Aran Sei

கனடாவில் சீக்கியர்களை மிரட்டும் இந்து குழு – நல்லிணக்கத்தை கெடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை என்று நகரத் தந்தை எச்சரிக்கை

ஸ்திரேலியாவில், போராடும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவான சீக்கியர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, கனடாவிலும் இந்துத்துவ வன்முறை குழு ஒன்று சீக்கியர்களுக்கு மதரீதியான மிரட்டலை விடுத்துள்ளது.

விவசாயிகள் போராட்டம் எதிரொலி – ஆஸ்திரேலியாவில் தாக்கப்படும் சீக்கியர்கள்

@canhinduadv என்ற அமைப்பு, “எங்கள் தொண்டர்கள் பிராம்ப்டனுக்கு வந்து சீக்கிய கோவில்களின் முன்பு அணி வகுப்போம். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அங்கு வந்து, தீமையை அம்பலப்படுத்துவோம். முன்னர் இதைச் செய்திருக்கிறோம், இனிமேலும் செய்வோம்” என்று ட்வீட் செய்திருந்தது. இதில் #khalistan #brampton #modi ஆகிய ஹேஷ்டேகுகளை சேர்த்திருந்தது.

ரான் பானர்ஜி என்பவரை இயக்குனராகக் கொண்டு செயல்படும் “கனடிய ஹிந்து பிரச்சாரம்” என்ற அமைப்பு பாரம்பரிய கனடிய மற்றும் ஹிந்து மரபுகளை ஆதரிப்பதாக கூறுகிறது.

இந்த ட்வீட்டுக்கு, பிற ட்விட்டர் பயனாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

“இது போன்ற வெறுப்புக்கு கனடாவில் இடமில்லை. பிராம்ப்டனில் மத சுதந்திரத்தை தீவிரமாக ஆதரிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். சகிப்புத்தன்மையின்மையை பிரச்சாரம் செய்வதற்காக எங்கள் நகரத்துக்கு வரும் நபர்கள் இங்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். எங்களது வழிபாட்டு தலங்களை அச்சுறுத்துவதும், மிரட்டுவதும் மிகவும் மோசமானது.” என்று பிராம்ப்டன் நகரத் தந்தை பேட்ரிக் பிரவுன் ட்வீட் செய்துள்ளார்.

அவர் தனது ட்வீட்டில் பிராம்படன் நகரத்தின் காவல்துறை தலைவரையும் டேக் செய்துள்ளார்.

இந்தப் பிரச்சினையை கவனத்தில் எடுத்துக் கொண்டதற்கு நன்றி தெரிவித்து, இந்திய விவசாயிகளை ஆதரிக்கும் ட்விட்டர் கணக்கான @Tractor2twitr ட்வீட் செய்துள்ளது.

“கனடாவில் எந்தவிதமான வெறுப்பு பிரச்சாரத்துக்கும் இடம் இல்லை. பல்வேறு சமுதாயங்களிடையே பிளவை உருவாக்க யாரும் அனுமதிக்கப்படக் கூடாது” என்றும் கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்