கூறினார்.

Source : The Telegraph

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்